வளம் தரும் இந்த மார்கழி மாதம் எந்த ராசிகளுக்கு எல்லாம் அதிஷ்டம்?

Written By:
Subscribe to Boldsky

மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகும். இந்த மார்கழி மாதத்தில் புண்ணிய தலங்களுக்கு செல்வது சிறப்பு. தமிழ் மாதமான இந்த மார்கழி மாதம் உங்களது கஷ்டங்களை போக்குமா? வாழ்வில் புதிய வழிகள் பிறக்குமா என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும். இந்த பகுதியில் 12 இராசிகளுக்குமான மார்கழி மாத ராசிப்பலன் என்படி இருக்கிறது என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரம் சுமாரான நிலையில் இருக்கும். 14ம் தேதிக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை.தொழில் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். 20ம் தேதிக்கு பிறகு எண்ணியவை யாவும் எளிதில் கைகூடும். பதவி உயர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். கைலாசநாதரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

ரிஷபம்

ரிஷபம்

விடா முயற்சி பல நன்மைகளை அள்ளித்தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு உண்டாகும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். எல்லா வகையிலும் மனைவி உறுதுணையாக இருப்பார். அம்பாளை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

மிதுனம்

மிதுனம்

தொழில் மற்றும் வேலை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியது அவசியம். சூரிய நாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

கடகம்

கடகம்

தொழில் சுமாராக இருந்தாலும், உங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கஷ்ட நஷ்டங்களை நீங்கள் சந்தித்தாலும் மன தைரியம் குறையாது. ஆலய வழிபாடுகளில் நாட்டம் உண்டாகும். பழனி முருகனை வழிபடுவதன் மூலமாக வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெறலாம்.

சிம்மம்

சிம்மம்

திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் கிடைக்க கூடும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற சவகாசத்தை தவிர்ப்பது நல்லது. அம்பிகை மற்றும் மகாவிஷ்ணுவை வழிபட்டு சிறப்பான பலன்களை பெறுங்கள்.

கன்னி

கன்னி

பண வரவு கணிசமாக உயரும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் சேரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலைகள் மாறும். சிவ பெருமான் மற்றும் ஆஞ்சிநேயரை வழிபட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

துலாம்

துலாம்

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் மிக எளிதாக வெற்றியடையும். கணவன், மனைவி இடையில் அன்னியோனியம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை உண்டாகும். ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். முருகன் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலமாக மகிழ்ச்சி காணலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

அனைத்து விஷயங்களிலும் பொருமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விநாயகர் மற்றும் பெருமாளை வழிபடுவதன் மூலமாக வாழ்க்கையில் எல்லா நலனும் பெறலாம்.

தனுசு

தனுசு

மாதத்தின் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக அமையும். தெய்வ பக்தியும் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். தட்சணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமாக வளமான வாழ்க்கை வாழலாம்.

மகரம்

மகரம்

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் உண்டாகும். வாகனங்களில் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியம். தட்சிணா மூர்த்தி மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலமாக நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முருகன் மற்றும் பைரவரை வழிபடுவதன் மூலமாக நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளை பொறுமையாக கையாள வேண்டும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். அலுவலத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முருகன் மற்றும் துர்க்கையை வழிபடுவதன் மூலமாக வாழ்வில் மேன்மை அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology insync
English summary

Tamil Month Astrology for all Zodiac Signs

Tamil Month Astrology for all Zodiac Signs
Story first published: Tuesday, December 19, 2017, 11:30 [IST]