மாணவிகளை கற்பழித்து, பிறப்புறுப்பை சிதைத்துக் கொலை செய்த பள்ளி ஆசிரியர் - சீரியல் கில்லர்!

Posted By: Staff
Subscribe to Boldsky
காதலை ஏற்கவில்லை என்ற காரணத்தால் சீரியல் கில்லரான ஒருவன்- வீடியோ

நூற்றுக்கணக்கான மக்களை, இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்த கயவர்கள் இவர்கள். இவர்களில் சிலரது கொலை செய்யும் முறை மற்றும் கற்பழித்து கொன்ற பிறகு இவர்கள் செய்த காரியங்கள் பற்றி அறிந்தால்... இன்று இரவு உங்கள் உறக்கம் நிச்சயம் களவாடப்படும்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தும் ஒரு பெண் தனது காதலை ஏற்கவில்லை என்ற காரணத்தால் சீரியல் கில்லரான ஒருவன். மதிப்பிற்குரிய ஆசிரியர் வேலை செய்துக் கொண்டே தன்னிடம் பயிலும் இளம்பெண்களை கற்பழித்து, பிறப்புறுப்பை சிதைத்து கொலை செய்த சீரியல் கொலையாளன் ஒருவன்... என மிகவும் விசித்திரமான சீரியல் கில்லர்கள் இவர்கள் ஏழ்வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெட்ரோ அலோன்சோ லோபஸ்

பெட்ரோ அலோன்சோ லோபஸ்

வரலாற்றில் பெரும் கொடிய சீரியல் கொலைகாரன் என்று அறியப்படுபவன் இந்த பெட்ரோ அலோன்சோ லோபஸ். இவன் முன்னூறுக்கும் மேற்பட்ட நபர்களை கொன்றுள்ளான் என்று ரெக்கார்டுகள் மூலம் அறியப்படுகிறது. இவனை மான்ஸ்டர் ஆப் தி என்ட்ஸ் என்றும் அழைத்து வந்துள்ளனர்.

இளம் வயதிலேயே சிறை சென்று, விடுதலையும் ஆனவன். ஆனால், விடுதலையாகி வந்த பிறகே இவன் சீரியல் கில்லர் ஆனான். இவன் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து கடத்தி கொன்று வந்துள்ளான்.

இளம் பெண்களை கடத்திய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, முதலில் கற்பழித்துவிடுவானாம். பிறகு, உடன்பட வில்லை எனில் அவர்களை கொன்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் என்று கூறப்படுகிறது.

Image © Wikipedia

மாயம்!

மாயம்!

ஒருமுறை பெட்ரோ ஒன்பது வயது சிறுமியை கடத்தி சென்றான். அப்போது அயகோஸ் (Ayachucos- பெரூ நாட்டை சேர்ந்த ஒரு நகரம்) மக்களால் பிடிபட்டான். அந்த மக்கள் இவனை உயிருடன் புதைக்க வேண்டும் என்று கருதினார்கள். ஆனால், கடைசியில் இவன் கொலம்பியா அனுப்பி வைக்கப்பட்டான். அங்கும் இவர் தொடர்ந்து கொலைகள் செய்து வந்தான். 70வதுகளில் மீண்டும் இவன் பிடிப்பட்டான். இந்த முறை காவல் துறை இவனை பிடித்தது. அப்போது தான் இவன் 57 பேரை கொலை செய்த தகவல் அறியப்பட்டது.

அதன் பிறகு 110 பேரை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தான். இதற்காக அவனுக்கு 14 வருட சிறை தண்டனை கிடைத்தது. அதன் பிறகு விடுதலையான பெட்ரோ எங்கே சென்றான் என்ன ஆனான் என்பது குறித்த எந்த தகவலும், தடயமும் இல்லை.

டாக்டர் ஹரோல்ட் ஷிப்மேன்!

டாக்டர் ஹரோல்ட் ஷிப்மேன்!

