For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  15 வயது பெண்ணை கற்பழித்த குர்மீத் ஆசாமியார் பற்றிய 10 உண்மைகள்!

  |

  குர்மிட் ராம் ரஹீம் சிங், 15 வயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்கு குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்பளிக்கப்பட்ட நபர். இந்த தீர்ப்பை எதிர்த்து, ராம் ரஹீம் ஆதரவாளர்கள் ஒரு மாநிலம் முழுக்க கலவரம் வெடிக்க செய்து, பல உயிர்களை பலியாக்கி, பல பொது உடைமைகளை தீக்கிரையாக்கி பெரும் சேதத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

  இதற்கு வெகு சில நாட்கள் முன்னர் தான் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல், பல குழந்தைகள் உயிரிழந்தனர். அதை எதிர்க்க, அது குறித்து அரசை கேள்வி கேட்க ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. இது தான் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய இந்தியா?

  குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர் பிரபலம் ஆயின், அவருக்கான தண்டனைகள் குறையும், பரோலில் பல மாதம் வெளியே சுற்றலாம், படங்களில் நடிக்கலாம், சில வருடம் கழித்து அவருக்கு நன்னடத்தை காரணமாக விடுதலை வழங்கப்படலாம். ஏன் குற்றமே இல்லை என கூறி அவரை விடுவிக்கலாம். இது தான் நமது புதிய இந்தியா....

  இனி, 15 வயது பெண்ணை கற்பழித்த குர்மீத் ஆசாமியார் பற்றிய 10 உண்மைகள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பன்முகம் கொண்டவர்!

  பன்முகம் கொண்டவர்!

  குர்மிட் ராம் ரஹீம் சிங் எனும் இந்த சாமியார் பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்து வந்துள்ளார். இவர் இந்தியாவின் தேரா சாச்சா சவுதா எனப்படும் ஒரு ஆன்மீக அமைப்பின் தலைவராக மட்டுமின்றி, நடிகராக, பாடகராக, தொழிலதிபராகவும் இருந்து வந்துள்ளார்.

  இவரை ராக் ஸ்டார் என்றும் அழைத்து வந்துள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள், ரசிகர்கள் இருந்ததே மாநிலத்தில் பெரும் கலவரம் உண்டாக முக்கிய காரணமாக இருந்துள்ளது.

  வி.வி.ஐ.பி!

  வி.வி.ஐ.பி!

  இந்தியாவில் மொத்தமே 36 பேருக்கு தான் வி.வி.ஐ.பி அந்தஸ்து மற்றும் இசட் (Z) லெவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் குர்மிட் ராம் ரஹீம் சிங்கும் ஒருவர். இதுமட்டுமில்லாமல் இவருக்கு என தனி சொந்த பாதுகாப்பு வீரர்களையும் பணியமர்த்தி இருக்கிறார் இந்த கற்பழிப்பு குற்றவாளி சாமியார்.

  திருமணம்!

  திருமணம்!

  இவர் ஹர்ஜீத் கவுர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சரண்ப்ரீத் கவுர் மற்றும் அமர்ப்ரீத் கவுர் என்ற இரண்டு மகள்கள் மற்றும் ஜாஸ்மீத் சிங் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.

  தீராத விளையாட்டு வீரர்!

  தீராத விளையாட்டு வீரர்!

  இவரது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், குர்மிட் ராம் ரஹீம்சிங் எனும் இவர் கைப்பந்து, கபடி, லான் டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், ஸ்னூக்கர், கூடைப்பந்து மற்றும் பல விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு திறன் கொண்டவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  மருத்துவ பட்டம்!

  மருத்துவ பட்டம்!

  ஐரோப்பாவை சேர்ந்த உலக சாதனை பல்கலைகழகம் ஒன்று இவரை கௌரவித்து கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இவர் பல பிரிவுகளில் 53 உலக சாதனைகள் செய்துள்ளார். 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசியா புக் சாதனைகள், 7 இந்தியன் புக் சாதனைகள் மற்றும் 2 லிம்கா சாதனைகள் இதில் அடங்கும்.

  திரைப்படம்!

  திரைப்படம்!

  ராம் ரஹீம் எழுத்து, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என மூன்று படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களில் ஃபேன்சி உடைகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சண்டை போடுவது, தீயவர்களை அழிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார்.

  குற்ற வழக்குகள்!

  குற்ற வழக்குகள்!

  ராம் ரஹீம் மீது மூன்று குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. ராம் சந்தர் எனும் ஊடகவியலாளர் கொலை வழக்கு, 2002ல் வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது, அவரிடமே நேரடியாக ராம் ரஹீம் மீது கற்பழிப்பு வழக்கு குறித்து கடிதம் அனுப்பட்டது. அதற்கு ராம் ரஹீம் உள்ளூர் பஞ்சாயத்தில் தான் உடலுறவு கொள்ள திறன் அற்றவர் என அங்கே தன்னை தற்காத்து கொள்ள கூறினார்.

  கொலை!

  கொலை!

  கற்பழிப்பு குறித்து வெளியே கூறினால், உனது சகோதரன் கொலை செய்யப்படுவான் என மிரட்டல் விடப்பட்டது. அவர் கொலை செய்யவும் பட்டார். இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது.

  விருது!

  விருது!

  தாதாசாஹேப் பால்கே ஃபிலிம் ஃபவுண்டேஷன் இவருக்கு மிக பிரபலமான எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விருது அளித்து கௌரவித்துள்ளது.

  ஆர்கானிக் பொருட்கள்!

  ஆர்கானிக் பொருட்கள்!

  எம்.எஸ்.ஜி ஸ்வதேஷி மற்றும் ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு உணவு பொருள் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த தொழிலை இவரது குழந்தைகள் பார்த்து வருகிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Unknown Facts About Gurmeet Ram Rahim Singh!

  Unknown Facts About Gurmeet Ram Rahim Singh!
  Story first published: Monday, August 28, 2017, 10:38 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more