For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிற வினோதமான போட்டி! ஜெயிச்சா ஹீரோ.... !!

எத்தியோபியாவில் வாழும் ஒரு பழங்குடியின மக்கள் கூட்டம் தங்களது பாரம்பரிய நம்பிக்கையாக ஆண்கள் குண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக அவர்கள் செய்கிற மெனக்கெடல்களை பாருங்கள்.

|

பழங்குடியின மக்கள் தங்களுக்குள்ளேயே பல வித்யாசமான கலாசாரங்களை வைத்திருப்பார்கள்.வசதிக்காக இம்முறை விட்டால் பரவாயில்லை என்றெல்லாம் விட்டுக் கொடுக்காமல் மிகத் தீவிரமாக கடைபிடிப்பார்கள்.

இன்னும் பார்த்தால் அவர்களது பழக்க வழக்கங்கள் ஒரு போதும் சாதரண மக்களிடையே ஒத்துப்போகாது, அவர்களுடைய வாழ்க்கை முறையே அப்படி வித்யாசமானதாக அமைந்திருக்கும். இங்கே அப்படிப்பட்ட ஓர் வித்யாசமான பழக்கத்தினை கொண்ட ஓர் பழங்குடியின மக்களைப் பற்றித் தான் பார்க்கப்போகிறீகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்கள் :

ஆண்கள் :

பெரும்பாலும் பெண்களைச் சுற்றி தான் அவர்களது சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். ஆண்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்திருப்பார்கள்.

மிகவும் அரிதாக பார்க்கப்படுகிற ஆண்களுக்கு நடத்தப்படுகிற ஓர் சம்பிரதாய சடங்கு முறை தான் இது. எத்தியோப்பியாவில் வாழ்கிற போடி என்ற பழங்குயின மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருக்கிறது.

அதாவது அவர்கள் கூட்டத்தில் ஆண்கள் குண்டாக இருக்க வேண்டும் என்பது.இதற்காக ரத்தத்தையும் பாலையும் கலந்து குடிப்பதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்கள்.

காலம் :

காலம் :

அதுவும் குண்டாவதற்கு காலத்தையும் நிர்ணயித்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அல்லது கேய்ல் கொண்டாட்டம் என்ற பெயரில் ஓர் திருவிழாவினை கொண்டாடுகிறார்கள்.

வளரும் பருவத்தில் இருக்கும் ஆண்கள் இந்த கொண்டாட்டம் வருவதற்குள் குண்டாக வேண்டும் என்பது விதியாம்.

போட்டி :

போட்டி :

அந்த திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலேயே குண்டான ஆண் யார் என்பது குறித்த போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெற்றால் பரிசு எல்லாம் கிடையாது. ஆனால் அதன் பிறகு அந்த மக்கள் கூட்டத்தின் ஹீரோவாக வலம் வரலாம்.

இந்த வழக்கம் தொடர்ந்து வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம் ஆனால் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளினால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது பாரம்பரியம் அழிந்து வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார்கள்.

எத்தியோபியா :

எத்தியோபியா :

இவர்கள் எத்தியோபியாவின் ஒமோ வேலி என்னும் இடத்திற்கு அருகில் கூட்டமாக வசிக்கிறார்கள். இவர்களில் ஒல்லியாக இருக்கும் ஆண்களை அங்கு மதிப்பதே இல்லையாம். அதனாலேயே பலரும் தான் குண்டாக வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

குறிப்பாக மாட்டின் கழுத்திலிருந்து எடுக்கப்படுகிற ரத்தம் மற்றும் பால் ஆகியவை பிரதான உணவாக இருக்கிறது.

ஆறு மாதம் :

ஆறு மாதம் :

இந்த குண்டாகும் நடைமுறையை காலங்காலமாக நீங்கள் தொடர்ந்து செய்ய முடியாது. ஆறே மாதத்தில் குண்டாகி காட்ட வேண்டும். சரியாக திருவிழா துவங்க ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண்களுக்கு இந்த டாஸ்க் வழங்கப்படுகிறது.

பின்னர் திருவிழாவின் போது இருப்பதிலேயே யார் குண்டு என்று போட்டி வைக்கப்படுகிறது. அதில் ஜெயிப்பவர்கள் தான் சேம்பியனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நான் ஹீரோ :

நான் ஹீரோ :

அவர்களுக்கு கூட்டத்தினரிடையே ஏகப்பட்ட சலுகைகள்,மரியாதை ஆகியவை கிடைப்பதால் பல குழந்தைகள் தாங்களும் இப்படி குண்டாக வேண்டும் என்பதை ஓர் லட்சியக் கனவாகவே கொண்டிருக்கிறார்கள்.

குண்டாக முயற்சி எடுக்கும் ஆறு மாதங்களும் அவர்கள் தங்களது வாழ்விடமான குடிசையில் தங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். அங்கே கிடைக்கிற உணவை உண்டு குண்டாக வேண்டும்.

குடும்பம் :

குடும்பம் :

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திலிருந்து யாரை இந்தப் போட்டிக்கு அனுப்பப்போகிறார்கள் என்பதை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் தங்கியிருக்கும் போட்டியாளர்களுக்கு குடும்பத்தினர் உணவு கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. ஆறே மாதத்தில் அதிகப்படியான குண்டாக வேண்டும் என்பதால் தேடிச் சாப்பிடுகிற உணவு மட்டுமல்லாது குடும்பத்தினர் கொண்டு வந்து கொடுக்கிற உணவும் தேவை என்கிறார்கள் போட்டியாளர்கள். இவர்களது உணவில் பிரதானமாக இடம் பிடித்திருப்பது மாட்டின் ரத்தமும் பாலும் தான்.

