பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள ஜப்பான் கையாண்ட கொடுமைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அந்தச் சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும். பருவமெய்தி ஒரு சில மாதங்கள் ஆகியிருந்தது. அம்மா தோட்டத்தில் நின்றிருக்க அப்பா சூப் குடித்துக் கொண்டே அன்றைய தினசரிகளை படித்துக் கொண்டிருந்தார். தம்பியும் இந்தச் சிறுமியும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த செல்ஃபில் தங்களுக்கான இடத்தை பங்கு பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென ஜீப் சத்தம், வீட்டிலிருந்த அனைவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அப்பா நெஞ்சில் கைவைக்க அம்மா பதற்றத்துடன் ஓடி வந்தார். கதவுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு எட்டிபார்த்தார்.

Comfort Women in Japan Military

Image Courtesy

யூனிஃபார்ம் அணிந்திருக்கிறார்கள்... ஐயோ ஆர்மிக்காரங்க தான்.அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரிலிருந்து இறங்கிய நான்கைந்து பேர் பொதபொதவென்று இறங்கி எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள். அப்பா அம்மாவை இழுத்து அவர் என்ன வேணும் என்று கேட்பது போல முன்னே செல்ல ஒரே தள்ளு அப்பா கீழே விழுந்தார். என்னை தரதரவென்று இழுத்து வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனி அவ்வளவு தான் :

இனி அவ்வளவு தான் :

அம்மாவும் அப்பாவும் என்னை இழுத்துச் செல்வதை பார்க்க முடியாமல் சுவற்றுப்பக்கம் திரும்பிக் கொண்டு அழுகிறார்கள். தம்பி என் காளை பிடித்துக் கொண்டே சிறிது தூரம் ஊர்ந்து வர ஒரு ஆர்மிக்காரன் தம்பியை எட்டி உதைத்தான். இரண்டடி தள்ளிச் சென்று விழுந்தவன் எழுந்தரிக்கவில்லை.

அம்மா.... தம்பி.... அப்பா என்ற உச்சரித்துக் கொண்டே பின்னால் பின்னால் எட்டி திரும்பி பார்த்துக் கொண்டிருக்க என்னை காருக்குள் அள்ளிப்போட்டார்கள். உள்ளே போட்ட வேகத்தில் கார் கிளம்பியது. எங்கே செல்கிறேன், திரும்ப இங்கே வருவேனா? அம்மா அப்பாவை பார்ப்பேனா என்றெல்லாம் தெரியாது.

Image Courtesy

ஜப்பானிய படை வீரர்களுக்கு :

ஜப்பானிய படை வீரர்களுக்கு :

இப்படி எங்கெங்கோவிருந்து கடத்தி கொண்டுவரப்படும் இளம்பெண்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள். அதன் பெயர் கம்ஃபர்ட் ஸ்டேஷன் இங்கே ஜப்பானிய படைவீரர்களுக்கு இந்த பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.

1932-1945 ஆகிய காலகட்டத்தில் மட்டுமே ஜப்பானிய படை இப்படியான வலுக்கட்டயாமான ப்ராத்தலை நடத்தியது. இவர்களுக்கு கம்ஃபர்ட் வுமன் என்றும் அழைக்கப்பட்டார்கள். இப்படி பத்தாயிரம் பெண்கள் வரை படை வீரர்களின் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ள வைக்கப்பட்டார்கள்.

Image Courtesy

துவக்கம் :

துவக்கம் :

1937 ஆம் ஆண்டு ஜப்பான் படை சீனாவிற்கு நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது. சீனாவில் இருக்கக்கூடிய முக்கிய நகரமான நான்கிங்கை கைப்பற்ற போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான சீன மக்கள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

அப்போது அந்த ஊரில் வாழ்ந்த பெரும்பாலான பெண்கள் கிட்டத்தட்ட இருபதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் பெண்கள் வரை ஜப்பான் படை வீரர்களினால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து இந்த போரின் பெயரே ரேப் ஆஃப் நான்கிங் என்று அழைக்கப்பட்டது.

Image Courtesy

அதிர்ந்த அதிகாரி :

அதிர்ந்த அதிகாரி :

இந்த சம்பவம் உலகையே அதிரச் செய்தது. அப்போது ஜப்பானை ஆட்சி செய்த மன்னரான ஹிரோஹிட்டோ இந்த சம்பவம் ஜப்பான் மீது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதினார். இதனால், எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த கம்ஃபார்ட் ஸ்டேஷன்.

