தன்சானியா பழங்குடியினரின் வினோதமான பழக்கத்தை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் பழங்குடியும் சொந்த வரையறை மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். அதில் சில பழங்குடியின மக்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் விநோதமானதாக இருக்கும்.

அந்த வகையில் தன்சானியா பழங்குடியின மக்களிடம் ஓர் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் இருப்பதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. அது என்னவெனில், பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வது. இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.

உள்ளூர் பாரம்பரியம்

உள்ளூர் பாரம்பரியம்

உள்ளூர் பாரம்பரியத்தின் படி, இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்வார்களாம். அதுவும் குழந்தைக்காக மட்டுமே ஆண்களை திருமணம் செய்து கொள்வார்களாம்.

திருமணமான தம்பதிகள்

திருமணமான தம்பதிகள்

இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொண்ட பின், ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருவார்களாம். இந்த பழங்குடியினருக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி தெரியாது. ஆகவே உடலுறவில் ஈடுபடமாட்டார்களாம்.

பெண்கள் தான் தனக்கான ஆணை தேர்ந்தெடுப்பார்கள்

பெண்கள் தான் தனக்கான ஆணை தேர்ந்தெடுப்பார்கள்

இந்த பழங்குடியினரின் வழக்கப்படி, பெண்கள் தனக்கான ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பார்களாம். அதுவும் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே. குழந்தை பிறந்த பின், ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிடுவார்களாம். பின் பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து, இருவரும் சேர்ந்து குழந்தையை வளர்ப்பார்களாம்.

ஏன் இப்படி ஒரு பழக்கம்?

ஏன் இப்படி ஒரு பழக்கம்?

இந்த பழங்குடியினர் இப்படியொரு பழக்கத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம், சொத்து தன்னை விட்டு செல்லக்கூடாது என்பதற்காகவாம். ஒருவேளை குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பதற்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றனர். என்ன ஒரு வினோதமான பழக்கம் என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Marry Each Other In This Tribe!!

Women from Tanzanian tribe marry each other to defeat Patriarchy and this tradition has been followed since years. To know more, read on.
Story first published: Monday, May 8, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter