சித்திரா பௌர்ணமி சிறப்புகளும், இன்று வீட்டில் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு, விரதமிருந்து சிவனை தொழும் நாளாகும்.

பௌர்ணமி சிறப்பெனில், சித்திரா பௌர்ணமி சிறப்பகளுக்கு எல்லாம் சிறப்பு என கூறலாம். இனி, இங்கு சித்திரா பௌர்ணமி பற்றி சில சிறப்பு தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருவண்ணமாலை!

திருவண்ணமாலை!

திருவண்ணாமலையில் பொதுவான பௌர்ணமி தினங்களை காட்டிலும் சித்திரா பௌர்ணமி நாட்களில் 10 - 15 மடங்கு கூட்டம் அதிகமாக வரும்.

இதுப்போல இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளன்று மலையில் தீபம் ஏற்றும் போதும் கூட்டம் பலமடங்கு அதிகமாக வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை கும்பிட்டு பலன் பெறுகின்றனர்.

மதுரை!

மதுரை!

ஆண்டுதோறும் மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இது திருவிழா போல நடக்கும்.

காளிகாம்பாள் கோயில்!

காளிகாம்பாள் கோயில்!

சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாலை 6 மணிக்கு 200-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் பூஜை நடைபெறுமாம்.

சைவர்கள்!

சைவர்கள்!

சித்திரா பௌர்ணமி நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில் மற்றும் புனித இடங்களில் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி அளித்து வந்தார்கள் என கூறப்படுகிறது.

பொங்கல்!

பொங்கல்!

சித்திரா பௌர்ணமி அன்று , முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த கால விழாவைக் கொண்டாடினர் என்ற கூற்றுகளும் அறியப்படுகின்றன.

சிவன்!

சிவன்!

சித்திரா பௌர்ணமி ஆனது, காலப்போக்கில் சிவனுடைய சிறப்பு விழாவாகவும், இறந்த தாயாருக்கு தர்ப்பணம் அளிக்கும் தினமாகவும் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

தர்ப்பணம்!

தர்ப்பணம்!

அன்னை உயிருடன் இல்லாத ஆண்கள் எல்லாரும் அதிகாலை சீக்கிரம் எழுந்து குளம் அல்லது ஆறுகளுக்கு சென்று நீராடி இறந்த அன்னைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பிறகு வந்து, தாயார் அன்னைக்கு பூஜை செய்து உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About Chitra Pournami!

Things To Know About Chitra Pournami!
Story first published: Wednesday, May 10, 2017, 17:20 [IST]
Subscribe Newsletter