For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பு செய்ய பண்டைய காலங்களில் கடைபிடித்து அதிர்ச்சியளிக்கும் முறைகள்!

கருக்கலைப்பிற்காக பண்டைய காலங்களில் கடைபிடித்த முறைகள் பற்றிய கட்டுரை

|

கருக்கலைப்பு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் இன்று நேற்றல்ல பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. இன்றைக்கு கருவை கலைக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டிருப்பது போல பெரிதாக ஆரம்ப காலங்களில் சட்டம் இல்லை என்பதாலும், மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லாத காலம், மூட நம்பிக்கைகள் நிரம்பியிருந்த காரணத்தினால் கருக்கலைப்பிற்கு பயங்கரமான விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள் மக்கள் அதனால் ஏற்பட்ட உயிர்பலிகளும் கொஞ்சநஞ்சமல்ல .

கருக்கலைப்பு முதன்முதலாக எகிப்தியர்கள் செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்த வழக்கும் கி.மு 500 ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் தோன்றி பழக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் விஷச் செடிகள், விதைகள் ஆகியவற்றைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கருக்கலைக்கும் முறை வந்திருக்கிறது.

அப்போதே பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. 1950களில் சீனாவில் கருக்களைப்பு குற்றமாக பார்க்கப்பட்டது. 1980களுக்கு பிறகு கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டின் ஒரு அம்சமாகவே அது பார்க்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இதனை சில நாடுகள் அங்கீகரிப்பதும், பல நாடுகள் தடை விதிப்பதும் நடந்திருக்கிறது. தடையிருந்த நாடுகளில் முறைகேடுகளாக பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டார்கள். விளைவு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மரணம் அடைந்தார்கள் அவர்களின் குழந்தைகள் பலரும் அனாதைகளாக நின்றார்கள். இதைப் பார்த்து கருக்கலைப்பினை தடை செய்திருந்த ரோமானியா அதனை சட்டப்பூர்வமாக்கியது.

ஒவ்வொருவரின் கலாச்சரங்களைப் பொருத்து கருக்கலைப்பு செய்யும் முறை மாறுகிறது. அதே போல கால மாற்றத்திற்கு ஏற்ப அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப என கருக்கலைப்பிற்கு பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டிருக்கிறது.

மிக கொடூரமானது என்று மனதை பதைபதைக்கச் செய்யும் வகையில் ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்ட கருக்கலைப்பு பற்றிய சில தகவல்கள்.

Image Courtesy

#2

#2

எகிப்தியர்கள் கையாண்ட கருக்கலைப்பில் முதலையின் கழிவுகளை சேகரித்து உருண்டையாக பிடித்து காயவைக்கிறார்கள். அதனை கர்ப்பமடைந்திருக்கும் பெண்ணின் பிறப்புறுப்பில் வைத்து விடுகிறார்கள்.

கழிவில் இருக்கும் சில சத்துக்கள் மூலமாக கரு கலைந்துவிடும் என்கிறார்கள் அதோடு இவை கரு உருவாகாமலும் தடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கர்ப்பமாவதற்கு முன்னதாகவே பெண்கள் இதை பயன்படுத்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

Image Courtesy

 #3

#3

பெனாய்ராயல் என்ற டீயைக் கொண்டு உருவாக்கப்பட்ட டீ கருக்கலைப்பிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதினா இலைகளை ஒத்ததாக இதன் இலை இருக்கும்.

அதிக விஷத்தன்மையுள்ள இந்த இலைகள் ஐந்து கிராம் அளவு போதுமானது.

Image Courtesy

 #4

#4

ஹிப்போக்ரேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவர் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்தாலும் இவர் கருக்கலைப்பிற்காக சொன்ன ஒரு ஐடியா பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அப்படி அவர் சொன்ன ஐடியா என்ன தெரியுமா? நன்றாக குதிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் உங்களுடைய கால்கள் மடக்கி பின்னால் பட வேண்டும். இப்படி செய்யும் போது கர்ப்பப்பை பலவீனமடைந்து கரு வெளியேறுமாம். ஆனால் இவை கரு வளரத் துவங்கி விட்டால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்கிறார்.

Image Courtesy

#5

#5

எட்டாம் நூற்றாண்டில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது சமிஸ்கிருத எழுத்துக்களில் இவை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மண் பானையில் பாதியளவு தண்ணீரை வைத்து அதில் இருபதுக்கும் மேற்பட்ட வெங்காயத்தை தோல் நீக்கி அந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கிறார்கள்.

