அமெரிக்க மாகாணங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திரமான சட்டங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும், எந்த நாட்டில் இருந்து தனது பொருளாதரத்தை பெருக்க (அ) தனக்கு தேவையான பெருள் இருக்கிறதோ, அங்கே அசால்ட்டு காட்டி உள்ளே புகுந்து அதகளம் செய்து வரும் நாடு அமெரிக்கா.

The Craziest Laws That Still Exist In The United States

Image Credit : olivialocher

வல்லரசு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இன்னும், "அட இப்படியுமா சட்டம் இருக்கும்..." என வியக்கம் வண்ணம் பல சட்டங்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அவற்றுள் டாப் 10 இங்கே...

அலபாமா - போலியான மீசை வைத்துக் கொண்டு, சர்ச்சில் மக்களை சிரிக்க வைக்கக் கூடாது.

அலாஸ்கா - புகைப்படம் எடுக்க உறங்கி கொண்டிருக்கும் கரடியை எழுப்பக் கூடாது.

அரிசோனா - கழுதைகளை குளிக்கும் டப்புகளில் உறங்க வைக்கக் கூடாது.

கலிபோர்னியா - தவளை குதிக்கும் போட்டியின் போது இறந்த தவளையை உண்ணக் கூடாது.

ப்ளோரிடா - யானையை இடது புறமாக பார்கிங் ஏரியாவில் கட்டி வைத்திருந்தால், வாகனம் நிறுத்துவதற்கு வசூலிக்கப்படும் தொகை வசூலிக்கப்படும்.

ஜோர்ஜியா - ஞாயிற்றுக்கிழமைகளில் கோன் ஐஸ்க்ரீமை பின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வது இல்லீகல்.

நியூயார்க் - இரவு பத்து மணிக்கு மேல், ஸ்லிப்பர்கள் அணியக் கூடாது.

வெர்மான்ட் - ஃபால்ஸ் டூத் எனப்படும் போலி பற்களை அணிந்துக் கொள்ள, மனைவியர் கணவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

வெஸ்ட் வெர்ஜினியா - நீரில் இருக்கும் போது விசில் அடிப்பதற்கு தடை.

டெக்சாஸ் - மனிதரின் கண்களை விற்க தடை!

English summary

The Craziest Laws That Still Exist In The United States

The Craziest Laws That Still Exist In The United States,
Subscribe Newsletter