Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
எலியின் உதவியை இந்த மக்கள் மறக்கவே மாட்டார்கள்! அப்படி என்ன செய்கிறது தெரியுமா?
மனிதர்களுக்கு ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களை விலங்கினங்கள் கண்டுபிடிக்கும் ஆற்றல் தெரியுமா?
உயிரினங்களில் மனிதர்களுக்கு தான் அறிவு அதிகம் என்று பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களான நம்மால் முடியாத நமக்கு சத்தியமாகாத பல விஷயங்களை விலங்குகள் மிக எளிமையாக செய்து முடிக்கும்.
படைப்பின் அலங்காரம் அது! இந்த உலகில் எத்தனையோ உயிரினங்க்ள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப அதற்குரிய ஒர் குணாம்சத்தை பெற்றிருக்கும். இப்படி விலங்குகளிடத்தில் விசித்திரமாக இருக்கக்கூடிய சில குணாதிசயங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

பறவைகள் :
வட துருவத்தில் இருக்கக்கூடிய பறவைகள் குளிர்காலத்தில் உணவு பற்றாகுறை ஏற்படுவதினால் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும். அப்படி வெளியேறும் பறவைகள் கிட்டத்தட்ட ஆயிரம் மைல்களுக்கு அப்பாலும் பயணிக்கிறது.
சரியாக குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் திரும்பி வந்துவிடும். ஆயிரம் மைல்களை கடந்து சென்றாலும் மீண்டும் எப்படி அதே வழித்தடத்தில் திரும்புகிறது என்பது புதிராகத்தான் இருக்கிறது.

டால்பின்கள் :
டால்பின்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஓர் உறுப்பு தான் டால்பின்களின் ரேடாராக செயல்படுகிறது. ஒலியை எழுப்பி அவை எதிரொலிப்பதை வைத்தே தன் பாதையை வகுத்துக் கொள்கிறது.
தன்னைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களை உணரவும் தலை மேல் இருக்கும் உறுப்பு பயன்படுகிறது. ஏன் இந்த உறுப்பு தான் டால்பின் கருத்தரித்திருக்கிறது என்பதை கண்டறியவும் உதவுகிறதாம்!

எலி :
கண்ணிவெடிகள் நிலத்தில் புதைத்து வைத்திருப்பதை கண்டறிய பல நாடுகளில் எலி தான் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஆப்பரிக்காவை சேர்ந்த எலி இனங்களிலேயே சற்று பெரிதாக இருக்கக்கூடிய எலிகளில் கூர்மையான பார்வை இருக்காது. ஆனால் அபரிதமான நுகர்வு சக்தி இருக்கும்.
ஆப்பரிக்காவைச் சுற்றியுள்ள அங்கோலா, டன்சானியா, மொசம்பிகியு, கம்போடியா ஆகிய இடங்களில் ஏராளமான கன்னிவெடிகளை கண்டறிந்திருந்து மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறது. 2000 அடி தூரத்தை மனிதர்கள் தேட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். ஆனால் அதே தூரத்தை எலிகள் 20 நிமிடங்களில் முடித்துவிடும்.
புதைக்கப்பட்டிருக்கும் கன்னிவெடிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவு எலிகள் எடையல்ல. அதற்குள்ளாக எலிகளின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக அவை இருப்பதை உறுதி செய்த பின்னர் அதனை பாதுகாப்பாக அகற்றிவிடுகிறார்கள்.

தேனீ :
கன்னிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்!. அந்தக் காலத்தில் வெடிப்பொருட்கள் தயாரிக்க சர்க்கரை போன்ற இனிப்பை பயன்படுத்துவார்கள். அதனால் தேனீயை பயன்படுத்தி அவை தேடிச் செல்லும் இடத்தை கண்டறிந்து கன்னிவெடிகளை அகற்றுவார்கள்.
நாய் மற்றும் எலி ஆகியவற்றை பயன்படுத்தி கன்னிவெடிகளை நீக்குவதை விட தேனீக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் மிக குறைவு.

பூனை :
பூனைகளிடம் இருக்கிற நுண்ணறிவை வைத்து நாம் உடல் நலமின்றி இருக்கிறோமா இல்லையா என்பதை அது எளிதாக கண்டுபிடித்துவிடுமாம். உடலில் ஏற்படுகிற கெமிக்கல் ரியாக்ஷன்கள் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய நோய்த் தொற்றுகளை பூனைகள் உணர்ந்துவிடும்.
மனிதர்கள் மட்டுமின்றி பிற விலங்குகளிடத்தில் நோய் பாதிப்பு இருந்தாலும் பூனை கண்டுபிடித்துவிடும்.

பாம்பு :
பாம்பு என்று சொன்னால் பயந்து ஒதுங்கிச் செல்பவர்கள் தான் உண்டு. பாம்பின் தலையில் பிட் உறுப்பு என்ற உறுப்பு இருக்கிறது இவை தான் பிற விலங்கினங்கள் மனிதர்களின் நடமாட்டத்தை உணர வைக்கிறது. இந்த உறுப்பு இருப்பதினால் பாம்பு இரவு நேரத்திலும் கூட பாம்பினால் தன் இறையை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

மீன் :
குறிப்பட்ட ஆழத்திற்கு பிறகு சூரிய ஒளி ஊடுறுவிச் செல்லாது. வெளிச்சமே இல்லாத இடத்தில் மீன்கள் தங்களை நோக்கி வருகிற ஆபத்துக்களை உணர அவற்றின் உடலில் இருக்கிற உறுப்புகள் பயன்படுகிறது.
அவை தண்ணீரின் ஓட்டம், ஆழம் ஆகியவற்றையெல்லாம் உணரச் செய்கிறது. கடல் மீன்களை விட ஏரி மீன்களுக்கு பல வகைகளில் ஆபத்து இருக்கிறது அவற்றிலிருந்து தப்பிக்க இவை தான் உதவிடுகிறது.

யானை :
நிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகப்பெரியது யானை. யானைக்கு கேட்கும் திறன் அதிகம். சென்று கொண்டிருக்கும் வழித்தடத்தை கச்சிதமாக நினைவில் வைத்திருக்கும்.
அதே போல மழை பெய்தால், சுமார்241 கிலோமீட்டருக்கு தொலைவில் இருக்கும் யானை உணர்ந்து கொள்ளும்.

நாய் :
பலரது வீடுகளின் செல்லப்பிராணி. ஏன் குடும்பத்தின் ஒர் நபராகவே பாவிக்கும் வழக்கம் இருக்கிறது. நாய்க்கும் நுகர்வு சக்தி அதிகம். தன் எஜமானரின் எண்ணவோட்டத்தை அறிந்து அதற்கேற்ப அணுகுவதால் நாயை உற்ற நண்பன் என்றும் சொல்கிறார்கள்.
நாய் புற்றுநோய் தாக்கியிருப்பதை எளிதில் கண்டறியும் ஆற்றல் கொண்டிருக்கிறது. கேன்சர் செல்களிலிருந்து வெளிவருகிற ஒரு வித நாற்றத்தை நாய் உணர்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பென்குயின் மட்டுமல்ல நாய் கூட பெண்ணின் கர்ப்பத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றல் கொண்டிருக்கிறது.
பெண்கள் கருத்தடையும் போது ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களை உணர்ந்து தன் எஜமானரையே சுற்றிச் சுற்றி வரும்.



Click it and Unblock the Notifications