Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
நவகிரகத்தை வழிபடும்போது என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
நவகிரகங்களை வழிபடுகின்ற பொழுது என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி விளக்கமாக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
நவகிரகங்களை வழிபடும் போது எதெல்லாம் செய்யக் கூடாது என்று தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம். நவகிரகங்கள் என்பது ஒன்பது கோள்களை மையமாகக் கொண்டு வழிபடும் தெய்வங்கள் ஆகும்.

இதில் சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு, கேது, அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு போன்ற ஒன்பது தெய்வங்கள் உள்ளன.

சூரியன் என்ற நட்சத்திரம்
இதில் சூரியன் நட்சத்திர மாகவும் மற்ற கோள்கள் சூரிய குடும்பத்தின் கோள்களாகவும் உள்ளது. ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கான நல்ல நேரம் இந்த கோள்களின் நிலையைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது.

பிறந்த நேரம்
இந்த நேரத்தைக் கொண்டு தான் பிறந்த குழந்தைக்கு ஜோதிடம் கணக்கிடப்படுகிறது. இந்த ஜோதிட கணிப்பு படி அவர்களின் சந்தோஷம், ஆரோக்கியம், கஷ்டம் ஏன் ஆயுட் காலத்தை கூட கணித்து சொலல முடியும்.
இந்த பிறப்பு ஜோதிடம் ரெம்ப முக்கியமானதாக கருதப்படுகிறது. இது எதிர்கால வாழ்க்கையை சரியான திசையில் வழி நடத்த உதவுகிறது. திருமண பொருத்தம், தொழில், முகூர்த்தம், கிரகப்பிரவேசம், போன்ற நிறைய சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த ஜோதிட கணிப்பு உதவுகிறது.

ஜாதகம்
நம் சாதகம் வெறும் நடக்க இருக்கும் நல்லதை மட்டும் சொல்வதோடு நடகக விருக்கும் தீங்கையும் பறைசாற்றுகிறது. நவகோள்களின் இட அமைப்பை பொருத்து நம் சாதகம் நல்லது கெட்டதை கூறுகிறது. அவர்களின் அணுகூல பார்வையை பொருத்து நம் நன்மை தீமைகள் வேறுபடுகின்றன. கஷ்ட காலங்களில் நவகிரகங்களை வணங்கும் போது அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

வழிபாடு
இந்த நவகிரகங்களை வழிபடுவதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. நவகிரகங்கள் இருக்கும் திசையை நோக்கி வழிபட வேண்டும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். எனவே இப்படி நவகிரகங்களுக்கு எந்த மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம் எப்படி வழிபட கூடாது போன்ற தகவல்களை இங்கே காணலாம்.

பரிகாரங்கள் செய்யும் முறை
நல்ல முகூர்த்தம்
நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்யும் போது சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நேரம் மற்றும் நல்ல முகூர்த்தம் செய்து பார்ப்பது மிகவும் முக்கியம்.

அசைவ உணவு கூடாது
நிறைய பேர்கள் பரிகாரம் செய்யும் போது அவசர அவசரமாக செய்து முடித்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. ஒரு பக்தராக நாம் மனதார வழிபட வேண்டும். பரிகாரம் செய்யும் நாட்களில் எந்தவொரு அசைவ உணவுகளையும், எடுத்துக் கொள்ள கூடாது.

மனசு சுத்தமாக இருக்க வேண்டும்
பரிகாரம் செய்யும் போது உடலை மட்டுமல்ல மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். செக்ஸ் ரீதியான உணர்வுகள் அன்றைக்கு இருக்க கூடாது. சூரிய உதயத்திற்கு பிறகு செக்ஸ் ரீதியான எண்ணங்கள் தோன்றினால் அன்றைக்கு பரிகாரம் செய்வதை தவிர்த்திடுங்கள்.

