For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொய்கள் எல்லாம் சுகமா? இதுவரைக்கும் நீங்க நம்பின பொய்கள்...

நிஜமென நம்பிக் கொண்டிருக்கும் சில பொய்களும் அதன் உண்மை விளக்கங்களும்

|

பொய்ய நம்ப வைக்கணும்னா கொஞ்சம் உண்மையும் கலந்து சொல்லணும் என்று யாரோ சொல்லியது நிஜம் தான் என்பதை மெய்பிக்கப்போகிறது இது.

குறிப்பாக சமூக வலைதளஙகளில் பரவும் செய்திகளினால் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் எல்லாவற்றையும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இப்படி கட்டுக்கதைகளாக நம்பிக் கொண்டிருக்கும் பொய்களில் சில....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூமி சூரியனைச் சுற்றுகிறது :

பூமி சூரியனைச் சுற்றுகிறது :

குழந்தை பருவத்திலிருந்தே இதனை கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் பூமி சூரியனைச் சுற்றுவதில்லை. பேரி செண்ட்டர் (Bary centre)எனப்படுகிற கோள்களுக்கு நடுவில் உள்ள இடத்தில் தான் சுழலுகிறது.

சில சமயங்களில் விண்வெளியின் வெற்று இடத்திலும் சுழல்வது உண்டு.

தக்காளி :

தக்காளி :

தக்காளி காயா பழமா என்பதில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். சிலர் அது சமையலுக்கு பயன்படுத்துவதால் அது காய் என்று சொல்வதுண்டு. உண்மையில் தக்காளி காயல்ல பழம். பழத்தில் இருக்கும் விதைகளை விதைத்தால் தக்காளி செடி வளரும் என்பதால் அறிவியல் பூர்வமாகவும் இதனை பழம் என்றே குறிப்பிடுகின்றனர்.

சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபம் :

சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபம் :

காளை மாடுகளுக்கு சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபம் வரும் என்று சொல்லப்படுவதுண்டு.இது முற்றிலும் தவறானது.உண்மையில் காளை மாடுகளால் நிற வேறுபாட்டினை அறிய முடியாது.

Image Courtesy

நாக்கில் சுவை நரம்புகள் :

நாக்கில் சுவை நரம்புகள் :

நாக்கின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சுவை நரம்பு இருக்கும் அவற்றால் தான் நாம் சுவையறிகிறோம் என்று சொல்லப்படுவதுண்டு. இதுவும் தவறான கருத்து. நாக்கில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சுவை தெரியாது.

லினக்ஸ் :

லினக்ஸ் :

லினக்ஸ் ஓ.எஸ் உள்ள கணினிகளில் வைரஸ் தாக்காது.பலரும் இதனை நம்பி லினகஸ் ஓ.எஸ் போட்டிருப்பார்கள். இதுவும் தவறானது தான லினக்ஸ் ஓ.எஸ்ஸையும் வைரஸ் தாக்குகிறது விண்டோஸ் ஓ.எஸ் விட குறைவான பாதிப்புகள் ஏற்படுவதால் வைரஸ் தாக்காது என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

பச்சோந்திகள் இடத்திற்கேற்ப நிறமாறும் :

பச்சோந்திகள் இடத்திற்கேற்ப நிறமாறும் :

இதனையும் நாம் பள்ளியிலிருந்தே படித்து வந்திருப்போம்.இதுவும் பொய்யான தகவல் தான். பச்சோந்திகள் இருக்கும் இடத்தற்கேற்ப நிறமாறுவதில்லை.

உண்மையில் பச்சோந்திகள் நிறமாறுவது எதிரிகளிடமிருந்து தப்பிக்க அல்ல எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள மணிக்க 21 கி.மீ வேகத்திக் ஓடக்கூடியது.

தன் எண்ணத்தை பிறருக்கு தெரிவிக்கும் ஓர் வழியாகத்தான் இந்த நிறமாற்றம் இருக்கிறது.அடர்த்தியான நிறங்களை கோபத்தை காட்டவும் லைட்டான நிறங்கள் இணையை கவர்வதற்கும் பயன்படும்.

Image Courtesy

வவ்வால்களுக்கு கண் தெரியாது :

வவ்வால்களுக்கு கண் தெரியாது :

வவ்வால்கள் வேட்டையாடுவதற்கு தன் ஓசையையே பயன்படுத்தும். எதிரொலிக்கும் தன்மையைக் கொண்டு எதிரில் ஏதேனும் தடையிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும். இதனால் வவ்வால்களுக்கு பார்வை கிடையாது என்று அர்த்தமன்று. வவ்வால்களுக்கு நன்றாகவே கண் தெரியும்.

Image Courtesy

 மது உடலை சூடாக்கும் :

மது உடலை சூடாக்கும் :

இதுவும் பொய் தான். நம் உடலில் ஓடுகின்ற இளஞ்சூடான ரத்தத்தை சருமத்திற்கு அருகில் கொண்டு வரும் இதனாக் நமக்கு உடல் சூடாவது போலத் தோன்றும்.

சூரிய காந்தி:

சூரிய காந்தி:

சூரியன் இருக்கும் திசையைப் பார்த்தே சூரிய காந்தி திரும்பியிருக்கும் என்று இன்றளவும் நம்பி வருகிறோம். இதுவும் தவறானது. இயற்கையாகவே சூரிய காந்தி கிழக்கு நோக்கி திரும்பும் ஆற்றல் கொண்டது. எல்லா பூக்களும் காலையில் மலர்ந்து மாலையில் வாடிடும்.

ஐம்புலன்கள் :

ஐம்புலன்கள் :

மனிதர்களுக்கு பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவையறிவது, உணர்வது என ஐந்து வகை புலன்கள் தான் இருக்கிறது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வந்தது.

இதுவும் தவறானது தான்.ஒவ்வொரு மனிதனுக்கும் 9 முதல் 20 புலன்கள் வரை இருக்கும்.

மூளை :

மூளை :

நம்முடைய மூளையை நாம் பத்து சதவீதம் தான் பயன்படுத்துகிறோம் என்று சொல்லப்படுவதுண்டு. பல ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோவின் எக்ஸ்ட்ரா திறமைக்கு இதுவே காரணமாக சொல்லப்படும்.

இது கற்பனையானது தான். 10 சதவீதம் மட்டும் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Some beliefs and their facts

Some beliefs and their facts
Story first published: Saturday, August 26, 2017, 11:35 [IST]
Desktop Bottom Promotion