20 பேய்களுடன் கலவி இன்பம் கொண்டதாக கூறும் அமானுஷ்யப் பெண்!

Posted By:
Subscribe to Boldsky

வடிவேலு: "பேய் இருக்கா இல்லையா...? இல்ல இருக்குறதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா..."

ரஜினி: "முருகேஷா......"

பேய் இருக்கிறது என்பதை அறிய என்னென்ன அறிகுறி இருக்கிறது என்பதை சந்திரமுகியில் ரஜினி கூறிவிட்டார். ஆனால், இங்கே ஒரு பெண் பேயுடன் கலவி இன்பம் கொண்டு வருவதாகவும். எனக்கான வாழ்க்கை துணை ஒரு பேயாக தான் இருக்க முடியும். எனக்கு மனித வாசிகளான ஆண் துணை தேவையில்லை என கூறியிருக்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், இவர் கடந்த 12 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட பேயுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இந்த பெண் கூறிய விஷயங்கள் சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினாலே பலரும் மூஞ்சியில சுடுதண்ணி புடிச்சு ஊத்திடுவேன்... என கோபித்துக் கொள்வார்கள்.

ஆனால், அமேதிஸ்ட் ரியல்ம் எனும் இந்த பெண் கூறும் கூற்றுக்கு ஆம், இப்படி எல்லாம் நடக்க சாத்தியம் இருக்கிறது என ஒரு பிரிவினரும். இது அறிவியல் ரீதியாக சாத்தியமே இல்லை என பிரிவினரும் விவாதித்து வருகிறார்கள்.

அப்படி என்ன தான் நடந்தது பெண்ணின் வாழ்க்கையில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமேதிஸ்ட் ரியல்ம்

அமேதிஸ்ட் ரியல்ம்

அமேதிஸ்ட் ரியல்ம் (Amethyst Realm), இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியல் வாழ்ந்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளில் இவர் இருபது பேய்களுடன் கலவி இன்பம் கண்டதாக கூறியுள்ளார். பேய்களுடன் கலவிய பிறகு, அமேதிஸ்ட் ரியல்ம் சாதாரண மனித ஆண்களுடன் கலவியில் ஈடுபட விருப்பம் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

Image Source: Youtube

27 வயது!

27 வயது!

27 வயதே ஆன அமேதிஸ்ட் ரியல்ம் ஒரு ஆன்மீக வழிகாட்டும் ஆலோசகராக இருந்து வருகிறார். இவர் பிரிட்ஸ் மார்னிங் ஷோவான ஐ.டிவி திஸ் மார்னிங் எனும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இதுப் போன்ற தகவல்களை கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன்...

12 ஆண்டுகளுக்கு முன்...

இம்மாதிரியான பேய்களுடனான கலவுதல் 12 ஆண்டுகளுக்கு முன் தான் முதல் முறையாக நடந்தது என கூறுகிறார் அமேதிஸ்ட் ரியல்ம். இவர் கூறுவதை பார்க்கும் போது, ஏறத்தாழ இவரது 15வது வயதில் முதல் முறை பேயுடனான உறவுக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

Image Credit : maxpixel

புதிய வீடு!

புதிய வீடு!

அப்போது தான் அமேதிஸ்ட் ரியல்ம் தனது புதிய வீட்டுக்கு குடி புகுந்துள்ளார். குடியேறிய சில நாட்களிலேயே அங்கே அமானுஷ்யமாக ஏதோ நடப்புது போல உணர்ந்துள்ளார். அப்போதே அங்கே பேய் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தேன் என்கிறார் அமேதிஸ்ட் ரியல்ம்.

Image Credit : maxpixel

எனர்ஜி!

எனர்ஜி!

ஆரம்பத்தில் பேய்கள் இருப்பதற்கான எனர்ஜியை உணர்ந்ததாகவும். பிறகு உடல் ரீதியாகவும் அவற்றின் இருப்பை உணர்ந்ததாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியல் கூறியுள்ளார் அமேதிஸ்ட் ரியல்ம். பேய்கள் தன்னை நெருங்கும் போது, தனது கீழ் உடலில் அழுத்தமும், கழுத்து பகுதியில் யாரோ சுவாசிப்பது போன்ற உணர்வும் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Image Credit : maxpixel

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

பெரும்பாலும் பேய்கள் என்றால் பாதுகாப்பு இருக்காது என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்த பேய்களுடன் நான் பாதுகாப்பை உணர்ந்தேன். நான் அப்போது தான் பேயுடன் கலவியில் ஈடுபட்டேன். அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், எப்படி விவரிப்பது என தெரியவில்லை. அது கடினமானது என்கிறார் அமேதிஸ்ட் ரியல்ம்.

Image Credit : maxpixel

அறிகுறிகள்!

அறிகுறிகள்!

பேய்கள் தன்னுடன் இணையும் போது சில சமயம் எடை அதிகரிப்பது போன்ற உணர்வு வரும், மூச்சுக் காற்று, வருடுதல், என் மீது ஒரு எனர்ஜி பாஸ் ஆவது போன்ற அறிகுறிகள் தென்படும் என அமேதிஸ்ட் ரியல்ம் தனது பேயுடனான கலவி அனுபவம் குறித்து அந்த தொலைக் காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.

Image Credit : maxpixel

3 வருடத்திற்கு முன்...

3 வருடத்திற்கு முன்...

