Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
அழியா புகழும், செல்வமும் பெற நமது வேதங்களில் கூறியுள்ள இந்த எளிய செயல்களை செய்யுங்கள்
நாம் விரும்பும்படி வாழ்வது மட்டுமல்ல வெற்றிகரமான வாழ்க்கை, நம்மை மற்றவர்கள் விரும்பும்படி வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்கை.
போராட்டங்களும், துன்பங்களும் இன்றி வாழ வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது?. நம் வாழ்க்கையில் அனைவரும் விரும்புபவது என்னவென்று பார்த்தால் அன்பு, பணம், ஆரோக்கியம் போன்றவைதான். ஆனால் இவற்றைப்போலவே அனைவரும் விரும்பும் ஒன்று உள்ளது, அதுதான் புகழ். நாம் அனைவரும் எந்த அளவு அன்பை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அதேயளவு மற்றவர்களின் கவனத்தையும் எதிர்பார்க்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உலகளவில் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த வட்டாரத்திற்குள்ளாவது நம்மை அனைவரும் புகழவேண்டும் என எதிர்பார்க்காதவர்கள் வெகுசிலரே. நாம் விரும்பும்படி வாழ்வது மட்டுமல்ல வெற்றிகரமான வாழ்க்கை, நம்மை மற்றவர்கள் விரும்பும்படி வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்கை. நீண்ட புகழும், குறைவிலா செல்வமும் பெற ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க்கை
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ பிறக்கவில்லை. நாம் பிறந்த தேதி, நேரம், நமது பாவபுண்ணியங்கள் போன்றவை நமது வாழ்க்கையை தீர்மானிக்கலாம். ஆனால் நமது கடின உழைப்பு மூலம் நமது வாழ்க்கையை நாம் வடிவமைத்துக் கொள்ளலாம். நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்பது நமது கைகளில்தான் உள்ளது.

வேதங்கள்
நமது வேதங்கள் நமக்கு செல்வம், புகழ், ஆரோக்கியம் போன்றவற்றை வழங்கக்கூடியவை என சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகளை மட்டும் செய்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சுடர்விளக்காய் இருக்கும் உங்கள் முயற்சிகளுக்கு இந்த வழிகள் தூண்டுகோலாய் இருக்கும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.

ஞாயிறு
ஞாயிறு எப்போதும் உங்களுக்கு விருப்பமான நாளாக இருக்கும். பெரும்பாலும் இந்த கிழமையில் நீங்கள் வெளியிடங்களில்தான் இருப்பீர்கள். அவ்வாறு வெளியே செல்லும்போது உங்கள் பாக்கெட்டில் ஒரு வெற்றிலையை வைத்துக்கொண்டு செல்லவும். அவ்வாறு செல்லும்போது நீங்கள் செய்யும் காரியங்கள் யாவும் நீங்கள் நினைத்த வண்ணமே நடக்க தொடங்கும். இதனை நாளடைவில் நீங்களே உணருவீர்கள்.

திங்கள்
வாரத்தின் முதல் நாளாக கருதப்படும் இந்நாளை வெற்றிகரமாகவும், நேர்மறையாகவும் தொடங்க வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு செல்லுங்கள். இதை செய்ய சிறந்த வழி உங்கள் வீட்டின் நுளைவாயில் அருகே ஒரு நீள்வடிவ கண்ணாடியை வைத்துவிடுங்கள்.

செவ்வாய்
இந்து மதத்தின் படி செவ்வாய் கிழமையானது ஆஞ்சநேயரை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே செவ்வாய் கிழமை காலை நேரத்தில் எதுவும் சாப்பிடும் முன் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அதேபோல ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். குறிப்பாக வெல்லம் சாப்பிடுவது நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.

புதன்
புதன் கிழமையன்று எந்த முக்கிய வேலைக்கு செல்லும் முன்னர் சிறிது புதினவையோ அல்லது கொத்தமல்லியையோ வாயில் போட்டு மெல்லவும். இந்து மத கோட்பாட்டின்படி இவ்வாறு செய்வது நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை வழங்குவதுடன் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும் உண்டாக்கும்.

வியாழன்
வியாழக்கிழமைகளில் நீங்கள் செய்யவேண்டியது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் சில சீராக விதைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் வரை அந்த சீரகத்தை துப்பவோ அல்லது முழுங்கவோ கூடாது. அவற்றை அப்படியே உங்கள் வாயில் வைத்திருங்கள்.

வெள்ளி
எந்தவொரு முக்கிய காரியமோ அல்லது நல்ல காரியமா செய்யும் முன் தயிர் சாப்பிடுவது பழங்காலம் முதலே இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு சடங்காகும். எனவே வெள்ளிக்கிழமையன்று வெளியே செல்லும் முன் தவறாமல் ஒரு ஸ்பூன் தயிரை சாப்பிடவும். குறிப்பாக அதில் சர்கரையோ அல்லது உப்போ சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சனி
இஞ்சி மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆனால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும் என்று உங்களுக்கு தெரியுமா? உண்மைதான் சனிக்கிழமையன்று இஞ்சி சாப்பிடுவது நீங்கள் எதிர்பார்த்திராத அளவு புகழை உங்களுக்கு சேர்க்கும். எனவே சனிக்கிழமை வெளியே செல்லுமுன் நெய்யில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டுவிட்டு செல்லவும்.



Click it and Unblock the Notifications