ஸ்தம்பிக்கச் செய்யும் மேக்கப்புடன் ஒரு பெண்ணின் வைரல் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மிமி என்ற 31 வயது இளம் பெண் வித்யாசமான மேக்கப்களை போட்டு பார்ப்பவர்களை அதிர்சியடையவைக்கிறார். பாதியாக உடைந்த முகம், உதட்டின் மீது ஏறிடும் பூச்சி, இடம் மாறிய கண்கள் என ஒரு கனம் ஸ்தம்பிக்கச் செய்திடும் அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போட்டோஷாப் இல்லை :

போட்டோஷாப் இல்லை :

இதில் எந்த விதமான போட்டோஷாப் வொர்க்கும் கிடையாது முழுக்க முழுக்க மேக்கப் தந்திரம் மட்டும் தான். இது குறித்து மிமி சொல்லும் போது என் முகம் எனக்கு கேன்வாஸ் போல விதவிதமாக முயற்சி செய்து கொண்டேயிருப்பேன் என்கிறார்.

ஐந்து மணி நேரம்

ஐந்து மணி நேரம்

முகத்தை வெவ்வேறு விதமாக மாற்றிக் காட்டும் மேக்கப்பிற்கு ஐந்து மணி நேரம் வரை செலவிடுகிறார். இதற்கு பெரும்பாலும் ஐலைனரைத் தான் பயன்படுத்துவாராம்.

வைரலான படங்கள் :

வைரலான படங்கள் :

முகம் மட்டுமல்ல கைகளிலும் வித்யாசமான மீன்,பாம்பு,பறவை போன்ற உருவங்களை மேக்கப் மூலமாக உருவாக்கியிருக்கிறார். இவர் பதிவேற்றும் ஒவ்வொரு படங்களுமே பயங்கர வைரலாய் பரவிடுகிறது. ஒவ்வொரு படம் போடும் போதும் அது எதைப்பயன்படுத்தி செய்தார், என்ன மேக்கப் ப்ராடெக்ட் என்று குறிப்பிடுவது நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

இப்படியும் ஓர் வழி :

இப்படியும் ஓர் வழி :

இப்படி என்னுடைய வித்யாசமான படங்களை பார்க்கும் போது, வித்யாசமான சிந்தனைகள், வழக்கத்திற்கு மாறாக இப்படியும் ஓர் வழி இருக்கிறது என்ற தன்னம்பிக்கை பார்ப்பவர்களுக்கு தோன்றும் என்ற நம்பிக்கையில் தான் இப்படியான உருவங்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டிருக்கிறாராம்.

மேக்கப் ஆர்டிஸ்ட் :

மேக்கப் ஆர்டிஸ்ட் :

ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த மிமி தன்னுடைய அம்மாவின் துணையுடன் மேக்கப் ஆர்டிஸ்ஸ்ட்டாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். சவால்களையும் புதுமையையும் என்றுமே விரும்பும் எனக்கு இந்த துறை ஏற்றது என்கிறார் மிமி.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stunned images of optical illusion makeup

Stunned images of Mimi choi,The makeup artist using optical illusion makeup on her face