இப்படியாக பேய்களுடனான கலவி உறவில் இணைந்துள்ளார் அமேதிஸ்ட் ரியல்ம். மூன்று வருடகளுக்கு முன்னர் அமேதிஸ்ட் ரியல்ம் பேயுடன் கலவுதலை இவரது பியான்ஸி கண்டுள்ளார். ஒரு நாள் வேலை முடித்து கொஞ்சம் விரைவாக வீடு திரும்பிய போது தனது பியான்ஸி இந்நிகழ்வை கண்டதாக அமேதிஸ்ட் ரியல்ம் தெரிவித்துள்ளார்.

Image Credit : maxpixel

ஒரு மாய உருவம்...

ஒரு மாய உருவம்...

தனது பியான்ஸி கண்ட போது, ஜன்னல் வழியே ஒரு மாய உருவத்தின் நிழல் ஆடியது போல கண்டதாகவும். இந்த ஆன்மீக காதல் நிகழ்வின் மத்தியில் ஒரு நிழல் போன்ற உருவத்தை அவர் கண்டு அச்சம் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுக்குறித்து அவரது பியான்ஸி யாரிடமும் கூறுவதில்லை என்கிறார் அமேதிஸ்ட் ரியல்ம்.

Image Credit : maxpixel

20 பேய்கள்!

20 பேய்கள்!

இந்த நிகழ்வுக்கு பிறகு இருபது பேய் காதலர்களுடன் கலவி இன்பம் கண்டதாகவும்., இதன் பிறகு மனிதர்கள் மீதான ஆசையே போய்விட்டது என்று கூறுகிறார் அமேதிஸ்ட் ரியல்ம். பிறகு இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்... குழந்தை எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Image Credit : maxpixel

குழந்தை?

குழந்தை?

பிறகு எப்படி குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்? பேயுடனான உறவில் குழந்தை எப்படி சாத்தியம்? குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதே என கேள்வி எழுப்பிய போது. இதுவும் சாத்தியம் தான் என்றும். தான் பேன்தம் கருத்தரிப்பு (phantom - மறைமுக / பூத, பிசாசு) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார் .

Image Credit : maxpixel

கர்ப்பமாயை!

கர்ப்பமாயை!

பேன்தம் கருத்தரிப்பு என்பது ஒரு கர்ப்பமாயை (pseudocyesis) ஆகும். இதை ஒரு சைக்காலஜி நிகழ்வு என்பார்கள். இந்த நிகழ்வின் போது பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக எண்ணுவார்கள். ஆனால், அவர்கள் கர்ப்பமாக இருக்க மாட்டார்கள். இதன் போதும் கர்ப்ப அறிகுறிகள் தென்படும். ஆனால் அவை போலியாக இருக்கும் என்கிறார்கள். இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இவற்றை பரானார்மல் ஆக்டிவிட்டி என கருதுகிறார்கள்.

Image Credit : maxpixel

இவர்க்கு முன்...

இவர்க்கு முன்...

அமேதிஸ்ட் ரியல்ம் தான் இது போல கூறும் முதல் நபர் அல்ல,. இவருக்கு முன் அயல்நாட்டு பாடகர்கள் பாபி பிரவுன் மற்றும் கீஷா போன்றவர்களும் தாங்கள் சூப்பர்நேச்சுரல் செக்ஸ் கொண்டதாக கூறியிருந்தனர். பேய்கள் குறித்த ஆராய்ச்சி செய்பவர்கள் இது உண்மை தான் என்றும் கூறுகிறார்கள்.

Image Credit : maxpixel

அறிகுறிகள்!

அறிகுறிகள்!

பேயுடன் செக்ஸ் கொண்டதாக கூறும் நபர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் கூறுகிறார்கள். அழுத்தம் உணர்ந்தோம், சூடான மூச்சு காற்று படர்ந்தது என கூறியுள்ளனர். இது குறித்து அலக்சாண்டர் ஹோல்சர் எனும் பேய்கள் ஆராய்ச்சி நிபுணரும் கூறியுள்ளார்.

Image Credit : maxpixel

ஸ்லீப் பாரலிசிஸ்!

ஸ்லீப் பாரலிசிஸ்!

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இது பேய்களுடன் செக்ஸில் ஈடுபடும் நிகழ்வல்ல. இது ஒருவகையான ஸ்லீப்பிங் பாரலிசிஸ் என்றும். அல்லது பிரமையாக கூட இருக்கலாம். இதற்கு இவர்களது மன அழுத்தம், பதட்டம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

பேய் தேடி...

பேய் தேடி...

அமேதிஸ்ட் ரியல்மை பலர் வெறுத்தாலும். இவர் இப்படியான வாழ்க்கையில் தான் ஆக்டிவாக வாழ்ந்து வருகிறார். மற்றும் தனக்கான சிறந்த பேய் துணையையும் தேடி வருகிறார் அமேதிஸ்ட் ரியல்ம்.

" நான் எனக்கான துணையை (பேய்) தேடுவதாகவும். சரியான துணை கிடைத்தவுடன் வாழ்வில் செட்டிலாகிவிடுவேன். அவருடன் (பேய்) எனது மீத வாழ்க்கையை நடத்துவேன் என்றும் , ஆண்கள் எனக்கு தேவையில்லை" என்றும் அமேதிஸ்ட் ரியல்ம் கூறியுள்ளார்.

Image Credit : maxpixel

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Claims To Have Had Intercourse With 20 Ghosts!

Woman Claims To Have Had Sex With 20 Ghosts!
Subscribe Newsletter