82 குழந்தைகள் விஷ வாயு செலுத்தி கொடூர கொலை!

Posted By:
Subscribe to Boldsky

Czech என்ற ரிபப்ளிக் நாட்டின் தலைநகர் தான் பாராகுவே. இதன் தென் மேற்கு பகுதி அமைந்திருக்கிறது லிடிசி என்கிற சின்னஞ்சிரிய கிராமம். ஹிட்லரின் நாஜி படைகளின் தாக்குதலில் உருக்குலைந்து இன்று மீண்டும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிற ஓர் கிராமம் தான் இது.

மிகப்பெரிய கொடூரம் நிகழ்த்தப்பட்டு அதன் எச்சங்களாக இருக்கிற நினைவுத் தூண், சிலைகள் போன்றவற்றை கண்டு செல்ல பலர் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். நாஜி படைகளால் இந்த கிராமம் முற்றிலும் துடைத்தெடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

ஆம், அது துடைத்தெடுக்கப்பட்டது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1942 ஆம் ஆண்டு ரெயின்ஹார்ட் ஹெட்ரிச் என்ற நபர் இந்த கிராமத்திற்கு வருகை புரிந்தார். ஏற்கனவே ஹிட்லரின் சில செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

அதனை சமாளிக்கவே ஹெட்ரிச் வருகை புரிந்தார்.

Image Courtesy

#2

#2

வந்த இடத்தில் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வலுவானது. ஹெட்ரிச்சின் காரில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் ஹெட்ரிச் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

இந்த ஹெட்ரிச் இரண்டாம் உலகப்போர் நடைப்பெற்ற சமயத்தில் நாஜிப் படையினரின் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். ஹிட்லருக்கு நெருக்கமானவரும் கூட.

Image Courtesy

#3

#3

விஷயத்தை கேள்விப்பட்ட ஹிட்லர் கொதித்தெழுந்தார். இவ்வளவு காலம் அடிமைகளாக இருந்தவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சல் என்று கர்ஜித்தவர். அந்த கிராமத்தையே பழி வாங்குவேன் என்று சபதேற்றார்.

ஹிட்லரின் அந்த கோபம், லிடிசி கிராமத்தையே நிர்மூலமாக்கியது.

Image Courtesy

#4

#4

முதலில் அந்த கிராமத்திலிருந்து ஆண்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டார்கள். கிராமத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதன் பின் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இருவரையும் தனியாக பிரித்து தனித்தனி கேம்ப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Image courtesy

#5

#5

லிடிசியில் ஆட்களே நடமாட்டம் என்பது முற்றிலுமாக நின்று போனது. நாஜிப்படைகள் வந்து வீடுகளை சூரையாடியது. விலங்குகளை அடித்துக் கொன்றார்கள். வீடுகளை தரைமட்டமாக்கினார்கள்.

Image Courtesy

#6

#6

கிட்டத்தட்ட 173 ஆண்கள் கொல்லப்பட்டார்கள் 184 பெண்கள் கேம்ப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கியிருந்த 89 குழந்தைகள் தனியாக எங்கோ அனுப்பப்பட்டார்கள். எங்கே அனுப்புகிறார்கள் என்று லிடிசி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை.

குழந்தைகளை எங்கே கொண்டு செல்கிறார்கள் அவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் தெரியாமல் நிர்கதியாய் நின்ற தாய்மார்கள் கத்திக் கதறியழ அவர்கள் கையிலிருந்து பிஞ்சுக் குழந்தைகளை பிடுங்கி வண்டியில் ஏற்றினார்கள் நாஜிப்படையினர்.

Image Courtesy

#7

#7

89 குழந்தைகளில் ஜெர்மானியரைப் போன்ற அங்க அடையாளங்கள், முகத்தோற்றம், முடி ஆகியவை இருந்த குழந்தைகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டனர்.

அப்படி பிரிக்கப்பட்டதில் 89 குழந்தைகளில் 7 குழந்தைகள் தேற அவர்கள் தனியாக பிரித்து ஜெர்மனில் வாழுகின்ற சில குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டன.

Image Courtesy

#8

#8

7 குழந்தைகளைத் தவிர மீதமிருக்கும் 82 குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாரும் ஒரு வயது முதல் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் பெரும்பாலும் இருந்தார்கள். நடை பழகிக் கொண்டு தத்தி தத்தி எட்டு வைத்து நடக்கும் குழந்தையிடத்தில் என்ன வேலை வாங்கிட முடியும்.

இவர்கள் பெரும் பாரமாக கருதப்பட்டார்கள்.

