சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடும் சிதம்பரம் நகர் முன்னர், தில்லைவனம் என்றே அழைக்கப்பட்டதற்குக் காரணம், அங்கிருந்த தில்லை மரங்கள்தான், தற்காலத்தில் அங்கே, தில்லை மரங்கள் இல்லை, எங்கே போயின அவை?
இராமாயண காவியத்தில், மரா மரம் சிறப்பு வாய்ந்தது, அந்த மரா மரமே, ஆச்சாள் மரம் என அழைக்கப்பட்டு, அவை நிறைந்த வனம் ஆச்சாள்புரம் என்று, சிதம்பரம் நகரின் சற்று தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருக்கிறது. அங்கும் ஆச்சாள் மரங்கள் இல்லை? எங்கே இருக்கின்றன ஆச்சாள் மரங்கள்?
இயற்கையின் நியதியில், இடங்களும், கால வரையறைகளும் நிரந்தரமல்ல, என்பதை நாம் பழைய நிகழ்வுகளின் மூலம் அறிந்து வந்திருக்கிறோம்.
சதுப்பு நிலக்காடுகள் எனும் அலையாத்திக் காடுகள்.
கடல் நீர் நிலத்துடன் இணையும் இடங்களில் குறைந்த அளவு நீர் நிரம்பிய சேற்றுப்பாங்கான மண் பரப்பு கடல் நீரை உள்ளே வராமல் திருப்பி அனுப்பும், இதற்கு உதவி செய்யும் வண்ணம், அங்கு வளர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் மற்றும் அவற்றின் வேர்கள், கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுக்கும், இதுபோன்ற நில அமைப்பே, மாங்குரோவ் காடுகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
மாங்குரோவ் காடுகள்
கடல் அலைகள் உள்ளே வராமலும், கடல் நீர் கரையில் உள்ள நிலத்தின் மண்ணை அரித்து, நிலத்தினுள் புகுந்து ஆக்கிரமித்து விடாமல், நிலத்தைக் காப்பதில், மண் அரிப்பைத் தடுப்பதில், முக்கிய பங்கு வகிப்பது, அலையாத்திக்காடுகளில் உள்ள மரங்களே. இவையே, தாங்கள் வளரும் நிலப்பரப்பைக் கடல்கொள்ளாமல், இன்றுவரை காத்து வருகின்றன.
சில அடி ஆழமே கொண்ட இந்த காடுகளில் உள்ள நீர்மட்டம், கடல்நீர் மற்றும் பேக் வாட்டர் எனும் ஆற்றின் கழிமுகப்பகுதியில் கடல் நீருடன் சேரும் ஆற்று நீர் கலந்து இணையும் இடமாகத் திகழ்கிறது.
அலையாத்திக் காடுகளின் தன்மை:
கடல் நீரிலே வளர்வது போலத் தோன்றினாலும், காடுகளில் உள்ள நீரில் வளரும் மரங்கள் நன்னீர் எனும் நல்ல நீரில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. இவற்றின் அடிப்பரப்பு நிலத்தில் இருந்தாலும், வேர்ப்பகுதிகள் படர்ந்து விரிந்து மண்ணின் மேலே காணப்படும். பலவகையான மரங்கள், குறைந்த வளம் கொண்ட இந்த மண்ணில் நன்கு வளர்கின்றன.
உலகின் பல இடங்களில் இதுபோன்ற காடுகள் காணப்பட்டாலும், நமது தேசத்தில்தான், உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக்காடுகளாக, சிதம்பரம் நகரை அடுத்த பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் திகழ்கின்றன.
அலையாத்திக்காடுகள் கடல் அலைகளில் இருந்து, கடல் அரிப்பில் இருந்து மட்டும் நிலத்தைக் காக்கவில்லை, கடல் கோள் எனும் பனை மர உயரத்திற்கு மேல் எழும்பும் பேரலைகளின் சீற்றத்தில், கடலோர கிராமங்கள் அழிந்துவிடாமல், எத்தனை வேகத்தில் அந்தப் பேரலைகள் வந்தாலும் சமாளித்து, அவற்றின் வேகத்தைக் குறைத்து, பாதிப்பைப் போக்குவதில், சிறந்த எல்லைக் காவலனாகத் திகழ்கின்றன.
