For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...

சில பறவைகள் நம்முடைய வீட்டுக்குள் நுழைந்தால் அது வீட்டுக்கு துரதிஷ்டத்தை தரும் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

|

ஜோதிடப்படி வீட்டிற்குள் இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் நுழைவது நம்முடைய வீட்டுக்கு துரதிஷ்டத்தைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது, அவை என்னென்ன பறவைகள் என்று பார்க்கலாம் வாங்க...

birds and animals that bring bad luck

ஜோதிடப்படி சில பறவைகள் மற்றும் விலங்குகள் வீட்டினுள் நுழைவது துரதிர்ஷ்டம் என சொல்லப்படுகிறது. இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடுகின்றன. அந்த மாதிரியான துரதிர்ஷ்டமான பறவைகள் மற்றும் விலங்குகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புறா

புறா

புறா பொதுவாக பாழடைந்த கட்டிடங்கள், வீட்டு கூரைகள் மேல் தான் அதிகமாக காணப்படும். இது ஜன்னல் வழியாக இடி, மழை மற்றும் மின்னல் ஏற்படும் போது வீட்டினுள் நுழையும். அதற்கு தகுந்தாற் போல் ஒரு இடத்தை கண்டறிந்து விட்டால் கூடு கட்ட ஆரம்பித்து விடும். இதனால் நிறைய எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது.

MOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி?

குளவிகள் மற்றும் தேனீக்கள்

குளவிகள் மற்றும் தேனீக்கள்

இந்த குளவிகள் மற்றும் தேனீக்கள் கோடை காலங்களில் ஏற்படும் வெயிலை சமாளிக்க வீட்டினுள் குளிராக இருக்கும் இடத்தை நோக்கி உள்ளே நுழையும். எனவே இந்த கூட்டை கண்டதும் அகற்றுவது நல்லது. ஏனெனில் இதுவும் எதிர்மறை சக்தியை கொண்டு வந்து விடும்.

வெளவால்

வெளவால்

வெளவால் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். அதிலும் பகல் நேரங்களில் வெளவால் நடமாட்டம் துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. வெளவால் இறப்பையும், எதிர்மறை ஆற்றலையும் தருகிறது. மேலும் இதனால் பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும்.

MOST READ: இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது

ஆந்தைகள்

ஆந்தைகள்

ஆந்தைகள் பொதுவாக வீட்டினுள் நுழைவதில்லை. இது பொதுவாக இரவு நேரங்களில் அதிகமாக காணப்படும். வீட்டில் இருக்கும் ஜன்னல்,சிறிய பாதை வழியாக இதனால் உள்ளே நுழைய முடியாது. பெரிய கதவுகள் வழியாக மட்டுமே இது உள்ளே நுழையும். ஆந்தை கள் நீண்ட நேரம் வீட்டில் தங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது.

MOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

கருப்பு பூனைகள்

கருப்பு பூனைகள்

வீட்டினுள் கருப்பு பூனைகள் தீடீரென்று உள்ளே நுழைவதும், தங்குவதும் அபசகுனமாக கருதப்படுகிறது. இது ப்ளாக் மேஜிக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு அருகில் பூனை தங்கி இருந்தாலும் கெட்ட சக்தியாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

birds and animals that bring bad luck if they enter your house

Take a look at the list of birds and animals that bring bad luck if they enter the house.
Story first published: Tuesday, December 11, 2018, 10:30 [IST]
Desktop Bottom Promotion