வாஸ்து முறைப்படி உங்களது படுக்கை அறையில் கட்டாயம் வைக்க கூடாத பொருட்கள்!

Written By:
Subscribe to Boldsky

கடவுள் நம்பிக்கை மனதை அமைதியாகவும், நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்கவும் உதவுகிறது. அதே போல வீட்டில் வாஸ்து என்பதும் ஒரு அறிவியல் தான். வீட்டில் சில பொருட்களை இங்கே வைக்க வேண்டும். அங்கே வைக்க கூடாது என்று இருக்கும். இது அறிவியல் சார்ந்ததே. இதனை சரியாக கடைப்பிடித்தால் வளமான வாழ்க்கை வாழ்வது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாம்பிராணி புகை

சாம்பிராணி புகை

வீட்டில் சாம்பிராணி புகை மற்றும் நல்ல நறுமணம் உள்ள அகர்பத்திகளை வீட்டில் ஏற்றி வைக்க வேண்டும். செவ்வாய் கிழமைகளிலாவது கண்டிப்பாக வீட்டிற்கு சாம்பிராணி புகை போட வேண்டும். சாப்பிராணி புகை போடும் போது வெண்குங்கிலியம், சுத்தமான சந்தனம், அகில், தேவதாரு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து சாம்பிராணி உடன் கலந்து புகை போட சிறப்பான பலன் கிடைக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் போக

எதிர்மறை எண்ணங்கள் போக

வீட்டின் தலைவாசலின் இருபுறமும் ஒரு சிறிய கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பினை போட்டு வைத்து விடுங்கள். இதனை காலையில் குப்பையில் போட்டுவிட வேண்டும். இது வீட்டின் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நல்ல சக்திகளை பெருக்கும்.

படுக்கை அறையில் கூடாது

படுக்கை அறையில் கூடாது

ஓடத்தின் படம், உடைந்த பொருட்கள், பழுதடைந்த பழைய பொருட்கள் ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டினுள் எந்த பகுதியிலும் வைக்க கூடாது. படுக்கை அறையில் நீங்கள் தையல் மெஷின், கத்தரிக்கோல், ஊசி, அயர்ன்பாக்ஸ், இரும்பு கட்டில், நீர்வீழ்ச்சி போன்ற படங்கள், மீன் தொட்டி, ஒடத்தின் படம், பழுதடைந்த பழைய பொருட்கள் போன்றவற்றை வைக்க கூடாது.

தீய சக்திகள் ஒழிய

தீய சக்திகள் ஒழிய

மஞ்சள் மற்றும் குங்குமத்திற்கும் எதிர்மறை சக்திகளை அழித்து, நல்ல சக்திகளை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, மஞ்சள் குங்குமத்தை கரைத்து வீட்டின் கதவு, ஜன்னல்களில் தெளித்து விட்டால் தீய சக்திகள் விலகும்.

அதிஷ்டம் தேடி வர

அதிஷ்டம் தேடி வர

உங்களுக்கு அதிஷ்டமும், வாய்ப்புகளும் தேடி வர அன்னாச்சிப் பழம் ஒவியத்தை உங்களது வீட்டில் அல்லது தொழில் நடக்கும் இடத்தில் முன்புற அறைகளில் வரைந்து வைத்தால் அதிஷ்டமும், வாய்ப்புகளும், நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.

மந்திரங்கள்

மந்திரங்கள்

வீட்டில் எப்போதும் மென்மையான இசை ஒலிக்குமாறு இருப்பது சிறப்பு. வீட்டில் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி போன்றவற்றை ஒலிக்க விடுவது நல்லது.

வெளிச்சம் தேவை

வெளிச்சம் தேவை

வீட்டில் வெளிச்சம் எப்போதும் இருக்கும் படியாக இருப்பது நல்லது. இயற்கை வெளிச்சம் கிடைக்காதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

vaastu shastra for home

vaastu shastra for home
Story first published: Tuesday, September 19, 2017, 10:44 [IST]