Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஜிம்பாபேயில் வாழும் விசித்திர மனிதர்கள்!
ஜிம்பாபேயில் வாழும் விசித்திர மனிதர்கள் பற்றிய ஒரு தொகுப்பு
இந்த உலகில் பிறக்கிற எல்லா உயிர்களுக்கும் தங்களுக்கென்ற ஓர் குணாதியத்தை கொண்டிருப்பார்கள். பிறக்கும் போதே அவர்களில் நிறை குறை இருக்கும். வளரும் சூழலில் அதனை இன்னமும் மெருகேற்றிக் கொள்கிறார்கள்.
திறமைகள் தொடர்பான விஷயமென்றால் பெருமையாக சொல்லிக் கொள்வோம் இதே குறைபாடு என்றால்? ஜிம்பாவேயில் வடோமா என்ற ஓர் பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களை ஆஸ்ட்ரிச் பீப்பிள் என்றே எல்லாரும் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த மக்கள் எல்லாருக்குமே காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. இவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்கிறார்கள் இந்த மக்கள் எல்லாருக்குமே இரண்டு விரல்கள் கொண்ட கால் தான் இருக்கிறது.

மக்கள் :
வடோமா இன மக்கள் ஜிம்பாவேயின் மேற்கு பகுதியில் உருங்குவே மற்றும் சிப்போலியோ ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் வசிக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தான் ஜம்பேசி ஆறு ஓடுகிறது. பெரும்பாலும் இவர்கள் மக்கள் கூட்டத்தை விட்டு தள்ளியே இருக்கிறார்கள்.

செருப்பு :
இவர்களால் ஷூ மற்றும் செருப்பை பயன்படுத்த முடியாது. காரணம் காலில் வினோதமான வடிவில் இரண்டே இரண்டு விரல்கள் மட்டும் இருக்கின்றன. நடுவில் இருக்க வேண்டிய மூன்று விரல்களும் மிஸ்ஸிங்! இது ஒரு மரபணு குறைபாடு என்று சொல்லப்படுகிறது.
இப்படியான விரல்கள் இருப்பதால் இவர்களால் வேகமாக ஓட முடியாது. சிலருக்கு நடப்பதும் சிரமமாகவே இருக்கிறது.

மரம் ஏறுதல் :
ஆனால் இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள். இவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள்.

இரண்டு விரல் :
இந்த மக்களை இரண்டு விரல் மக்கள் என்றும் ஆஸ்ட்ரிச் மக்கள் என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால் ஆஸ்ட்ரிச் பறவையின் கால்கள் இப்படித்தான் இருக்குமாம். இவர்களுக்கு இருகக்கூடிய இரண்டு விரல்களும் உள்கூட்டியே வளைந்திருக்கிறது. இவர்களை யாரும் ஊனமுற்றவர்கள் என்று சொல்வதில்லை

தனிமை :
இந்த மக்கள் யாரும் பிறருடன்,பிற இன மக்களுடன் சேர்ந்து பழகுவதில்லை.தங்கள் மரபணுவுடன் பிற மரபணுக்களை சேரவிடுவதில்லை. இரட்டை விரலுடன் பிறப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். வேறு இனத்தில் சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்தால் இந்த இரட்டை விரல் மரபணு குலைந்துவிடும் என்று நினைப்பதும் ஒரு காரணம்.
அதோடு இயல்பாகவே இவர்களிடம் கூச்ச சுபாவம் அதிகம். பிறருடன் பேசுகையில் அவரின் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள் தலையை குனிந்து கொண்டு தான் பேசுவார்கள். இவர்களைப் போலவே கலாஹரி என்ற பாலைவனத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கும் இதே குறைபாடு இருக்கிறது.

பணவீக்கம் :
ஜிம்பாபேயில் பணவீக்கத்தினை கணக்கிட 2008 ஆம் ஆண்டிலிருந்து உலக வங்கி மறுத்துவிட்டிருக்கிறது. அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜிம்பாபே நாடு தங்களின் பண மதிப்பை கைவிட்டார்கள். இதற்கு காரணம் ஒரு அமெரிக்கன் டாலருக்கு 35 குவாட்டரில்லியன் ஜிம்பாபேயியன் டாலர் வழங்க வேண்டியிருந்ததாம்.
2013 ஆம் ஆண்டு ஜிம்பாபேயில் இருக்கக்கூடிய தேசிய வங்கியில் வெறும் 217 டாலர் மட்டுமே இருந்திருக்கிறது.

எயிட்ஸ் :
வறுமை சூழ்ந்த அந்த நாட்டில் நோய்களும் அதிகம். எயிட்ஸ் நோய் அதிகம் பரவுவதற்கு அவர்கள் சொல்கிற காரணம் நம்மை எல்லாம் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது அவர்களின் நம்பிக்கையின் படி வெளிறிய நிறம் கொண்ட பெண்களிடத்தில் உறவு கொண்டால் எயிட்ஸ் நோய் தாக்காது, அல்லது எயிட்ஸ் குறையும் என்று நம்பப்பட்டது. இதனாலேயே எயிட்ஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

வேலை வாய்ப்பு :
உலகிலேயே வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கக்கூடிய நாடு ஜிம்பாபே தான். சுமார் 95 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு இல்லையாம். வறுமையால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்படுவதில் முக்கிய இடத்தை இந்த வேலை வாய்ப்பு பெறுகிறது.



Click it and Unblock the Notifications
