2017ல் மறக்க முடியாத பத்து நிகழ்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

2017 கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் புதிய வருடம் 2018 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த நேரத்தில் 2017 ல் நாம் கற்ற டாப் 10 விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

அரசியல்,தொழில்நுட்பம் என பல வகைகளிலும் இந்தியா வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் யியர் இன் சேர்ச் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் அந்த வருடத்தில் ஹைலைட்டான விஷயங்கள், ட்ரெண்ட்டான செய்திகள் என பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

2017ல் நீங்கள் கற்றுக் கொண்ட... இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மறந்து போன விஷயங்களின் பட்டியல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜி.எஸ்.டி :

ஜி.எஸ்.டி :

நிறைய மறைமுக வரிகள் சேர்த்து ஜி.எஸ்.டி என்பதை அறிமுகப்படுத்தினர். இதனை முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிமுகப்படுத்தினர்.

கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ் என்ற இதனை ஜூலை 1,2017ல் அறிவிக்கப்பட்டது.

பிட் காயின் :

பிட் காயின் :

2017 ஆம் ஆண்டு பிட் காயின் பற்றிய பேச்சு அடிக்கடி அடிப்பட்டது. பிட் காயின் என்பது சடோஷி நகமோட்டாவில் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சி என்று வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நாணயங்களின் மதிப்புகளை ஏதாவது ஒரு அமைப்பு, மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கிற அந்த அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால் இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

ஒரு பிட் காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் அதில் நம்மால் மோசடி செய்ய முடியாது.

ஜல்லிக்கட்டு :

ஜல்லிக்கட்டு :

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுமைக்கும் வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிற ஓர் நிகழ்ச்சி. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்திடும் காளைகளை இளைஞர்கள் கூட்டம் விரட்டிபிடிப்பார்கள்.

அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்வார்கள்.

BS III :

BS III :

பிஎஸ் என்றால் பாரத் ஸ்டேஜ் எமிசன் ஸ்டாண்ட்ரட். இதனை இந்திய அரசாங்கம் உருவாக்கியது. இதன் முக்கிய வேலையே மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையை கண்காணிப்பது தான்.

இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல் 1 தேதி முதல் அதீத நச்சுக்காற்றை வெளியிட்டு காற்றினை மாசுப்படுத்தும் BS III வகை வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டன.

பீட்டா :

பீட்டா :

ஜல்லிக்கட்டு என்ற விஷயம் உலகப்பிரபலமானதே இதை வைத்து தான். உலகிலேயே விலங்குகளின் நலனுக்காக போராடுகிற ஓர் அமைப்பு. இதில் ஆறு கோடிக்கும் அதிகமான சப்போர்ட்ரஸ் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டின் போது விலங்குகளை துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி ஜல்லிக்கட்டிற்கு எதிராக தடை வாங்கினார்கள்.

ஜியோ ப்ரைம் :

ஜியோ ப்ரைம் :

125.5 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் தேர்ந்தெடுத்தனர். முதலில் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே ப்ரைமில் சேர்வதற்கான கடைசி தேதி எனப்பட்டது. பின்னர் ஏப்ரல் பதினைந்தாம் தேதி வரை என்று நீட்டிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்மர் சர்ப்ரைஸ் என்று மூன்று மாதம் ஜியோவை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் ஆறாம் தேதி ட்ராய் அமைப்பு இதனை திரும்பப் பெற்றுக் கொள்ள சொல்லி அறிவுறுத்தியது.

 காசினி :

காசினி :

காசினி-ஹூயுஜென்ஸ் மிஷன் நாசா மற்றும் இத்தாலியின் ஸ்பேஸ் ஏஜென்ஸி இரண்டும் சேர்ந்து தயாரித்தன. காசினி என்ற வி்ண்கலம் சனி கிரகத்திற்கு அனுப்பினர். இதுவரை நான்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் காசினி மட்டுமே சனிக்கிரகத்தின் ஆர்பிட்டுக்குள் நுழைந்தது.

Image Courtesy

ஃபிட்ஜெட் :

ஃபிட்ஜெட் :

ஃபிட்ஜெட் ஸ்பின்னர்கள் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும், மனக் கலக்கம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க உதவுவதாகவும், ADHD பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவுவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. எனினும், இவற்றை நிரூபிக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்களோ ஆய்வுகளோ இல்லை.

மற்ற விளையாட்டுப் பொருள்களைப் போலவே ஃபிட்ஜெட் ஸ்பின்னரும் ஒரு விளையாட்டுப் பொருள், சந்தோஷத்திற்காக, வேடிக்கைக்காக சிறிதுநேரம் விளையாடலாம்.

Image Courtesy

ரன்சம்வேர் :

ரன்சம்வேர் :

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைபு உருவாக்கிய இணைய வழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணினிகளிஅ ரன்சம்வேர் வைரஸ் தாக்கியது.

இ-மெயில் மூலமாக நடந்த இந்த சைபர் தாக்குதலினால் கணினிகள் முடங்கியது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாகுபலி :

பாகுபலி :

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் 2ஆம் பாகும் உ லகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. முதல் நாளிலேயே 100 கோடிக்கு ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளியான 4 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம்.

ஒரு இந்திய திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல்முறை! முதல் நாளில் மட்டும் பாகுபலி 2 வசூல் 121.5 கோடி ரூபாய்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse top 10
English summary

Top 10 Trending Events in 2017

Top 10 Trending Events in 2017
Story first published: Monday, December 18, 2017, 15:50 [IST]