Image Courtesy

#9

#9

அவ்வளவு தான் மீண்டும் வண்டியில் ஏற்றப்பட்டு கெல்ம்னோ என்ற முகாமுக்கு அனுபப்பட்டார்கள். எங்கோ அனுப்புகிறார்கள். மீண்டும் நம்மை நம் வீட்டிற்கு அனுப்பப்போகிறார்கள். அம்மாவைப் பார்க்கலாம். அப்பாவைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த குழந்தைகள் எல்லாம் முகாமுக்குச் அழைத்துச் செல்லப்பட்டு ஓர் அறையில் அடைத்தார்கள்.

பின் நச்சு வாயுவை திறந்து விடு ஐந்தே நிமிடத்தில் 82 குழந்தைகளும் செத்து மடிந்து வீழ்ந்தார்கள்.

Image Courtesy

#10

#10

இந்த கெல்ம்னோ எக்ஸ்டெர்மினேஷன் முகாம் என்பதே விஷ வாயு தாக்கி கொலை செய்வதற்கு என்றே ஹிட்லர் வைத்திருந்தார். இங்கே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இங்கே கொல்லப்படும் முறை சற்று வித்யாசமாக இருக்கும்.

Image Courtesy

#11

#11

முதலில் அறையில் அடைக்கப்பட்டு அவர்களது உடைகள் எல்லாம் கழற்ற வேண்டும். உடலில் ஒட்டுத்துணியிருக்கக்கூடாது. ஆண்கள் அண்டர்வியர் அணிந்து கொள்ளலாம். பெண்கள் ஸ்லிப் சேர்த்து அணிந்து கொள்ளலாம். மற்றபடி எந்த உடைக்கும் அனுமதியில்லை.

அவர்களிடம் இருக்ககூடிய எல்லா பொருட்களையும் ஒப்படைத்து விட வேண்டும். பின்னர் அங்கிருந்து ஒரு வேனில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுவார்கள். சிறிய வேன் என்றால் 50 முதல் 70 பேர் வரையிலும் சற்று பெரிய வேன் என்றால் 150 பேர் வரையிலும் அடைக்கப்படுவார்கள்.

Image Courtesy

#12

#12

ஆட்கள் நிரம்பியதும், கதவு அடைக்கப்படும். இதன் பிறகு இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று யார் நினைத்தாலும் முடியாது. நம் உயிர் பிரியப்போகிற தருணம் என்பதை பலரும் ஊகித்து விடுவார்கள். அங்கிருந்து வால்டல்கர் என்ற முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

Image Courtesy

#13

#13

வண்டி கிளம்பியதும் நச்சு வாயு திறந்து விடப்படும். ஏற்கனவே நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் மூச்சுத்திணறி எல்லாருமே இறந்து விடுவார்கள்.

வால்டல்கர் முகாம் காட்டுப்பகுதியில் அமைந்திருக்கிறது. உயர்ந்த மரங்கள் நிரம்பியிருக்கும் என்பதால் அங்கே யாராலும் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு எளிதாக தப்பிக்கவோ பிழைக்கவோ முடியாது.

இங்கே வண்டியில் நிர்வாணமாக ஏற்றப்பட்ட குழந்தைகள் குளிரில் நடுங்கி விரைத்து செல்லும் வழியிலேயே சில குழந்தைகள் உயிரை விட்டன. 82 குழந்தைகளும் இறந்தன.

Image Courtesy

#14

#14

முகாமில் அடைக்கப்பட்டிருந்த பெண்களில் 157 பேர் மற்றும் அப்போது கருவில் இருந்த குழந்தைகள், கைக்குழந்தைகளாக இருந்தவர்கள் என 17 பேர் என ஒரு சிறிய கூட்டம் தப்பி தங்கள் லிடிசி கிராமத்திற்கே வந்தார்கள்.

முற்றிலுமாக சிதைக்கப்பட்ட தங்கள் கிராமத்தை மீண்டும் உருவாக்க ஆரம்பித்தார்கள்.

Image Courtesy

#15

#15

இந்த கொடூர சம்பவத்தில் 7 குழந்தைகள் தப்பித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சுபிகோவா. தற்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் தான் தப்பித்த கதையை ஒரு முறை விவரித்தார்.

நன்றாக நினைவிருக்கிறது அப்போது எனக்கு ஒன்பது வயது. 1942 ஜூன் ஒன்பதாம் தேதி எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.

Image Courtesy

#16

#16

அப்பாவை வந்து யாரோ இழுத்துச் சென்றார்கள். அதன் பின் அம்மாவும் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். அம்மாவை ராவேன்ஸ்பர்க் என்ற முகாமுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னார்கள். போலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளோடு குழந்தையாக என்னை ஏற்றினார்கள். என்னுடன் என் அண்ணன் ஜோசப் இருந்தான். அவனுக்கு வயது பதினைந்து.

