512 கடத்தல், 446 கற்பழிப்பு. உலகின் கொடூர சீரியல் ரேப்பிஸ்ட் - குற்றப்பத்திரிகை #001

Posted By:
Subscribe to Boldsky

குற்றம் செய்திடாத மனிதர் யாருமில்லை. ஆனால், அது சுய நினைவுடன் அறிந்தே செய்யப்பட்டதா அல்ல தன்னை தானே அறியாமல் செய்யப்பட்டதா என்பதே கேள்வி. தவறென்று அறிந்தும் மீண்டும், மீண்டும் செய்வதற்கு பெயர் குற்றம் அல்ல, பாவச்செயல்.

திருட்டு, கொள்ளை, கடத்தல், போதை பொருள் விற்பனை, கற்பழிப்பு, விபச்சாரம், கொலை என குற்றங்களில் பல வகைகள், பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஒருவரது வாழ்வில் பொருள் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றங்களை விட, உணர்வு ரீதியாக ஏற்படுத்தும் குற்றங்களே பெரிய தண்டனை பெற வேண்டியவை.

Crime Story: Ariel Castro, Who is Brutal Serial Rapist

Cover Image: vignette.wikia

இந்த பிரிவில் சேரும் பெருங்குற்றங்கள் கொலையும், கற்பழிப்பும். இவை இரண்டுமே ஒரு நபரையோ அல்ல அவரை சார்ந்துள்ள குடும்பத்தையோ வெகுவாக பாதிக்கும் குற்றங்கள்.

அவ்வகையில் 512 கடத்தல், 446 கொடூரமான கற்பழிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட உலகின் கொடூர சீரியல் ரேபிஸ்ட் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ பற்றி தான் இன்றைய குற்றப்பத்திரிகையில் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளீவ்லாந்தின் மான்ஸ்டர்!

கிளீவ்லாந்தின் மான்ஸ்டர்!

The Monster of Cleveland (கிளீவ்லாந்தின் மான்ஸ்டர்) என்று பிரபலமாக அறியப்பட்ட குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ. புவேர்ட்டோ ரிக்கோவின் (Puerto Rico)ஒரு கிராமத்தில் பிறந்தவன் காஸ்ட்ரோ. பெட்ரோ காஸ்ட்ரோ என்ற பெரிய நில உரிமையாளருக்கும், லிலியன் எனும் அவரது துணைவியாருக்கும் 1960ல் மூன்றாவது மகனாக பிறந்தவன் காஸ்ட்ரோ.

பெட்ரோ காஸ்ட்ரோ

பெட்ரோ காஸ்ட்ரோ

1962ல் பெட்ரோ காஸ்ட்ரோ தன்னை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்து வேறு பெண்ணுடனும் வாழ்ந்து வருவதை அறிகிறார் லிலியன். மேலும், அந்த இரண்டாம் குடும்பத்திற்கு நான்கு பிள்ளைகள் இருப்பதும் அறியவருகிறது.

முதல் மனைவிக்கு தனது சுய ரூபம் அறிந்த பிறகு காஸ்ட்ரோவின் தந்தை லிலியனை விடுத்து இரண்டாம் குடும்பத்துடன் முற்றிலுமாக வாழ சென்று விடுகிறார்.

ஏமாற்றம்!

ஏமாற்றம்!

கணவன் பிரிந்து சென்ற பிறகு தனது நான்கு பிள்ளைகளை புவேர்ட்டோ ரிக்கோவில் தனது பெற்றோர் அரவணைப்பில் விட்டு பென்சில்வேனியாவுக்கு வேலைக்கு செல்கிறார் லிலியன். அப்போது காஸ்ட்ரோவுக்கு ஐந்து வயது தான் இருக்கும். அந்த காலத்தில் தன்னை ஒருவன் வன்கொடுமை செய்வதை அறியாமலே, யாரிடமும் புகார் கூறாமல் வாழ்ந்து வந்தான் காஸ்ட்ரோ.

செக்ஸ்!

செக்ஸ்!