இங்கே பல நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட, அடிமைகளாக கொண்டுவரப்பட்ட பெண்கள் இருப்பார்கள். இவர்களிடம் ஜப்பான் படை வீரர்கள் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று வீரர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த ஸ்டேஷன் இருப்பதினால் இனி போரிடப்போகும் இடங்களில் எதுவும் செய்யக்கூடாது அப்படி செய்தால் உங்களுக்கு பாலியல் நோய் தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

Image Courtesy

கடத்தல் :

கடத்தல் :

இந்த கம்ஃபர்ட் ஸ்டேஷனில் பெண்களை அடைக்க மூர்க்கத்தனமாக பெண்கள் கடத்தப்பட்டார்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த போது,பணியாற்றும் இடத்திலிருந்து , என பல இடங்களிலிருந்தும் கடத்தப்பட்டார்கள்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பெண்கள் கடத்தப்பட்டார்கள். பெரும்பாலான பெண்கள் கொரியா மற்றும் சீனாவிலிருந்தே கடத்தப்பட்டிருந்தார்கள்.

Image Courtesy

ஸ்டேஷனில் :

ஸ்டேஷனில் :

அப்படி கடத்தி கொண்டுவரப்பட்ட பெண்கள் அனைவரும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார்கள் அதோடு மிருகத்தனமான பாலியல் தொந்தரவுகளையும் சந்தித்தார்கள் ஒவ்வொருவரின் கதையும் கேட்பவர்களை உருகச் செய்தது.

அவர்கள் சந்தித்த பிரச்சனையினை விவரிக்க... இப்படியும் கொடுமைகள் நடக்குமா என்று அதிர்ந்தார்கள்.

Image Courtesy

 என்ன நடக்கும் ? :

என்ன நடக்கும் ? :

ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து படை வீரர்களுக்கு பாலியல் இச்சையை தீர்க்க வேண்டும், ஒவ்வொரு வீரரும் அரை மணி நேரம் வரை எங்களை புணர அனுமதிக்கப்படுவார்கள். எதாவது போர் நெருங்கப்போகிறது என்று சொன்னால் எங்களுக்கு சிக்கல் ஆரம்பித்துவிடும். ஒரு பெண் முப்பது முதல் நாற்பது வீரர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பார்கள்.

இப்போது ஒவ்வொரு வீரருக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே எங்களை புணர அனுமதி. சரியாக அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மெத்தையில் படுத்து உடைகளை களைத்து தயாராக இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்களைக் கடந்தால் திரையை விலக்கி ஒர் அதிகாரி பார்ப்பார்.... நேரம் முடிந்து விட்டது என்று எச்சரிக்கை செய்வார். அதற்கும் அந்த வீரர் எழவில்லை என்றால் அதிகாரியே அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றாவர். அவன் வெளியே விழுந்த சில நொடிகளில் இன்னொருவன் என் மேல் விழுந்து கிடப்பான்.

Image Courtesy

நேரமிருக்காது :

நேரமிருக்காது :

எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ அல்லது எங்களது பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்யவோ துளியும் நேரமிருக்காது, பலரது படுக்கையில் ரத்தம் தோய்ந்த நிலையில் தான் இருக்கும். சில நேரங்களில் நாங்கள் மயங்கிக்கிடப்போம் அப்போதும் கூட அந்த வீரர்களின் பாலியல் இச்சை தீராமல் எங்களை புணரவே செய்வார்கள்.

இதனால் அதீதமான உடல் வலி, நோய்த்தொற்று ஆகியவற்றால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தோம்.

Image Courtesy

மாதவிடாய் :

மாதவிடாய் :

இந்தக் கொடுமைகளுடன் மாதவிடாய் கொடுமையும் சேர்ந்து விட்டால் அவ்வளவு தான். எங்களை கண்காணிப்பவர்கள் மாதவிடாய் நேரத்தில் புணர வேண்டாம் என்றே சொல்வார்கள் ஆனால் அதிக வீரர்கள் இருக்கிறார்கள், போர் நெருங்கிவிட்டது என்று எதேதோ சாக்கு சொல்லி அந்த நேரத்திலும் எங்களை வீரர்களுடன் இருக்கச் சொல்வார்கள்.