மேலும், இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் மணிக்கு நூற்றைம்பது கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும், எந்த பாதிப்பும் அடையாமல் அவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.
அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்கள்:
இந்தக் காடுகளில் நூற்றுக்கணக்கான வகைகளில் மரங்கள் இருந்தாலும், சில மரங்கள் நெடுநாட்கள் வளர்ந்து பயன்தரும் இயல்புடையவை. அதில் சில தில்லை மரம் மற்றும் சுரபுன்னை மரங்கள் இவை உட்பட அநேக மரங்கள், இந்த நீர்நிலைகளில் வாழும் தன்மை உடையவை.
சுனாமியிலிருந்து மக்களைக் காத்த மாங்குரோவ் காடுகள்.
கடலில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளால், தோன்றிய கடல்கோள் எனும் பேரலைகள், காவிரிப்பூம்பட்டினம் எனும் கடல் வணிக மாநகரை, அடியோடு அழித்துவிட்டதாக, வரலாற்றில் படித்திருப்போம். அதை நினைவுபடுத்தும்விதமாக, கடந்த 2004ஆம் ஆண்டு ஆசியக்கடல் பகுதியை துவம்சம் செய்த, சுனாமியை நாம் கண்டு அவற்றின் கோரத்தை, உணர்ந்திருப்போம்.
அந்த தேசியப் பேரிடரில், சென்னை, கடலூர், நாகை, வேளாங்கண்ணி,காரைக்கால் உள்ளிட்ட பல கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரம், குடும்ப உறவுகள் அந்தப் பேரலைகளில் பறிபோன துயரங்களை நாம் கண்டு மனம் வருந்தியிருப்போம்.
ஆயினும், இந்தப் பேரலைகள் மாங்குரோவ் காடுகள் உள்ள இடங்களில் தன் கோர முகத்தைக் காட்டமுடியாமல், ஒடியதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.
சிறிய பாதிப்பு கூட, அந்தக் கடல்கோள் எனும் பேரலைகளால் ஏற்படவில்லை, என்ன காரணம்?
அலையாத்திக்காடுகள்.
பிச்சாவரம் பகுதிகளில் கடல் நீர் கலக்கும் இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் காணப்படும் அரிய தில்லை மரம் எனும் ஆச்சா மரங்கள், சுரபுன்னை உள்ளிட்ட பல வகையான மரங்கள், கொடிய பேரலையாக நூறு கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் வந்த அந்த சுனாமியை, உள்நுழைய விடாமல் தடுத்ததன் காரணம், அவற்றின் உறுதியான தன்மை மற்றும், அந்த நீர்ப்பரப்பில், அவை பரவியிருந்த விதம், யாவும் சேர்ந்து, பேரலைகளின் பாதிப்பை ஏற்படவிடாமல் தடுத்தன.
இதன்பின்னரே, அரசாங்கமும் அலையாத்திக் காடுகளின் அத்தியாவசியத்தை உணர்ந்து, அவற்றை, சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வளர்க்க ஆரம்பித்தது. தற்காலம், சென்னை நகரில் இருந்து ஆரம்பித்து, தமிழகக் கடற்கரையோரம் அலையாத்திக் காடுகளை பரவலாக வளர்த்து வருகிறார்கள்.
பிச்சாவரம் போல சென்னை மாநகரிலும் அலையாத்திக் காடுகள் இருந்து, அவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டன என்ற தகவலை உறுதிப்படுத்தும் வண்ணம், சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்நிலைகளில் கடல் நாரைகள் உள்ளிட்ட அரிய பறவையினங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு இளைப்பாறும் உற்சாகம் தரும் காட்சிகளை, இன்றும் நாம் காண முடியும்.