விதிமுறைகள் :

விதிமுறைகள் :

இந்த போட்டியில் திருமணமாகாத ஆண்கள் தான் பங்கேற்க முடியும், இந்த ஆறு மாத காலத்தில் எந்த காரணம் கொண்டும் குடிசைக்கு திரும்பக்கூடாது, இந்த காலத்தில் இணையிடம் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

மாடு புனிதம் :

மாடு புனிதம் :

இந்த போடி பழங்குடியின மக்களை பொருத்தவரையில் மாடு புனிதமானதாக பார்க்கப்படுகிறது அதனால் மாட்டினை கொல்ல மறுக்கிறார்கள்.

பின் எப்படி மாட்டு ரத்தம் என்றால்..... மாட்டின் உடலில் துளையிட்டு குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்படுகிறது. பின்னர் அந்த துளையை களிமண் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு அடைத்து விடுகிறார்கள்.

சவால் :

சவால் :

மாட்டின் ரத்தமும் பாலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டராவது குடிக்க வேண்டும். அப்போது தான் ஆறே மாதங்களில் எதிர்ப்பார்த்த அளவு குண்டாக முடியும். ஆனால் ஒரே நேரத்தில் அவ்வளவு பாலையும் குடிக்க முடியாது.

அந்தப் பகுதி மிகுந்த வெப்பமான பகுதி என்பதால் வழக்கத்தை விட மிக வேகமாக பால் திரிந்து விடுகிறது. அதையும் மனதில் வைத்து வேக வேகமாக குடிக்க வேண்டியதாய் இருக்கிறது. புதிதாக போட்டியில் பங்கேற்பவர்கள் இதை குடிக்க முடியாமல் வாந்தி எடுத்து போட்டியிலிருந்து பின் வாங்குவதும் தொடர்கிறது.

 களிமண் :

களிமண் :

போட்டி நடப்பதற்கு முன்பாக தங்கள் உடலை காண்பிக்க மறுத்து, உடல் முழுவதும் களிமண் மற்றும் இலைகளால் மூடிக் கொள்கிறார்கள். பின்னர் போட்டி நடக்கும் நாளன்று வெள்ளை நிற சுண்ணாம்பு மற்றும் மணலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்.

அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்களுக்கான அலங்கார பொருட்களையும் தயாரித்து அணிந்து வருகிறார்கள் போட்டியாளர்கள்.

பெண்கள் உதவி :

பெண்கள் உதவி :

எல்லாம் தயாரானதும். அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து போட்டி நடக்கும் இடத்திற்கு அதாவது அவர்கள் கூடுகிற அவர்களின் புனித மரம் இருக்கும் இடத்திற்கு நடந்தே வர வேண்டும்.

மரம் இருக்கும் இடம் மிகவும் செங்குத்தாக இருக்கும். அதிக எடை காரணமாக போட்டியாளர்களால் அவ்வளவு எளிதாக ஏற முடியாது. அவர்களை பெண்கள், பிற குடும்பத்தினர் ஆதரவாக உற்சாகமளித்து மரம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும். இதில் பெண்கள் தான் பெரும்பாலும் உதவி செய்கிறார்கள்.

சிலர் தண்ணீர், களைப்புத் தெரியாமல் இருக்க ஒரு வகை போதை திரவம் ஆகியவை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார்கள்.

கடைசி நொடி :

கடைசி நொடி :

சிலர் போட்டி ஆரம்பிக்கும் நொடி வரையிலும் குண்டாவதற்கான முயற்சிகளை தொடர்வேன் என்று சொல்லி இந்த பயணத்தின் போதும் பாலும், ரத்தமும் குடிக்கிறார்கள்.

பல மணி நேரங்கள் நடந்து மரத்தை வந்தடைந்ததும் போட்டி முடிந்து விடாது. இப்போது சுற்றிலும் மக்கள் குழுமியிருக்க மரத்தைச் சுற்றி நடக்க வேண்டும். இம்முறை யாரும் துணைக்கு வர மாட்டார்கள். போட்டியாளர்கள் மட்டுமே தனியாக நடக்க வேண்டும்.

இதிலிருந்து தான் வெற்றியாளர் தேந்தெடுக்கப்படுவார். இந்த சடங்கு முறையின் போது பெண்கள் தங்களுக்கான வருங்கால கணவரையும் தேர்ந்தெடுக்கிறார்கள். குண்டாக இருக்கும் ஆண்களைத் தான் இந்த இன பெண்களும் அதிகம் விரும்புவார்களாம்.

எதிர்காலம் :

எதிர்காலம் :

வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதும். விழா நிறைவுக்கு வந்துவிடுகிறது. தங்களின் தெய்வதிற்கு மாட்டை பலி கொடுக்கிறார்கள். அந்த கூட்டத்தின் தலைவன் அல்லது பெரியவர் ஒருவர் மாட்டின் வயிற்றைப் பார்த்து அந்த வருடத்திற்கான பலன்களை சொல்வதுடன் விழா முடிவுறும்.

பின் போட்டியாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி சகஜ நிலைக்கு திரும்புவதற்குள் அடுத்த போட்டியாளர்கள் தயாராகி விடுகிறார்கள்.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Ethiopian Tribe Belives Fattest Man were Beautiful

Ethiopian Tribe Belives Fattest Man were Beautiful
Story first published: Monday, May 14, 2018, 11:51 [IST]
Desktop Bottom Promotion