ஆங்கில மருத்துவரான டாக்டர் ஹரோல்ட் ஷிப்மேன் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 200க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளார். இவரை 2000ம் ஆண்டு தான் கஸ்டடியில் எடுத்தனர். 70களில் இருந்து டாக்டர் ஷிப்மேன் தன்னிடம் வந்த நோயாளிகளை குறி வைத்து கொலை செய்துள்ளார்.

மேலும், அந்த நோயாளிகள் இறந்ததற்கு வேறு காரணம் கூறி போலி ஆவணமும் தயார் செய்துள்ளார் ஷிப்மேன்.

Image © Wikipedia

தற்கொலை!

தற்கொலை!

அளவுக்கு அதிகமாக மோர்ஃபைன் கொடுத்தே இவர் நோயாளிகளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஷிப்மேன் வீட்டில் ரைடு நடத்திய போது, பல கொலைகளுக்கான ஆவணங்கள் கிடைத்தன. 2003ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷிப்மேன் ஜனவரி 21, 2004 அன்று சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

ஹென்றி லீ லூகாஸ்

ஹென்றி லீ லூகாஸ்

1960-70களில் ஹென்றி நூற்றுக்கணக்கான பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த இடைப்பட்ட பத்து வருடங்களில் ஹென்றி தனது சகோதரன் மற்றும் இரத விலங்குகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் குற்றம் கூறப்பட்டிருந்தது. தனது வாழ்வின் பெரும்பங்கை இவன் சிறையில் தான் கழித்தான்.

Image © Wikipedia

சிறையில் மரணம்!

சிறையில் மரணம்!

1960-களில் தனது தாயை கொலை செய்த குற்றதிர்ககா பத்தாண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பிறகு அபாயகர ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும், பல கொலைகள் செய்ததற்காகவும் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஹென்றி 18 ஆண்டுகால சிறை தண்டனையின் போது சிறையிலேயே இறந்து போனான்.

ப்ரூனோ லுட்கே

ப்ரூனோ லுட்கே

இவன் ஜெர்மனை சேர்ந்த சீரியல் கில்லார் ஆவான். தனது வாழ்நாளில் இவன் 80 பேரை கொலை செய்திருந்தான். இதில் பல கொலைகள் இரண்டாம் உலகப் போரின் போது செய்யப்பட்டவை ஆகும்.

தனது 18வது வயதில் இருந்து ப்ரூனோ லுட்கே கொலை செய்து வருகிறான். இவர் பெண்களை வேடிக்கைப் பார்ப்பது, அவர்களை இறக்கும் வரை கழுத்தை நெரித்து கொள்வது போன்றவற்றை விரும்பி செய்து வந்தான். பல பெண்களை கொன்று இறந்து பிணத்துடன் உடலுறவு கொண்டும் வந்தான்.

Image © Wikipedia

நாசி படை!

நாசி படை!

ஜனவரி 29, 1943 அன்று ஃபிரடா ரோச்னர் என்ற பெண்ணை கொலை தான். இதுதான் ப்ரூனோ செய்த கடைசி கொலை. கைதான போது இவன் 85 பெண்களை கொலைகள் செய்ததாகவும், கற்பழித்ததாகவும் கூறப்பட்டது. இவன் நாசி படையின் கீழ் இருந்ததாகவும் தகவல்கள் அறியப்பட்டிருந்தன. இவன் ஏப்ரல் 8, 1944ல் மரணம் அடைந்தான்.

பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ

பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ

பிரேசிலை சேர்ந்த பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ மிக அபாயகரமான மற்றும் கொடூரமான சீரியல் கில்லர் என்று பெயர் பெற்றவன். இவன் 70 பேரை கொலை செய்திருந்தான். தனது 14வது வயதில் முதல் கொலை செய்தான் பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ.

Image © Wikipedia

18ல், 10!

18ல், 10!