அலையாத்திக் காடுகளின் பயன்கள்
இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் தங்கள் வேர்கள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் காற்றை உறிஞ்சி, காற்றில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு, ஆக்சிஜனை அதிகம் வெளி விடுகின்றன. இதன் மூலம், மக்களுக்கு தடையில்லாமல் பிராண வாயு கிடைத்து, வியாதிகள் அணுகாமல் உடல் ஆரோக்கியம் பெறுகிறார்கள்.
மாங்குரோவ் காடுகளில் இருக்கும் நீர்வளமும், பசுமை அமைப்பும் இந்தப் பகுதிகளில், சில வகை மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கக் காரணமாகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்கள் பல இந்த நிலப்பரப்பை ஒட்டி வாழ்வதால் கடல் வளம் காக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஏக்கர் நிலப்பகுதியில் சிறிய தீவுகள் போன்ற மனற்த்திட்டுகளைக் கொண்டு விளங்கும் பிச்சாவரம் காடுகளில் வருடந்தோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் கூட்டமாக வருவதைக் காண, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவர்.
நன்மைகள் :
மாங்குரோவ் காடுகள் மனிதர்களுக்கும், மற்றும் அங்குள்ள உயிரினங்களுக்கும் அநேக நன்மைகள் செய்கின்றன.
அலையாத்திக்காடுகளில் வளரும் மரங்கள் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவையாகும், அதில் காணப்படும் தில்லை மரங்கள், ஒரு காலத்தில் சிதம்பரம் நகரில் பரவலாக இருந்தவை, நடராஜர் திருக்கோவில் தல மரமாக விளங்குபவை. அவை காலவெள்ளத்தில், பிச்சாவரம் காடுகளில் தற்காலம் அதிக அளவில் காணப்படுகின்றன.
சிதம்பரம் நகருக்கு அருகில் கொள்ளிடக்கரையில் காணப்பட்ட ஆச்சாள் மரங்களும், தில்லை மரமும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மரமாக விளங்குகிறது..
மருத்துவப் பலன்கள்.
ஆச்சாள் மரங்கள் எனும் தில்லை மரங்கள் மற்றும் சுர புன்னை மரங்களின் இலைகள் மற்றும் அவற்றின் வேர்கள் இந்த நீர்நிலைகளில் பரவி இருப்பதால், இதை ஒட்டிய பகுதிகளில் வாழும் மீனவ மக்களுக்கு, எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் வியாதிகள் அணுகாமல் அவர்களின் உடலை இந்த மரங்களின் ஆற்றல் கொண்ட காற்று, பாதுகாக்கிறது என்று கூறுகின்றனர்.
சரும வியாதிகள் அகல :
தில்லை மரத்தின் இலைகள் சரும வியாதிகளின் பாதிப்பைக் களைவதிலும், சுரபுன்னை மரத்தின் இலைகள் கொடிய வியாதிகள் அணுகாமல் காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன.
தில்லை மரம், நடராஜர் திருக்கோவில் தல மரம் மட்டுமல்ல, மக்களை இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும், எல்லைக் காவல் மரமும் கூட!
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
நீ என்ன பெரிய பிஸ்தாவான்னு ஏன் கேட்கறாங்க தெரியுமா?... இதனாலதான்...
எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்
இந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க... எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் பஞ்சா பறந்துடும்...
இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!
இத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது தெரியுமா?
பெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 மேட்டரு தான் காரணமாம்...
உடலில் இந்த 5 மாற்றங்கள் தெரிந்தால் அவசியம் கவனித்திடுங்கள்!
கசகசாவை இந்த அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்... திடுக்கிடும் தகவல்
ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க...
நைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க..
உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இது தான்!
உடைந்த எலும்பையும் விரைவில் இணைத்து எலும்பிற்கு பலம் தரும் அரிய மூலிகை எது தெரியுமா?