2017 ஆம் ஆண்டு ஆசியாவின் டாப் 17 செக்ஸியான பெண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வருடமும் ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலை லண்டன் நாளிதழ் வெளியிடும். உலகில் ஆசிய பெண்கள், அவர்களது அழகு, புத்திசாலித்தனம் மற்றும் திறமையால் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர். ஆசியா மிகப்பெரிய கண்டம். பல கலாச்சாரம் மற்றும் பகுதிகளைக் கொண்டது தான் ஆசிய கண்டம்.

ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த பெண்களின் அழகிலும், அந்நாட்டின் தனித்துவம் பிரதிபலிக்கும். ஆசிய பெண்கள் கவர்ச்சிகரமான கண்கள், நேர்த்தியான உடலமைப்பு மற்றும் பளபளப்பான தலைமுடியை வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தங்களது அழகிய மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தால், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்சியளிக்கின்றனர்.

இக்கட்டுரையில் 2017 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்குப் பிடித்த ஐஸ்வர்யா ராய் பச்சனும் இடம் பெற்றுள்ளார். அது எத்தனையாவது இடம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
17. கொனி ஹக்

17. கொனி ஹக்

கொனி ஹக் ஆசியாவின் அழகிய பெண்களுள் ஒருவராவார். இவர் ஒரு பங்களாதேஷி தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தனது கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் பெரும் நம்பிக்கையுடன் தனது வேலையை செய்து வருகிறார்.

16. மெஹ்விஷ் ஹயத்

16. மெஹ்விஷ் ஹயத்

ஆசியாவின் அழகிய பெண்களின் பட்டியலில் 16 ஆவது இடத்தில் இருப்பவர் தான் மெஹ்விஷ் ஹயத். இவர் ஒரு பாகிஸ்தானி மாடல் மற்றும் டிவி ஸ்டார். இவர் லாகூர் பகுதியைச் சேர்ந்தவர்.

15. ஹா நிய் லீ

15. ஹா நிய் லீ

15 ஆவது இடத்தில் இருப்பவர் தென்கொரிய அழகியான ஹா நிய் லீ. இவர் பல திறமைகளைத் தன்னுள் கொண்ட பெண்மணி. ஏனெனில் இவர் ஒரு மாடல் மட்டுமின்றி, நடிகை மற்றும் பாரம்பரிய இசைக்கலைஞரும் கூட. மேலும் லீ மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தென் கொரிய பிரதிநிதியாவும் வருகிறார்.

14. ஐஸ்வர்யா ராய் பச்சன்

14. ஐஸ்வர்யா ராய் பச்சன்

உலக அழகியாக ஒரு காலத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், 2017 ஆம் ஆண்டின் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் உள்ளார். இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.

13. கரீனா கபூர் கான்

13. கரீனா கபூர் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கரீனா கபூர், என்ன தான் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டாலும், இன்றும் அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலில் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

12. டூ ஜுவான்

12. டூ ஜுவான்

சைனீஸ் சூப்பர் மாடலான டூ ஜுவான், 2017 ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளார். இவர் தி வோக் என்னும் பிரபலமான ஃபேஷன் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திலும் காணப்படுகிறார்.

11. சாங் சீயீ

11. சாங் சீயீ

திறமை வாய்ந்த ஆசிய நடிகையான சாங் சீயீ, இந்த பட்டியலில் 11 ஆவது இடத்தில் உள்ளார். மெபிலின், ஒமேகா போன்ற பிராண்டுகளின் பிராண்டு அம்பாஸிடராக இருக்கும் இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

10. கௌஹார் கான்

10. கௌஹார் கான்

இந்திய மாடலும், நடிகையுமான கௌஹார் கான், மனீஷ் மல்ஹொத்ரா, பாயல் ஜெயின், ரீத்து குமார் மற்றும் நீத்தா லுல்லா போன்ற டிசைகளுக்காக ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளார்.

9. சோனம் கபூர்

9. சோனம் கபூர்

பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர், செக்ஸியான பெண்களின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் இவர் இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

8. கத்ரீனா கைஃப்

8. கத்ரீனா கைஃப்

உலகில் பல மில்லியன் மக்களின் மனதைக் கவர்ந்தவர் தான் கத்ரீனா கைஃப். பிரிட்டிஷ் மாடலாக இருந்து நடிகையான இவர், தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் பாலிவுட்டில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

7. சானயா ஈரானி

7. சானயா ஈரானி

இந்திய தொலைக்காட்சி நடிகையான சானயா ஈரானி, பல தொடர்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் காணப்படுபவர். இவர் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

6. டிராஷ்டி தமீம்

6. டிராஷ்டி தமீம்

இந்திய டிவி நடிகையும், மாடலும், டான்சருமான டிராஷ்டி தமீம், பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளார்.

5. மகிரா கான்

5. மகிரா கான்

பாகிஸ்தானி நடிகையான மகிரா கான், அந்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் ஒருவராவார். மேலும் இவர் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இத்தகையவர் 2017 ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

4. அலியா பட்

4. அலியா பட்

பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை அலியா பட், தனது அழகான தோற்றத்தாலும், புன்னகையாலும் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் பிலிம்பேர் க்ரிடிக்ஸ் விருதையும் பெற்றுள்ளார். இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளார்.

3. தீபிகா படுகோனே

3. தீபிகா படுகோனே

ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் நடிகை தீபிகா படுகோனே உள்ளார். மாடலாக இருந்து நடிகையாக மாறி, ஹாலிவுட்டில் ஒரு சூப்பர் ஹிட் படத்திலும் நடித்து, உலகம் முழுவதும் பிரபலமான ஒருவராகி உள்ளார்.

2. நியா ஷர்மா

2. நியா ஷர்மா

இந்திய தொலைக்காட்சி நடிகையான நியா ஷர்மா, ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

1. பிரியங்கா சோப்ரா

1. பிரியங்கா சோப்ரா

2017 ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. 2000 ஆம் ஆண்டு நடிந்த உலக அழகி பட்டத்தை வென்ற இவர், பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக ஆனார். இதுவரை இவர் 5 பிலிம்பேர் விருதுகளையும், தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 17 Most Beautiful Sexiest Asian Women 2017

Here is the list of top most hottest Asian women 2017. Take a look...
Story first published: Friday, December 15, 2017, 16:00 [IST]
Subscribe Newsletter