Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
இவர்களில் எந்த கிரிக்கெட் வீரரின் மனைவி மிகவும் அழகானவர்? நீங்களே சூஸ் பண்ணுங்க!
இந்திய கிரிக்கெட் வீரர்களின் அழகிய மனைவியர் - யார் பெஸ்ட்-னு நீங்க செலக்ட் பன்னுங்கள்!
கிரவுண்டில் பெரிய ஆக்ரோஷ அதிரடி வீரர் என்பதை காட்டிலும், வீட்டில் மிகவும் அன்பான, கனிவான கணவன் என்பது தான் ஒரு ஆண் மகனுக்கு பெருமை. இந்தியாவின், கிரிக்கெட்டும் பிரிக்க முடியாத ஒன்று.
மட்டை பிடித்து ஆடியதை காட்டிலும், இல்லறத்தில் விக்கெட் விழுகாமல் சந்தோசமான இல்வாழ்க்கை நடத்தி வரும் அழகான தம்பதிகள் இவர்கள். இவர்களில் உங்களுக்கு பெஸ்ட்டாக தோன்றும் தம்பதி யாருன்னு நீங்களே சொல்லுங்கள்...

#1
சச்சின் - அஞ்சலி : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின்-ன் மனைவி அஞ்சலி ஒரு மருத்துவர். இவரை காட்டிலும் வயதிலும் மூத்தவர். இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு சாரா, அர்ஜுன் என இரண்டு குழந்தைகள். அஞ்சலி குஜராத் தொழிலதிபர் ஆனந்த் மேத்தாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#2
தோனி - சாக்ஷி : கியூட்டான ஜோடி. மிஸ்டர் கேப்டன் கூலை எப்போதும் சில்லென்று வைத்திருப்பவர். அழகான காதல் கதை கொண்டவர்கள். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியுள்ளன. இவர்களுக்கு ஸாரா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

#3
ஷிகர் தவான் - ஆயிஷா : ஷிகர் தவானை விட ஆயிஷா 12 ஆண்டுகள் வயதில் மூத்தவர். ஆயிஷா மெல்பேர்னை சேர்ந்தவர். குத்துச்சண்டை அறிந்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு சாரோவர் எனும் ஆண் குழந்தை இருக்கிறார்.

#4
சுரேஷ் ரெய்னா - பிரியங்கா : இவர்கள் இருவரும் குழந்தை பருவதி இருந்தே நண்பர்கள். சுரேஷ்-ந தாய் மூலமாக தான் இவர்களது திருமண பேச்சு துவங்கியது. பிரியங்கா நெதர்லாந்தில் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆயின. இந்த ஜோடிக்கு கிரேசியா ரெய்னா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

#5
வினோத் காம்ப்ளி - ஆண்ட்ரியா : ஆண்ட்ரியா வினோத்தின் இரண்டாவது மனைவி. இவர் ஒரு ஃபேஷன் மாடல். 2010ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் ஜீசஸ் கிறிஸ்டினோ.

#6
ரோஹித் ஷர்மா - ரித்திகா : ஆறு வருடங்களாக ரோஹித் சர்மாவிடம் மேலாளராக பணியாற்றியவர் ரித்திகா. இருவரும் காதலில் விழவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டனர்.

#7
ஹர்பஜன் சிங் - கீதா : திருமணமாகும் வரை மீடியாவிற்கு தெரியாமலே காதலித்து வந்தார்கள். கீதா மாடலிங்கில் இருந்து நடிக்க வந்தவர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது.

#8
யுவராஜ் சிங் - ஹாசெல் : பாலிவுட் நடிகை ஹாசெலை காதலித்து வந்தார் யுவராஜ். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நிச்சயம் செய்து திருமணம் செய்துக் கொண்டனர்.

#9
கவுதம் காம்பீர் - நடாஷா : இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள். கடந்த 2011 இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

#10
அஸ்வின் - ப்ரீத்தி : சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். 2011-ல் திருமணம் செய்துக் கொண்டனர். தன் குடும்பத்தை பெரிதாக மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்கிறார் அஸ்வின்.



Click it and Unblock the Notifications