Image Courtesy

#17

#17

நாங்கள் மிகவும் பயத்தில் இருந்தோம். எல்லாரும் அழுது கொண்டேயிருந்தோம். அப்போது தான் முதன் முதலாக பசி.... சாப்பாடு கொடுங்கள் என்று அழுதேன்.நன்றாக இருந்தவர்கள் திடீரென்று சாப்பாடு இல்லை, அம்மா அப்பா இல்லை, உடை இல்லை எங்கோ யாரோ அழைத்துச் செல்ல அழுது கொண்டே சென்று கொண்டிருந்தோம்.

Image Courtesy

#18

#18

89 குழந்தைகளில் 7 குழந்தைகள் தப்பித்திருக்கிறார்கள் அவர்களில் சுபிகோவாவும் ஒருவர். நான் பார்க்க ஜெர்மன் குழந்தையை போல இருந்திருப்பேன் போல நீள நிறக் கண்கள் பொன்னிறமான முடி என இருந்ததால் என்னை ஓர் ஜெர்மானியப் பெண்ணாக வளர்க்க தீர்மானித்து போலந்தில் இருக்கக்கூடிய ஒரு ஜெர்மானியருக்கு தத்து கொடுக்கப்பட்டேன்.

என்னுடைய பெயரை இன்கிபோர்க் ஸ்ச்சில்லர் என்று மாற்றினார்கள்.

Image Courtesy

#19

#19

பதினைந்து வயது வரை தான் குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். என் அண்ணன் ஜோசப்புக்கு அப்போது தான் பதினைந்து வயது முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.

ஜெர்மானிய வீரர்கள் அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்பதை கண்டுபிடித்தார்கள். அவ்வளவு தான் சுட்டுக் கொல்லப்பட்டான் என் அண்ணன்.

Image Courtesy

#20

#20

பல ஆண்டுகள் கழித்து தான் , என்னுடன் ஓடியாடி விளையாடிய என் நண்பர்கள் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்ட தகவல் எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் வளர்ந்தது விவரம் தெரிய ஆரம்பித்ததும், என்னை பெற்றத் தாயை காண ஆசை கொண்டேன். என்னை தத்தெடுத்தவர்கள் அனுமதியுடன் என் அம்மாவைக் காண புறப்பட்டேன்.

Image Courtesy

#21

#21

அம்மாவை எளிதாக அடையாளம் கண்டு கொண்டேன் ஆனால் எங்களால் பேசிக் கொள்ளத்தான் முடியவில்லை. நான் ஜெர்மன் மொழியை மட்டும் தான் பேசுகிறேன். லிடிசி பேசிக் கொண்டிருந்த எங்கள் செஸ்ஜக் என்ற மொழியை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தேன். அம்மாவுக்கு ஜெர்மன் மொழி சுத்தமாக தெரியவில்லை.

மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். அப்போது அம்மா சொன்னார். நீ எங்காவது உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பாய் என்று நம்பினேன். இப்போது என் கண் முன்னால் வந்து விட்டாய்.

Image Courtesy

#22

#22

அதன் பின்னர் இந்த பெரும் துயரத்திலிருந்து மீண்டு, தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் சுபிகோவா. லிடிசியில் நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார்.

இறந்து போன 82 குழந்தைகளின் நினைவாக அவர்களின் சிலை நிறுவப்பட்டு ரோஸ் கார்டன் உருவாக்கப்பட்டது. அதனை சுபிகோவும் அவருடன் இதே நிகழ்வில் தப்பித்த இன்னொருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள்.

Image Courtesy

#23

#23

இந்த குழந்தைகளின் சிலைகளை முழுவதுமாக முடிப்பதற்கு இருபது வருடங்கள் வரை ஆகியிருக்கிறதாம். இதனை மேரி உச்சிடிலோவா என்ற கலைஞர் வடிவமைத்திருக்கிறார். இதன் வடிவமைப்பு பணிகளின் பாதியிலேயே உயிரையும் விட்டார். அதன் பின்னர் பிற கலைஞர்கள் சேர்ந்து தான் இந்த 82 குழந்தைகளின் சிலையை முழுமைபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த வெண்கலச் சிலைகள் இதுவரை நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள் ஒன்றின் சாட்சியாக நிற்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

82 Children were murdered in gas chambers

82 Children were murdered in gas chambers
Story first published: Thursday, January 25, 2018, 14:00 [IST]
Subscribe Newsletter