புஞ்சோ என்ற புனைப்பெயர் கொண்ட அந்த ஒன்பது வயது சிறுவன், காஸ்ட்ரோவின் ஆசன வாய் வழியாக விரலை நுழைத்து தொடர்ந்து கொடுமை செய்து வந்தான். இதுகுறித்து காஸ்ட்ரோ யாரிடமும் புகார் கூறவில்லை. ஆனால், இதன் காரணாமாக காஸ்ட்ரோவுக்கு செக்ஸ் மீதான ஆசை தான் அதிகரித்தது.

அமெரிக்கா!

அமெரிக்கா!

1966ல் காஸ்ட்ரோவின் தாய் லிலியன் வீடு திரும்புகிறார். அப்போது லிலியன் என்பவர் தன்னை கொடுமைப்படுத்தும் நபராகவே காஸ்ட்ரோவின் பார்வையில் காணப்பட்டார். அந்த சமயத்தில் தான் காஸ்ட்ரோவின் குடும்பம் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து சென்றது. 1970ல் கிளீவ்லாந்து என்ற பகுதியில் வசிக்க துவங்கினார்கள் காஸ்ட்ரோ மற்றும் அவனது குடும்பத்தார்.

முதல் டேட்டிங்!

முதல் டேட்டிங்!

தனது உறவினரான செசி எனும் மாமா மூலமாக (ரெகார்ட் ஷாப் வைத்திருந்தவர் ) காஸ்ட்ரோவுக்கு கிட்டார் ஒன்று பரிசாக வந்தது. தனது வாழ்நாளில் காஸ்ட்ரோ பல வேலைகள் செய்திருந்தான். அதில் ஒன்று இசை வாசிப்பது. 1980ல் தான் முதல் முறையாக நில்டா எனும் 17வயது பக்கத்து வீட்டு பெண்ணுடன் டேட்டிங் செய்தான் காஸ்ட்ரோ. நில்டா எனும் இளம்பெண்ணும் புவேர்ட்டோ ரிக்கோவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் தான் நில்டா காஸ்ட்ரோவிடம் தனது கற்பை இழந்தார்.

1981...

1981...

நில்டாவுடன் உறவில் ஈடுபட்ட பிறகு 1981ல் இருந்து தான் காஸ்ட்ரோவின் குணாதிசயங்களில் பல மாற்றங்கள் காணப்பட்டன. யாரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், கொடுமை செய்ய வேண்டும் என்று இவனது எண்ணங்கள் மாற துவங்கின. நில்டாவை தன்னுடன் தனது பராமரிப்பில் வைத்திருந்தான் காஸ்ட்ரோ.

ஆதிக்கம்!

ஆதிக்கம்!

அவள் எங்கேயும் வெளியே போக முடியாது, வீட்டில் மட்டுமே இருக்க முடியும். வெளியே போக வேண்டும் என்றாலும் கூட, எந்த கடைக்கு போகவேண்டும் என்பதில் இருந்து எப்போது திரும்ப வேண்டும் என்பது வரை காஸ்ட்ரோவின் பல கட்டளைகளுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தாள் நில்டா.

துன்புறுத்தல்!

துன்புறுத்தல்!

சில சமயங்களில் காஸ்ட்ரோ நில்டாவின் எலும்புகள் முறியும் அளவிற்கு அடித்து கொடுமைப் படுத்தியுள்ளான். பலமுறை காஸ்ட்ரோவின் தாக்குதலால் நில்டா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஆனால், இது குறித்து நில்டா போலீஸில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

மாற்றம்!

மாற்றம்!

ஆனால், 1989ம் ஆண்டு நில்டாவின் சகோதரன் முன்னர் காஸ்ட்ரோ அவளை தாக்க, அவன் காஸ்ட்ரோ மீது புகார் அளித்து கைது செய்ய வைத்தான். 1992ல் தனது நான்கு குழந்தைகளுடன் நில்டா 2207 சீமோர் டிரைவ் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றாள். ஆனால், அப்போது நில்டாவுக்கு தெரியாது தன் கணவன் ஒரு செக்ஸ் வெறியனாக மாறுவான் என்று.

காஸ்ட்ரோ வருகை...

காஸ்ட்ரோ வருகை...