அந்த தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து அந்த புகை நேரடியாக படும்படி உட்கார்ந்து கொள்கிறார்கள். அந்த புகையால் கருக்கலைப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#6

#6

கேட்கவே அருவருப்பாய் இருக்கிறது ஒட்டகத்தின் எச்சில், மரத்தில் அதிகமாக வசிக்கக்கூடிய எறும்புகள், கருப்பு நிற மானின் வாலில் இருக்கும் முடி இவை எல்லாவற்றையும் கரடியுன் கொழுப்புடன் சேர்த்து அரைத்து கருப்பைக்குள் வைப்பார்களாம்.

இதில் நோய்த் தொற்று ஏற்பட்டு பலரும் இறந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

ஆரம்ப காலத்தில் மருத்துவ விழிப்புணர்வு இல்லாமல் ரத்தம் வெளியேறினால் கரு கலைந்துவிடும் என்று நம்பி அதிகப்படியான ரத்தம் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேற்றுவது, உரிய சிகிச்சைகள் கிடைக்காது பெண்கள் தொடர்ந்து மரணமடையவே இந்த வழக்கம் அப்போதே கைவிடப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#8

#8

1800களில் கர்பிணிகளின் பல்லைப் பிடிங்கினால் கரு கலைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவும் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் பல்லைப் பிடுங்குவார்களாம்.

அதீத வலி தாங்காமல் அந்தப் உடலை முறுக்கிக் கொண்டு கத்தும் போது கரு கலைந்து விடும் என்றிருக்கிறார்கள்.

Image Courtesy

#9

#9

செடிகளில் இருக்கக்கூடிய எர்காட் எனப்படுகிற ஒரு வகை பூஞ்சானை கருப்பையில் வைப்பார்கள். வயிற்று வலி, வாந்தி உட்பட பல தொந்தரவுகள் ஏற்படும். இதனால் கரு கலைகிறதோ இல்லையோ பெண்களின் உயிர் பிரியுமாம்.

அடிமைகளாக பிடித்து வைத்திருந்த பெண்கள் பெரும்பாலும் இந்த முறையில் தான் செய்யப்பட்டிருக்கிறது.

Image Courtesy

 #10

#10

வழக்கத்தை விட மிக இறுக்கமான பெல்ட் அணிந்து நாள் முழுவதும் இருக்கச் செய்கிறார்கள். வயிற்றுக்கு திடீரென்று கிடைக்கிற அதீத அழுத்தம் காரணமாக கருக்கலையும் என்கிறார்கள்.

கருக்கலையும் வரை அந்த இறுக்கமான பெல்ட் போட்டேயிருப்பதினால் பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

கர்ப்பமாக இருக்கும் பெண்களை குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடு என்பார்களே அதைப் போல குழந்தை வளரக்கூடாது என்றால் நீயும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி நாட்கணக்கில் பட்டினி கிடக்கிறார்கள். அதோடு வழக்கமான உடல் உழைப்பு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் கருவிற்கு கிடைக்கிற சத்துக்கள் கிடைக்காமல் கரு கலைந்து விடும் என்கிறார்கள்.

இந்த முறையினாலும் ஏரளமான பெண்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#12

#12

1810 ஆம் ஆண்டு ஜோசப் ப்ரீவிட் என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் பெண்களின் மருத்துவம் சார்ந்து கடைபிடிக்கப்பட்ட சில வழக்கங்கள் குறித்து எழுதியிருக்கிறார். அவற்றில் அந்தக் காலத்தில் பெண்கள் கருக்கலைப்பிற்கு என்று கரண்ட் ஷேர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கென்று பிரத்யோக சேர் இருக்கிறது. அதில் உட்கார வைக்கப்படும் பெண்களின் தொடை மற்றும் இடுப்பினைச் சுற்றி கரண்ட் பாய்ச்சப்படுகிறது.

Image Courtesy

#13

#13

கருக்கலைப்பு தடை இருக்கிற பகுதிகளில் எல்லாம் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லி விஷத்தன்மை வாய்ந்த காய், அதன் குச்சிகளை எல்லாம் கருக்கலைப்பிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இது சரியான பலனளிக்காமல் கரு முழுமையாக வெளியேறாமல் ஏராளமான உயிர்ப்பலியும் ஏற்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Ancient Abortion Practices Around the world

Ancient Abortion Practices Around the world
Story first published: Wednesday, June 13, 2018, 12:56 [IST]
Desktop Bottom Promotion