மாதவிடாய் நேரத்தில் காட்டன் நூலால் செய்யப்பட்ட சிறிய பந்தினை மருத்துவரிடமிருந்து வாங்கி வருவோம். சில நேரங்களில் இங்கேயே எங்களுக்கு கொடுப்பார்கள், அதனைக் கொண்டு பிறப்புறுப்பு வழியாக கர்ப்பையின் நுழைவில் அடைத்துக் கொள்வோம். இதனால் ரத்தம் வெளிவராது. போதுமான அளவு காட்டன் பால் இல்லாத போது எங்களது உடையையே கிழித்து அப்படி வைத்துக் கொள்வோம்.

Image Courtesy

காண்டம் :

காண்டம் :

எங்களுடன் உறவு கொள்ளும் போது கண்டிப்பாக காண்டம் அணிந்திருக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறத்தப்படும். ஆனால் வீரர்கள் எங்களுடன் காண்டம் இல்லாமலே தான் உறவு கொள்ள விரும்புவார்கள், இதனை எங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்.

சில கம்ஃபர்ட் ஸ்டேஷன்களில் காண்டம் இருப்பு இருக்காது, அனுப்பி வைக்கப்பட்டதை விரைவிலேயே தீர்த்திருப்பார்கள், அது போன்ற நேரத்தில் ஒரே காண்டத்தை பல முறை பயன்படுத்துவார்கள். பயன்படுத்திய காண்டத்தை சுத்தம் செய்து பயன்படுத்தும் வகையில் கொடுக்க வேண்டியது எங்களுடைய வேலை.

Image Courtesy

 கர்ப்பம் :

கர்ப்பம் :

சில நேரங்களில் இங்கிருக்கும் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்கள். கர்ப்பமாக இருந்தாலும் இங்கிருக்கும் வீரர்களுக்கு பாலியல் இச்சை தீர்த்தே ஆக வேண்டும், சில நேரங்களில் ஆரம்ப கட்டம் என்றால் கருவை கலைத்துவிடுவார்கள் இல்லையென்றால் குழந்தையை பிரசவித்ததும் இந்த ஸ்டேஷனிலிருந்து வெளியில் கொண்டு போய் விடுவார்கள்.

அந்த குழந்தை குறித்த எந்த தகவலும் எங்களுக்கு கொடுக்கப்படாது, இந்த ஸ்டேஷனில் இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியில்லை.

Image Courtesy

முடிவு :

முடிவு :

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகும் இந்த பெண்கள் விடுவிக்கப்படவில்லை. ஜப்பான் வீரர்களை தொடர்ந்து அமெரிக்க வீரர்களுக்கும் சேர்த்து படைக்கப்பட்டார்கள் இந்த பெண்கள்.

1993 ஆம் ஆண்டு ஐ நாவின் உலகாளவிய பெண்கள் மீதான மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது இரண்டாம் உலகப்போர் முடிந்த சில காலங்களிலேயே கம்ஃபர் வுமனாக இந்த ஸ்டேஷன்களில் இருந்த பெண்களில் பலர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Image Courtesy

அழிப்பு :

அழிப்பு :

இரண்டாம் உலகப்போர் அழிவுக்கு வந்தவுடனேயே ஜப்பான் ராணுவமும் அரசாங்கமும் பல்வேறு டாக்குமெண்ட்களை அழித்துவிட்டிருந்தார்கள். சில பெண்கள் பாலியல் நோய் தாக்கியம், சிலர் அதீத மன அழுதத்திலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்து போனார்கள்.

அதன் பிறகு இப்படியான ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை வலுக்கட்டாயமாக மூடி மறைக்கப்பட்டது.

Image Courtesy

இன்றும் உயிருடன் :

இன்றும் உயிருடன் :

சில ஆண்டுக்கு பிறகு அந்த நரகத்தில் சிக்கி தப்பி உயிர் பிழைத்திருந்த ஒரு சில பெண்கள் மெல்ல மெல்ல தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ஆதரவு பெருகவே ஜப்பான் 1993 ஆம் ஆண்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டது.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதில் கடந்த 2015 ஆம் ஆண்டு கம்ஃபர்ட் வுமனாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஜப்பான் அரசாங்கம் முன் வந்தது. ஆனால் தென் கொரியா பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் ஜப்பான் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அந்த நிகழ்வின் சாட்சியாக இன்றும் இருக்கக்ககூடிய வயது முதிர்ந்து 90 வயதில் ஒரு சில பாட்டிகள் தங்களுக்கான நியாயத்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Comfort Women in Japan Military

Comfort Women in Japan Military
Story first published: Tuesday, February 27, 2018, 14:37 [IST]