சிறையில் இருந்து வீடு திரும்பிய பிறகு காஸ்ட்ரோ தனது வீட்டின் கதவு, ஜன்னல்கள், அடித்தள அறைகள் என அனைத்தையும் பூட்டி வைத்தான். மேலும், அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறியமால் இருக்க உள்ளே நடக்கும் விஷயங்கள் குறித்த சப்தம் வெளியே போகாதபடி சவுண்ட்ப்ரூப் செய்து வைத்தான். அதன் பிறகு அவனை தவிர அடித்தளம் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த இடத்தில் தான் நில்டாவை அடைத்து வைத்திருந்தான். அவள் ஃபோன் பயன்படுத்தவும் தடை விதித்தான்.

கர்ப்பம்!

கர்ப்பம்!

இந்த சமயத்தில் தான் நில்டா ஐந்தாவது முறையாக கர்ப்பம் ஆனாள்.ஏனோ, காஸ்ட்ரோவுக்கு நான்கு பிள்ளைகளுக்கு மேல் விருப்பம் இல்லை. ஆகவே, அவளது கருவை கலைக்க முயற்சி செய்தான். அவளது வயிற்றில் அடித்து, உதைத்து கருச்சிதைவு ஏற்படுத்தினான்.

ஒரு நாள் தனது மகன் முன்னே கொடூரமாக நில்டாவை தாக்கினான் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோவின் மகன் தனது தாயை காப்பற்றுங்கள் என்று கத்திக்கொண்டே தெருவில் ஓடினான்.

மீண்டும் கைது!

மீண்டும் கைது!

இம்முறை மகனை பிடிக்க விரட்டி சென்ற போது மக்கள் கண்டு, போலீஸ் புகார் பெற்று காஸ்ட்ரோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். காஸ்ட்ரோவின் தாக்குதலால் நில்டாவின் உடலில் பலத்த தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. பிறகு 25,000 டாலர்கள் கட்டி பெயிலில் வெளிவந்தான் காஸ்ட்ரோ.

பி.டி.எஸ்.எம்

பி.டி.எஸ்.எம்

பிறகு மனைவியிடன் பல பிரச்சனை, அக்கம்பக்கத்து வீட்டாரை மிரட்டி திருடியது என காஸ்ட்ரோவின் போக்கு மிகவும் திசை மாறியது இத்துடன் பி.டி.எஸ்.எம் எனப்படும் கொடுமை செய்து செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறையில் பெரும் ஈர்ப்பு கொண்டான் காஸ்ட்ரோ.

குற்றங்கள்!

குற்றங்கள்!

பி.டி.எஸ்.எம் மீதான் ஈர்ப்புக்கு பிறகே தான் பல இளம் பெண்களை கற்பழிக்க துவங்கினான்.

காஸ்ட்ரோ செய்த குற்றங்கள் ...,

கடத்தல் : 512

கற்பழிப்பு: 446

குழந்தைளை அபாயத்திற்கு ஆட்படுத்தியது: 3

மோசமான கொலை : 2, மற்றம் பல குற்ற வழக்குகள் பதிவாகின.

இதற்கெல்லாம் சேர்த்து காஸ்ட்ரோவுக்கு 2013ம் ஆண்டு ஆயிரம் ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

முடிவு!

முடிவு!

1981ல் துவங்கி மே 6, 2013 வரை பல எண்ணற்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தான் காஸ்ட்ரோ. செப்டம்பர் 13, 2013ம் நாள் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து போனான் காஸ்ட்ரோ. பிக்கவே கரக்ஷன் இன்ஸ்டிடியூஷன் (Pickaway Correction Institution), பிக்கவே கவுண்டி, ஓஹியோ, என்ற இடத்தில் இறந்தான் காஸ்ட்ரோ.

ஐந்து வயதில், ஒரு ஒன்பது வயது சிறுவனால்... செக்ஸ் குறித்த ஆசைக்கு உட்படுத்தப்பட்ட காஸ்ட்ரோ... எண்ணற்ற பதின்வயது பெண்களை தனது இச்சை வெறிக்கு பலியாக்கி, தானும் தற்கொலை செய்து இறந்து போனான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crime Story: Ariel Castro, Who is Brutal Serial Rapist

Here We Gonna See About Ariel Castro, a.k.a. The Monster of Cleveland, Who was a Puerto Rican Serial Rapist who Abducted, Tortured, and Raped Three Young Women in his Cleveland, Ohio, home for nearly a decade.