18 வயதிற்குள் பத்து கொலைகள் செய்திருந்தான். பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோவின் தந்தை இவனது தாயை கொலை செய்திருந்தார். இதற்கு பழிவாங்க வேண்டும் என்று தந்தையை கொண்டு அவரது இதயத்தை தின்று விட்டான் பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ.

இவனது சீரியல் கொலை 2003ல் தான் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. 70 கொலை செய்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட பெட்ரோ ரோட்ரிகஸ் ஃபிலிஹோ, சிறையில் நாற்பது சிறைவாசிகளை கொலை செய்தான்.

டெட் பண்டி

டெட் பண்டி

டெட் பண்டி சீரியல் கில்லர் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவன். இவன் ஒரு புத்திக் கூர்மை சார்ந்தவனும் கூட. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி டிகிரி 1972ல் முடித்தவன்.

1970-களில் இவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண் காதலை ஏற்காத காரணத்தால் அவரை கொலை செய்துவிட்டான். அதன் பிறகு பலரை தொடர்ந்து கொலை செய்ய துவங்கினான். காவலர்களிடம் இருந்து பலமுறை தப்பித்தான்.

Image © Wikipedia

மரண தண்டனை!

மரண தண்டனை!

ஒருமுறை சிறையில் இருந்து சிறிய துளையிட்டு அதன் வழியாக தப்பிக்க முயன்று சிக்கினான். அதன் பிறகே இவனுக்கு இரட்டை மரண தண்டனை அளிக்கப்பட்டது.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்க நினைத்தான் டெட். கடைசியாக இவனுக்கு 1989ல் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆண்ட்ரி சிகிட்டிலோ

ஆண்ட்ரி சிகிட்டிலோ

பட்ச்சர் ஆப் ரோஸ்டோவ் என்று அழைக்கப்பட்டு வந்தவன் ஆண்ட்ரி சிகிட்டிலோ. இவன் ஒரு சோவியத் கொலைக்காரன் மற்றும் பள்ளி ஆசிரியரும் ஆவான். பள்ளியில் இருந்து செல்லும் போது இளம் மாணவர்களை கொலை செய்து வந்தான்.

80-களில் இவர் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பலரை கொலை செய்து ஆளில்லாத இடத்தில் உடல்களை புதைத்து வந்தான். தான் கடத்தும் மாணவர்களை எல்லாம் கற்பழித்து கொலை செய்து வந்தான் ஆண்ட்ரி சிகிட்டிலோ.

Image © Wikipedia

கொடூரம்!

கொடூரம்!

கொலை செய்வது மட்டுமின்றி அவர்களது பிறப்புறுப்பை உருச்சிதைவு செய்து, கண்கள் பிடுங்கி எடுத்து வந்தான். கொலை நடந்த சம்பவங்களில் எல்லாம் நரை முடி பொதுவாக கண்டெடுக்கப்பட்டது.1990களின் இறுதி வரை இவனது தொடர் கொலைகள் நடந்துக் கொண்டே இருந்தன. ஒருமுறை இவனது வினோதமான குணாதிசயங்களை கண்டு சந்தேகத்தின் பெயரில் போலீஸ் இவனை கைது செய்து விசாரித்த போதுதான், இவனது கொலைகள் குறித்த உண்மைகள் வெளிவந்தன.

1992ல் நீதிமன்றத்தில் விசாரணையின் போது மிக விசித்திரமாக நடந்துக் கொண்டான். ஜிப்ரிஷ் பேசுவது, தனது ஆணுறுப்பை ஆட்டுவது எனது கூடியிருந்த மக்கள் மற்றும் நீதி அரசர், வழக்கறிஞர் என பலரையும் திசை திருப்பினான். கடைசியாக இவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இவனை தலையில் சுட்டு 1994 பிப்ரவரியில் கொன்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Tales of Infamous Serial Killers.

7 Tales of Infamous Serial Killers. Which Will Not Let You Sleep Tonight