இது எல்லாம் போலியானது! ‘சிரியா’ பேரைச் சொல்லி ஏமாற்றும் கும்பல்

Posted By:
Subscribe to Boldsky

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் போர் துவங்கியது, அரசாங்கத்திற்கும் எதிர் அணிகளுக்கும் இடையில் பல அணிகளாக பிரிந்து நிற்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டிருக்கிறது, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சகணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உறவை இழந்தும்,வாழ்வாதாரத்தை இழந்தும் நிர்கதியாய் அடுத்த வேலை உணவுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சிரியாவில் நடக்கும் அக்கிரமங்கள், சிரியாவின் கொடுமை நாள்தோறும் சமூகவலைதளத்தில் பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது, சிரியா போரின் பேரைச் சொல்லி பகிரப்படும் அந்த படங்களில் இருப்பவை பல படங்கள் போலி என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த படம் ட்விட்டரில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. கிட்டத்தட்ட 55000 முறை ரீட்விட் செய்திருக்கிறார்கள். மேலே பகிரப்பட்ட இரண்டு படங்களும் போலியானது. இவை இரண்டுமே சிரியாவில் எடுக்கப்பட்டது அல்ல.

வலது பக்கம் இருக்கும் படம் மார்ச் 2017 அன்று எடுக்கப்பட்டது. குழந்தையுடன் ஒரு நபர் ஓடி வருகின்ற புகைப்படம் ஐஸ்ஐஸ் ஆதிக்கத்தின் கீழ் மோசுல் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படம். இடது பக்கம் குண்டு வெடிப்பது போல இருக்கும் படம் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாவின் கிழக்குப் பகுதியை தாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

Image Courtesy

#2

#2

அடுத்து, சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகவும் அதே சமயம் மிகுந்த அதிர்ச்சிய்டன் பகிரப்பட்ட படம் இது. குழந்தையொன்று ரத்தம் தொய்ந்த இன்னொரு கையை வைத்திருப்பது போல இருந்தது அந்தப்படம். போரில் உறுப்பு சிதைந்து மக்கள் கிடக்கிறார்கள், அங்கே விவரம் தெரியாமல் நிற்கும் அப்பாவிக்குழந்தை என இந்தப்படம் பகிரப்பட்டது.

உண்மையில் இந்தப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டது அல்ல, வெளிநாடுகளில் ஹாலோவன் கெட்டப் என்று சொல்லி மக்கள் தங்களை அகோரமாக சித்தரித்துக் கொண்டு ஓர் திருவிழா கொண்டாடுவார்கள். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இது அதுவும் 2013 ஆம் ஆண்டு.

Image Courtesy

#3

#3

பார்க்கும் போதே மிகுந்த பதற்றத்தை உண்டாக்கக்கூடிய படம் இது, அதை விட இது ஹாலிவுட் திரைப்பட காட்சி அல்ல, சிரியாவில் நடக்கும் சம்பவம் என்று டேக் வேறு.....

சிரியாவில் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, தன்னுடைய பெற்றோர் உட்பட சொந்த பந்தங்கள் எல்லாம் கொல்லப்பட்ட நிலையில் சிறுமி உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறாள் என்று பகிரப்பட்டது.

Image Courtesy

#4

#4

உண்மையில் இந்தக் காட்சியை எடிட்டிங்கில் சில பட்டி டிங்கரிங் வேலையை பார்த்திருக்கிறார்கள். இது 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு மியூசிக் ஆல்பத்தின் வீடியோ. லெபானானை சேர்ந்த ஹிபா டாவாஜி என்ற இசைக்கலைஞர் வெளியிட்ட அல் ரயிப் அல் அராபி என்ற பாடலில் இந்த காட்சி இடம்பெற்றிருக்கிறது.

#5

#5

சில நாட்களுக்கு முன்னர் மிக வேகமாக பரவிய புகைப்படங்களில் ஒன்று இது,நான்கு வயது சிறுவன் ஒருவன் பாலைவனம் வழியாக தனியாக பயணிக்கிறான் மீட்பு படையினர் மீட்டார்கள் என்றதோடு இல்லாமல் அவன் வைத்திருந்த பையில் இந்தந்த பொருட்கள் இருந்தது என்றும் பகிர மக்கள் உணர்சிப்பட்டு பகிர்ந்து தள்ளினார்கள்.

இந்தப் படத்தை ஐ.நாவைச் சேர்ந்தவர் ஒருவர் பகிர,பிரபல ஆங்கில பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளரும் பகிர மிக வேகமாக பரவியது. சிரியாவில் நடைப்பெற்ற போரில் மார்வன் என்ற இந்த நான்கு வயது சிறுவன் குடும்பத்தினரை இழந்தான் என்றும் சொல்லப்பட்டது.

Image Courtesy

#6

#6

இந்த படமும் போலியானது தான். அந்த குழந்தை ஏராளமான அகதிகள் கூட்டத்தினரோடு நடந்து வந்து கொண்டிருக்கிறான், அதுவும் அந்த கூட்டத்திலேயே தான் அவனது தாயும் சேர்ந்து தான் வந்திருக்கிறார். ஐ.நாவைச் சேர்ந்த ஒருவர் அகதிகளை சந்தித்து பேட்டியெடுத்திருக்கிறார், அந்த நேரம் மட்டும் சிறுவன் சிறுது நேரம் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறான், அதுவும் இது நடந்தது 2014 ஆம் ஆண்டு.

Image Courtesy

#7

#7

இது சாதரண மக்கள் மட்டுமல்ல பிரபல செய்தி நிறுவனங்கள் கூட போலியான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்கள் என்பது தான் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். சிரியாவில் போர் நடப்பது உண்மை, அங்கே கொத்து கொத்தாக மக்கள் இறக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனால் அதன் தாக்கத்தை எடுத்துச் சொல்கிறேன் என்று போலியான படங்களை பகிர்வதால் நம்பகத்தன்மை கெடும் அதோடு உண்மையான உணர்வை குலைத்திடும்.

Image Courtesy

#8

#8

போலியான புகைப்படம் என்றால் எப்படி கண்டுபிடுப்பது என்பதையும் சிலர் பகிர்ந்திருக்கிறார்கள். அதோடு இந்த படம் சிரியாவில் எடுக்கப்பட்டது, அலெப்போவில் எடுக்கப்பட்டது என்றால் உடனே கண்ணை மூடிக் கொண்டு பகிராமல் சற்று யோசித்திடுங்கள் என்று சொன்னதுடன் எப்படி கண்டுபிடிப்பது என வீடியோ பகிர்ந்திருக்கிறார்கள்

சமூக வலைதளத்தில் ஒன்றை பகிர்வதற்கு முன்னால்,பகிர்ந்திருக்கும் படங்களை நம்புவதற்கு முன்னால் இந்த படம் உண்மை தானா என்பதை தெரிந்து கொள்ள இதைச் செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Fake Images Shared In The Name Of Syria Civil War

Fake Images Shared In The Name Of Syria Civil War
Story first published: Saturday, March 10, 2018, 16:54 [IST]