Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
உங்கள் ராசிப்படி எந்த வயதில் உங்களுக்கு வெற்றிகள் குவியும் தெரியுமா?
நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் விதியை பொறுத்தே அமைகிறது. நமது விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நமது ராசியும், பிறந்தநேரமும்.
தீர்த்த யுகத்தில் மகரிஷி பிர்கு என்பவர் வாழ்ந்து வந்தார். ஜோதிடசாஸ்திரங்களில் மாமேதையான அவர் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களை கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கக்கூடிய ஞானத்தை பெற்றவர். இவர் பிரபஞ்சத்தின் அழுத்தத்தை ஆன்மீகத்தை கொண்டு சரிசெய்ய இயலும் என்று நம்பினார். அதற்காக அவர் உருவாக்கிய தொகுப்புதான் பிர்கு சம்கிதா என்பதாகும்.

நாம் பிறக்கும் போதே நமது விதியானது நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் அதனை பொறுத்தே அமைகிறது. நமது விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நமது ராசியும், பிறந்தநேரமும். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிலை திருப்புமுனையாக இருக்கும். அந்த நிலை எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால் மகரிஷி பிர்குவின் குறிப்புகளின் படி எந்த ராசியினருக்கு எந்த வயதில் வெற்றிக்கான பாதை திறக்கும் என்று அறிய வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு எந்த வயதில் வெற்றிகள் குவியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிர்கு சம்கிதா
முதலில் மகரிஷி பிர்கு 500,000 ஜாதகங்களை தொகுத்தார். அவர்களின் பிறப்பு, அவர்கள் வாழ்வில் நடக்கப்போகும் சம்பவங்கள், எதிர்காலம் என அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னாளில் இது அவரின் சீடர்களின் ஆராய்ச்சிக்கு உதவியது. இந்த குறிப்புகள் அனைத்தும் சூரியன், நிலா, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களின் நிலைகளை பொறுத்து கணிக்கப்பட்டது. இதனை பொறுத்து ஒருவரின் ராசியை பொறுத்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கான பாதை எந்த வயதில் திறக்கும் என்பதை கணித்துவிடலாம்.

மேஷம்
இயற்கையிலேயே தலைமை பண்பு அதிகமுள்ள மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்றால் நிச்சயம் அவர்கள் முதலாளிகளாக மாறக்கூடியவர்கள். அவர்களுக்கு வெற்றியின் பாதை 16, 22, 28 மற்றும் 36ல் திறக்கும். இந்த காலகட்டங்கள் அவர்களுக்கு திருப்புமுனையாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொறுமையும், எதார்த்தமும் மிக்கவர்கள். இவர்களால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்றமாறியும் உடனே மாற்றிக்கொள்ள இயலும். இவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றிக்கான பாதையை திறக்கும் காலம் இவர்களின் 25,36 மற்றும் 42 வயதுகளில் ஆகும்.

மிதுனம்
இயற்கையிலேயே அதிக ஆற்றல் மிக்க நீங்கள் போரடிக்கும் சூழலில் வேலை செய்வது உங்களுக்கு ஏற்றதல்ல. அனைத்து வேலைகளையும் வேகமாக முடிக்க நினைக்கும் நீங்கள் 22, 32, 32 மற்றும் 42 வயதுகளில் அதிக வெற்றியை ருசிப்பீர்கள்.

கடகம்
12 ராசிகளிலியே அதிக அதிர்ஷ்டசாலியான ராசி என்றால் அது கடக ராசிதான். பணியிடங்களில் உங்களை போல அறிவுரைகள் வழங்க எவராலும் முடியாது. இவர்களுக்கு கிட்டதட்ட ஆறு காலகட்டங்கள் தீர்ப்புமுனையாக அமையும். இவர்கள் 16, 22, 24, 25, 28 மற்றும் 33 வயதுகளில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.

சிம்மம்
சிம்மராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், மற்றவர்களுக்கு தூண்டுதலாகவும் இருப்பார்கள். வேலைகளில் நீங்கள் செலுத்தும் கவனமே உங்களுக்கான வெளிச்சத்தை பெற்றுத்தரும். குழுவாக செயல்படும்போது உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களின் 16, 24, 26 மற்றும் 31 வயதில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.

கன்னி
அதிக கருணை உணர்வு கொண்ட நீங்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகிவிடுவீர்கள். உங்கள் வேலைகளை முடிக்க மற்றவர்களின் உதவி தேவையில்லை. உங்களுக்கு 22, 24, 28, 33 மற்றும் 35 வயதுகளில் உங்களுக்கு வெற்றியின் பாதை பிரகாசமாக இருக்கும்.

துலாம்
சிறப்பான குணங்களை கொண்ட உங்களின் கூடுதல் சிறப்பே அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குழுவாக செயல்படக்கூடியவர்கள். மற்றவர்களின் மனஓட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள கூடிய நீங்கள் இதனை உங்கள் எதிர்காலத்திற்காக பயன்படுத்தினால் உங்கள் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கு 25, 29, 33, 35 மற்றும் 36 வயதில் வெற்றிகளின் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்
உங்களுக்கு வேலை மீதும், கடமை மீதும் அதிக விசுவாசமாக இருப்பார்கள் . எந்தவித கவனச் சிதறல்களும் இன்றி நீங்கள் உங்கள் வேலையே முடிக்கக்கூடியவர்கள். உங்களுக்கு 22, 26, 30 மற்றும் 37 வயதுகளில் வெற்றியின் பாதை திறக்கும்.

தனுசு
வேலையை பொறுத்தவரையில் நீங்கள் எப்பொழுதுமே சரியாகத்தான் செயல்படுவீர்கள். விதிமுறிகளால் உங்களை கட்டுப்படுத்தாதவரை நீங்கள் சிறகை விரித்து மேலே சென்றுகொண்டே இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும். உங்களுக்கு 23, 29, மற்றும் 37 ஆகியவை திருப்புமுனை காலமாக அமையும்.

மகரம்
கடினமான உழைப்பாளியான நீங்கள் எப்பொழுதும் அனைத்திலும் முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். அதற்கான அர்ப்பணிப்பும் உங்களிடம் இருக்கும். எந்நேரமும் வேலையை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கும் நீஙகள் அதிலிருந்து சிறிது வெளியே வந்து ஆசுவாசப்படுத்தி கொள்வதும் நல்லது. உங்களுக்கு 25, 33, 36 மற்றும் 41 வயதுகளில் வெற்றிகள் குவியும்.

கும்பம்
கட்டுப்பாடுகள் இல்லாத வேலை அமைந்தால் உங்களின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கும். உங்களின் ஆளுமைக்காகவே எப்போதும் உங்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நீங்கள்25, 28, 34 மற்றும் 43 வயதுகளில் எதைத்தொட்டாலும் வெற்றிதான்.

மீனம்
எதை செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு ஜால்ரா அடித்து முன்னேற விரும்பமாட்டீர்கள். செய்யும் வேலையை சாதுர்யமாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் செய்து சாதிப்பீர்கள். 26, 28, 34, 39 ஆகிய வயதுகளில் உங்கள் அதிர்ஷ்டமும், வளர்ச்சியும் உச்சத்தில் இருக்கும்.



Click it and Unblock the Notifications