நவகிரகங்களுக்கு படையுங்கள்
நவக்கிரகங்களுக்கு பரிகாரம் செய்யும் போது பூக்கள், புதிய ஆடை, விளக்கேற்றி வழிபடலாம். எள் எண்ணெய் அல்லது நெய் தீபம் இடலாம். நீங்கள் எந்த பொருட்களை வேண்டும் என்றாலும் படைத்து வழிபடலாம். உங்களின் உண்மையான பக்தியும் மனசார வழிபாடு மட்டும் போதும்.

பிரசாதம்
நவக்கிரகங்களுக்கு பிரசாதம் படைத்த பிறகு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வழங்கி மகிழுங்கள். இப்படி பூஜை செய்வது உங்கள் சாதகத்தில் உள்ள தோஷங்களை போக்குகிறது. இப்படி மற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கும் போது அவர்களும் பக்திவயப்படுவதால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும்.

பார்த்து பூஜை செய்தல்
இந்த மாதிரி நவகிரகங்களுக்கு பூஜை செய்யும் போது அவர்களை பார்த்து பூஜை செய்யக் கூடாது. உங்கள் தலையை கீழே குனிந்து வணங்கி கொண்டு பூஜை செய்ய வேண்டும். இது அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை குறிக்கிறது. இதனால் உங்களுக்கு நேர்மறை விளைவு உண்டாகும்.

முக்கியத்துவம்
மற்ற கடவுள்களை ஒப்பிடும் போது நவக்கிரகங்களுக்கு அதிகமான மதிப்பு கொடுப்பதில்லை. ஆனால் உண்மையில் நம் பாவங்களை அவர்கள் மன்னிப்பதால் அவர்கள் கடவுள் சிவனுக்கு நிகரானவர்கள்.

கோயில் வழிபாடு
நீங்கள் கோயிலுக்கு சென்றாலும் மற்ற தெய்வங்களை வணங்கிய பிறகு நவகிரகங்களை மறக்காமல் வழிபட வேண்டும். மற்ற தெய்வங்களை எல்லாம் வணங்கிய பிறகு நவகிரகங்களுக்கு பரிகார பூஜை மேற்கொள்ளலாம்.

சுற்றி வருதல்
நவக்கிரகங்களை சனிக்கிழமை மட்டும் தான் ஒன்பது முறை வலம் வர வேண்டும். காரணம் மற்ற தினங்களில் வலம் வரும் போது சனி பகவான் தன் சுமைகளை நம் மீது இறக்கி விடுவார். எனவே மற்ற நாட்களில் ஒரே ஒரு முறை வலம் வந்தால் போதுமானது.

ராகு மற்றும் கேதுவை எதிர்திசையில் சுற்றக் கூடாது.
சனி பகவானுக்கு எதிரே நின்று சாமி கும்பிட கூடாது.
நவக்கிரகங்களை சுற்றும் போது கைகளை மடித்து கொண்டு வலம் வரக் கூடாது.
நவக்கிரகங்களை சுற்றும் போது பேசிக் கொண்டு சுத்தாமல் மனசு ஒத்துமையோடு சுற்ற வேண்டும்.
நவகிரகங்களுக்கு குறுக்காக சுற்றுதல், சிலைகளை தொடுதல் போன்ற வேலைகளை செய்யக் கூடாது. கோயில் களில் நடக்கும் நவக்கிரக பூஜைகளில் கலந்து கொள்ளும் போது மனசு தூய்மையாக ஒருமித்து இருந்தால் மட்டும் கலந்து கொள்ளுங்கள்.

முன்னால் நிற்க கூடாது
நவகிரகங்களுக்கு முன் நிற்கக் கூடாது, மற்றவர்களின் விளக்கை எடுத்து விளக்கேற்றக் கூடாது. உங்களுக்கென்று புதிதாக விளக்கு வாங்கி பயன்படுத்துங்கள். தீப்பெட்டி முதற்கொண்டு உங்களுடையதாக கொண்டு சென்று பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications