Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
இந்தியாவின் டாப் டக்கர் இன்ஜினியர்களின் அபூர்வ திறமைகள்!
இந்தியாவின் டாப் டக்கர் இன்ஜினியர்களின் அபூர்வ திறமைகள்!
இதெல்லாம் நீங்க அப்பப்போ... ஃபேஸ்புக் வாட்ஸ்அப்ல பார்த்த படமா தான் இருக்கும். அதை எல்லாம் ஒண்ணா எடுத்து வெச்சு பார்க்குறப்ப நமக்கு தெரியிற ஒரே விஷயம் என்னன்னா? கண்டிப்பா இந்த கட்டிடங்கள கட்டின இன்ஜினியர்கள் எல்லாம்... "கட்டிமுடிக்கப்படாத கல்லோரிகள்ல பணக் கட்டுகள் கொட்டிப் படிச்சு வெளிவந்தவங்களா இருக்கலாம்ன்னு மட்டும் தெரியுது.
இப்படி வெளிவந்த இன்ஜினியர்களோட தந்திர, மந்திர ஜாலத்தில் கட்டி எழுப்பப்பட்ட டாப் டக்கர் கட்டிடங்கள தான் இந்த தொகுப்பில் நாம ஒட்டுமொத்தமா பார்க்கப்போறோம்...
அதே போல இந்த படத்த எல்லாம் பார்க்கும் போது சில சமயங்கள... நம்ம அரசு மக்களுக்காக கடந்த ஒரு வருஷம்மா பயனுள்ளதா என்னவெல்லாம் பண்ணாங்கன்னு உங்க கண்ணு முன்னாடி வந்து போனா... நானும் உங்க சகோதரனே....

எதுக்கு?
இந்த படிக்கட்டுல ஏறி மேல போகவும் முடியாது, கீழ இறங்கவும் முடியாது. ஆனால், இதுல ஒரு சிறப்பு இருக்கு. இந்த மாடல் படிக்கட்டுகள ஜெயில்ல யூஸ் பண்ணிக்கலாம். கைதிங்க யாரும் எளிதா தப்பிச்சிட முடியாது பாருங்க....

இதெல்லாம் புதுசா...
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஆட்சி மாறுவது போலவே, நமது நாட்டில் புதிய சாலைகளும் போட முடியும். ஆனால், இது சாதனை அல்ல, வேதனை. ஆங்கிலேய ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் ஐம்பது ஆண்டுகள் ஆனபோதிலும், இந்தியாவின் பல பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்த போது, அதை பெயர்த்து எடுக்க முடியாமல் மெஷின்கள் கொண்டு இடித்து, புதிய சாலை போடப்பட்டது.
ஆனால், நமது அரசு போடும் சாலையோ, ஒரு நாள் மழையில் மொத்தமாக அடித்துக் கொண்டு போய்விடுகிறது.

மரம் வளர்ப்போம்!
ஹைவேஸ்ல இருக்க மரத்தை எல்லாம் வெடுக்கு, வெடுக்குன்னு புடிங்கிட்டு... இதோ ரயில்வே டிராக்குல மரம் வளர்ப்போம் திட்டத்தை செயல்படுத்தி இருக்காங்க. இந்த ஆட்சி எதுக்கு இருக்குங்கிற கேள்விக்கும், இந்த மரம் இங்க எதுக்கு இருக்குங்கிற கேள்விக்கும் ஒரே பதில்... சிம்ப்ளி வேஸ்ட். நோ கமெண்ட்ஸ்.

தம்பி இங்க வாங்க...
இந்த கழிவறை கட்டிய தம்பிய கூப்பிடுங்க... தம்பி இங்க வாங்க யாரும் அடிக்க மாட்டாங்க... கிரேட் காளிக்கே இது எட்டாதே... அப்பறம் எதுக்கு இப்படி கட்டி வெச்சிருக்காருன்னு தெரியல...

இதுவுமா...
ஒருவேளை அந்த கழிவறை கட்டிய தம்பி தான் இங்க டெக்னிஷியன் வேலை பாத்திருக்கணும்.ஆனா ஒன்னு இந்த சுவிட்சு பாக்ஸ் கண்டிப்பா கிரேட் காளிக்கு எட்டும். ஒரு வேளை, மறந்து மாட்டிட்டு வந்திட்டாரோ... ஒரே குஷ்டமப்பா...

சத்திய சோதனை!
அங்க என்ன ஒலிம்பிக் ரேஸ் வேகத்துலயா ஓட போறாங்க... அப்படியே இருந்தாலும், கால்தடுக்கி விழுந்து சாகவா இந்த ஸ்பீடு பிரேக்கர். என்னப்பா நீங்க இப்படி பண்றீங்க. ஆனாவொன்னு... இப்படியே போனா நம்ம நாடு கண்டிப்பா வல்லரசு ஆகுதோ இல்லையோ, வல்லரசு படத்தோட ரிசல்ட் மாதிரி ஆகிடும்!!!!

டைம் டிராவலர்!?
ஒருவேளை இந்த தம்பி டைம் டிராவலரா இருப்பரோ... அப்படியே இருந்தாலும், டைம் தப்பா இருந்தா எப்படி போய் லேண்டிங் ஆவாப்புல. ஏம்பா தப்பு பண்ணாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? அதென்ன 9:79

ஒன்ஸ் மோர்!
நீங்க பெங்களூர் போனீங்கன்னா ஒன்னு பார்க்கலாம். ஊருல அங்கங்க... வீடுகளுக்கு நடுவுல மரம் இருக்கும். காம்பவுண்டு சுவற்றுக்கு நடுவே, பால்கனி நடுவே மரம் வளர்ந்து நிற்கும். மரம் அப்படி வளரவில்லை. மரத்தை வெட்டாமல் கட்டிடம் கட்டியிருப்பார்கள்.
ஆனா, அவங்களுக்கு கூட இப்படி ஒரு யோசனை வராது... சும்மாவே நம்ம பயலுக குடிச்சுட்டு வண்டி ஓட்டி முட்டிக்கிட்டு நிப்பாங்க. இப்படி எல்லாம் பண்ணா எப்படி? ரோட்டுக்கு சைடுல இருக்க மரத்த வெட்ட வேண்டாம்ன்னு சொன்ன... ஃபூல்ஸ் ரோட்டுக்கு நடுவுல இருக்க மரத்த வெட்டாம போயிருக்காங்க.

அடடே!!!!
நம்ம ஊர்ல கார்பரேஷன் கக்கூஸ்ல கதவு தான் இருக்காது... இதோ இங்கே நடுவுல சுவரே இல்லை. அதுலயும் நடுவுல அந்த தடுப்பு வேற லெவல். மொச்சைய மொச்சக்கு, மொச்சக்குன்னு எவனாச்சும் மேஞ்சுட்டு வந்தா கதி என்ன ஆவுறது..? இவங்கள எல்லாம் என்ன சொல்றது.

ஜஸ்ட் மிஸ்...
திரும்பவும் எய்ம் பண்றார்... ஆனா ஜஸ்ட் மிஸ் ஆயிடுறது... அதே சிச்சுவேஷன் தான். கரக்டா எய்ம் பண்ணி முன்னாடி தான் வெச்சுருக்காரு... ஆனா என்ன... கொஞ்சம் மிஸ் ஆயிடுத்து. சரி! அடுத்த டைம் கரக்ட்டா வெச்சு செஞ்சுடுவாப்பால...

காலேஜ் பரிதாபங்கள்!
சில பல காலேஜ் லேப்ல இத நாம கண்கூட பார்க்க முடியும். இதுமாதிரி எசக்கபிசக்க பண்ணி வெச்சுடுவாங்க. ஏம்பா... மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டுயேப்பா...

மறுக்கா.... மறுக்கா...
போன ரோட் இன்ஜினியர் கூட பரவால... இந்த இடத்துல இருந்து ஒருத்தன் கீழ விழுந்தானா... ஒரு எலும்பு கூட தேறாதே... ஆகமொத்தம் நம்ம தர்மாகோல் மாதிரி, எதுக்கு பண்றோம், ஏன் பண்றோம்ன்னு தெரியாம எல்லாத்தையும் பண்ணிட்டு... மத்தவங்க மேல தப்பு சொல்லிட வேண்டியது. எல்.கே.ஜி. பசங்களா!

எல்லாத்துலயும் அவசரம்!
அரசு அறிவிக்கிற சில திட்டங்கள்... ஏன், எதுக்குன்னு தெரியாது... கூட்டி கழிச்சு பார்த்தா... அது பொது மக்களுக்கு பயனுள்ளதாவும் இருக்காது. அதுக்குள்ள எதாவது உள்குத்து மட்டும் தான் இருக்கும். ஆனால், இந்த இன்ஜினியர் கட்டி வெச்சிருக்க இந்த டவர்ல ஊமைக்குத்து தான் இருக்கு.

தண்ணீரை வீணாக்காதீர்!
சில கவர்மென்ட் ஹாஸ்ப்பிட்டல் போனீங்கன்னா... அங்க டாக்டர் பார்க்க வேண்டிய வேலை எல்லாம், செகன்ட் இயர் படிச்சிட்டு இருக்க காலேஜ் பசங்க பார்த்துட்டு இருப்பாங்க. அந்த மாதிரி காலேஜ் படிச்சுட்டு விளையாடிட்டு இருந்த பயபுள்ளய கூட்டியாந்து சின்ன வேலை தான்.. கொஞ்சம் செஞ்சு கொடுத்திட்டு போன்னு சொல்லிருபாங்க போல... நல்ல செம்மையா கட்டிக் கொடுத்திட்டு போயிருக்காருகாப்புல...

சிம்ப்ளி வேஸ்ட்!
உண்மைய சொல்லணும்னா இதுக்கு தான்... நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் 100% ஒத்துப்போகும். பேச்சுலர் ரூமா இருந்தாக் கூட இத யூஸ் பண்ண முடியாதே... இத வேற எங்க தான் யூஸ் பண்ண முடியும்.?
இன்னும் இந்த மாதிரி நிறையா இருக்கு... ஆனா இதுக்கே கண்ணக் கட்டுது... முடியல.!!!!



Click it and Unblock the Notifications
