Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
உங்க கையில கொசகொசன்னு நிறைய ரேகைகள் இருக்கா? அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
உங்கள் உள்ளங்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் காணப்பட்டால் அதற்கு அர்த்தம் இருக்கிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம். சரி வாங்க இந்த அதிகமான கோடுகள் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது
உங்கள் உள்ளங்கைகளில் நிறைய கோடுகள் தென்பட்டால் என்ன அர்த்தம் எனத் தெரியுமா
நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் அதே உங்கள் உள்ளங்கைகளில் ரேகையை தவிர நிறைய கோடுகள் காணப்பட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா.

உள்ளங்கை ரேகைகள்
உங்கள் உள்ளங்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் காணப்பட்டால் அதற்கு அர்த்தம் இருக்கிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம். சரி வாங்க இந்த அதிகமான கோடுகள் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

அதிக கோடுகள்
உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் தென்பட்டால் என்ன நடக்கும் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. முக்கியமான விதி ரேகைகளும் சந்திர, சூரிய, சுக்கிர மேடுகளும் அதனுடைய பலன்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம்.
உங்கள் உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் காணப்படுவது நீங்கள் நிறைய ஆடம்பரமான விஷயங்கள் குறித்து கனவு காண்பீர்கள் என்பதை குறிக்கிறது. இநத சிந்தனை உங்களுக்கு நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உங்களை ஒரு குழப்பவாதியாக வைத்திருக்கும்.

அதிக கிடைமட்ட கோடுகள்
உங்கள் உள்ளங்கைகளில் அதிக கிடைமட்ட கோடுகள் தென்பட்டால் நீங்கள் நிறைய நேரங்களில் விரக்தியை உணர்வீர்கள். உங்களுடைய உணர்வுகளை மற்றவர்கள் மற்றவர்கள் புரிந்து கொள்ளாதிருப்பதை நினைத்து விரக்தியில் இருப்பீர்கள். இதனால் உங்கள் மனது கூலாக இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதிக தடை கோடுகள்
உங்களுடைய உள்ளங்கை பார்ப்பதற்கு கடினமாகவும் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் பணம் தேடுவதில் அவசரமாக இருப்பீர்கள்.

அதிக தடை கோடுகள் மற்றும் மென்மையான உள்ளங்கை
உங்கள் உள்ளங்கை மிகவும் மென்மையாக அதே நேரத்தில் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் நீங்கள் எளிதில் உணர்ச்சி வசக்கூடிய நபராகவும், ஒரு பொறுப்பற்ற அசாதாரண மனிதராகவும் மற்றவர்களுக்கு தென்படுவீர்கள்.

பொதுக் கருத்து
பெண்களை பொருத்த வரை இந்த நிறைய கோடுகள் சீரற்ற சிந்தனையையும், குழப்பங்களையும் வழங்குகிறது. ஆண்களை பொருத்த வரை குடும்ப மற்றும் சுற்றுவட்டார அழுத்தத்தை கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications
