இனவெறி தூண்டிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விளம்பரங்கள் பல வகைகள் உள்ளன, ஆடியோ, வீடியோ, பிரிண்டிங், டிஜிட்டல், கூகுல், ஃபேஸ்புக், ஆன்லைன், எஸ்.எம்.எஸ்., பேனர், போஸ்டர்கள், வாகன ஊர்திகள், ஸ்பான்சர், துண்டு சீட்டு என ஆயிரங்களில் ஆரம்பித்து, கோடிகள் வரை கொட்டி விளம்பரம் செய்கிறது பல்வேறு நிறுவனங்கள்.

இதில் மக்களின் கவனத்தை ஈர்க்க கிரியேட்டிவ் விளம்பரங்கள் செய்ய முயற்சிப்பார்கள். இதற்கென தனி துறையே இயங்குகிறது. சில சமயங்களில் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிலர் செய்யும் விஷயங்கள் எதிர்பாராத விபரீதங்களை, சச்சரவுகளை இழுத்துவிட்டுவிடும்.

அந்த வகையில் ஓலா முதல் கல்யாண் ஜூவல்லரி வரை இனவெறி சார்ந்த சர்ச்சைகளை உருவாக்கிய பலரது விளம்பரங்கள் குறித்த தொகுப்பு தான் நாம் இதில் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்யாண் ஜுவல்லரி!

கல்யாண் ஜுவல்லரி!

கல்யான் ஜுவல்லரி ஒருமுறை ஐஸ்வர்யா ராய் ராணி போல அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு பின்னே ஒரு கருப்பு நிற ஆள் அடிமை போல குடை பிடித்து நிற்பது போலவும் விளம்பரம் வெளியிட்டது. இது இனவெறி தூண்டுவது போல அமைந்துள்ளது என சர்ச்சைகள் கிளம்ப, தனது விளம்பரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது கல்யாண் ஜுவல்லரி.

டவ் சோப்பு!

டவ் சோப்பு!

தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான சோப்பு உங்க சரும நிறத்தை மாற்றும் என்பதை விளக்க, கருமை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது அழுக்கு என்பது போலவும், அழுக்கைவிட்டு சுத்தமாகி வர டவ் உபயோகிங்கள் என சித்தரித்து ஒரு போஸ்டர் விளம்பரம் செய்திருந்தது டவ் நிறுவனம். இது ட்விட்டரில் பெரும் சர்ச்சையை உருவாக்கி, கடைசியில் அந்த விளம்பரத்தை நீக்கியது மட்டுமின்றி. அப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது டவ் நிறுவனம்!

ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட் முதல் முறையாக தங்கள் நிறுவனத்தை துவக்கும் போது பெருமளவில் விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில் இறங்கியது. அதில் ஒன்று கூர்க்கா வேலை செய்பவர்களை கிண்டல் செய்வது போல அமைந்திருந்தது. இந்த விளம்பரம் நேபாள மக்கள் மட்டுமின்றி இந்தியர்கள் பலர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஓலா!

ஓலா!

ஓலா தனது ஆரம்பக் காலக்கட்ட விளம்பரம் ஒன்றில் காதலர்களை வைத்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் காதலன், காதலியுடன் நடந்து சென்றால் கி.மீ-க்கு ரூ. 526 செலவாகும். இதுவே மைக்ரோ காரில் சென்றால் கி.மீ. ரூ. 6 தான் செலவாகும் என குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தது. இது பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது.

பே-டிஎம்!

பே-டிஎம்!

இந்தியாவில் சென்ற வருடம் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட போது வித்தியாசமாக ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் வீட்டில் வேலை செய்யும் பெண் சம்பளம் கேட்பது போலவும், அதற்கு எஜமானி பணமதிப்பிழப்பை காரணம் காட்டும் போது, டிராமா செய்யாமல் பே-டிஎம் மூலம் சம்பளம் டிரான்ஸ்பர் செய் என கூறுவது போல விளம்பரம் அமைந்திருந்தது.

ஏற்கனவே அரசாங்கத்தின் மந்தநிலை மற்றும் சரியான முன்னேற்பாடு இல்லாத காரணங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களின் மனநிலையை இது மேலும் எரிச்சல் அடைய வைத்தது.

ஜேக் ஜோன்ஸ்!

ஜேக் ஜோன்ஸ்!

ரன்வீர் சிங் ஒரு ஷர்ட் விளம்பரத்தில் பெண்ணின் புட்டத்தை பிடித்தவாறு, தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கும் படியான படத்துடன், "டோன்ட் ஹோல்ட் பேக், டேக் யுவர் வர்க் ஹோம்" என்ற ஸ்லோகனுடன் பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. இது பெண்களை இழிவுப்படுத்துவது போல அமைந்திருந்ததால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

பான்-பகர்!

பான்-பகர்!

பான்-பகர் எனும் பான் மசாலா மென்றுக் கொண்டு ஒரு நபர் ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் பெண்ணை காப்பாற்றும் ஹீரோ போல விளம்பரம் அமைந்திருந்தது. புற்றுநோய் வரவழைக்கும் விளம்பரத்தை ஊக்குவிப்பது போல காட்சிப்படுத்துவது தவறு என இந்த சர்சைக்குரிய விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

நியோ ஸ்போர்ட்ஸ்!

நியோ ஸ்போர்ட்ஸ்!

இந்திய - இலங்கை அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் நியோ ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை ஒளிப்பரப்பியது. அதில், இரு இலங்கை நபர்கள் இந்தியாவில் கடினமாக இருப்பது போல காட்சிகள் அமைந்திருந்தன. மேலும் அவர்களே, "It's difficult to be a Sri Lankan in India" என கூறுவது போல டாக்லைன் இட்டிருந்தனர். இது இனவெறியை தூண்டும் வகையில் இருந்ததால் கடும் எதிர்ப்புகளுக்குள்ளானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Controversial Racism Advertisements!

Top Controversial Racism Advertisements