20 கோடி ஆண்டுகள் பழமையான கண்டம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டுப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Boldsky

தினம், தினம் ஏதோ ஒரு கண்டுபிடிப்பின் மூலம் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலும், அவர்களது கண்டுபிடிப்பு புவியியல் சார்ந்து இருக்கையில் அது அனைத்து தரப்பை சார்ந்த மக்களையும் வியக்க வைக்கிறது.

இதோ இப்போது, சமீபத்திய ஆய்வில் மொரீஷியஸ் தீவிற்கு அடியே 20 கோடி ஆண்டுகள் பழமையான கண்டதை கண்டறிந்து கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு!

புதிய ஆய்வு!

மொரீஷியஸ் தீவிற்கு அடியில் பல கோடி ஆண்டுகளுக்கு மறைந்த கண்டம் ஒன்று இருப்பதாகவும். அதற்கான கூறுகளை கண்டறிந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வொன்றில் கூறியுள்ளனர்.

கடலும், நிலமும்!

கடலும், நிலமும்!

நமது உலகமானது நிலம், கடல் நீர் என இரண்டு பங்குகளை கொண்டுள்ளது. இப்போது நீரின் பங்கு பெருமளவில் இருந்தாலும். கடல் தோன்றுவதற்கு முன்னரே நிலம் தோன்றிவிட்டது என அறிவியல் கூறுகிறது.

நிலத்தில் உள்ள பாறைகள் பலநூறு கோடி ஆண்டுகள் பழமையானவை, ஆனால் கடலில் இருக்கும் பாறைகள் அப்படி இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மொரீஷியஸ் தீவு!

மொரீஷியஸ் தீவு!

மொரீஷியஸ் தீவு ஆனது 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனப்படுகிறது. ஏனெனில், இந்த தீவில் காணப்படும் பாறைகள் அந்தளவு பழமையாக தான் காணப்படுகிறது.

சிர்கான்ஸ் கனிமம்!

சிர்கான்ஸ் கனிமம்!

ஆனால், புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சிர்கான்ஸ் கனிமம் முன்னூறு கோடி ஆண்டுகள் முந்தைய காலத்தை சேர்ந்தது எனப்படுகிறது. இது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 90 லட்சம் ஆண்டுகள் பழமையான மொரீஷியஸ் தீவுக்கு அடியே முன்னூறு கோடி பழமையான கண்டம் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கோண்ட்வானா மகா கண்டம்!

கோண்ட்வானா மகா கண்டம்!

ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதி 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோண்ட்வானா மகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Researchers Found Lost Continent Under Mauritius Island!

Researchers Found Lost Continent Under Mauritius Island!
Subscribe Newsletter