நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்?

Posted By:
Subscribe to Boldsky

புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்மனை துர்க்காவாக,லட்சுமியாக, சரஸ்வதியாக பாவித்து வணங்கி வருகிறோம். இந்த நாளில் செய்யக்கூடிய வழிபாடுகளை தாண்டி முக்கியமாக பார்க்கப்படுவது நவராத்திரி கோலம் மற்றும் நைவேத்தியங்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் நாள் :

முதல் நாள் :

முதல் நாளில் அரிசிமாவு கோலம் போடுங்கள். நைவேத்தியமாக காலையில் எலுமிச்சை சாதம் செய்யலாம். மாலையில் பாசிப்பயிறு சுண்டல். பாசிப்பயிறு நன்றாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை வேக வைக்க வேண்டும்.

வெல்லப் பாகு காய்ச்சி அதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள்,சுக்குப் பொடி தேங்காய் துருவல் கலந்து வைக்கலாம்.

இரண்டாம் நாள் :

இரண்டாம் நாள் :

இரண்டாம் நாளில் கோதுமை மாவில் கட்டம் போட வேண்டும். நைவேத்தியமாக எள்ளு சாதம் செய்ய வேண்டும். எள்ளை வெறும் பாத்திரத்தில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெயில் பெருங்காயத்தூள், மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக வறுத்துக் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

சூடான வடித்த சாதத்துடன் இந்த பொடியை கலந்து கொள்ளுங்கள். பின்னர் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் எள்ளு சாதம் தயார்.

மாலையில் மொச்சை மசாலா சுண்டல். மொச்சையை முதல்நாளே ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை வேகவைத்து தாளித்து வைக்கலாம்.

Image Courtesy

மூன்றாம் நாள் :

மூன்றாம் நாள் :

நவராத்திரியின் மூன்றாம் நாள் முத்துக் கோலம் போட வேண்டும். காலையில் தயிர் சாதமும் மாலையில் காரமணி சுண்டலும் வேகவைத்து தாளித்து நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

நான்காம் நாள் :

நான்காம் நாள் :

நான்காம் நாள் அட்சதையினால் கோலமிட வேண்டும். பிரசாதமாக காலையில் சர்க்கரைப்பொங்கலும் மாலையில் பட்டணி சுண்டலும் வைக்க வேண்டும்.

பட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும். கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் தேங்காய் மற்றும் மாங்காய் துருவி போடலாம்.

ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாள் கடலையைக் கொண்டு பறவைக் கோலம் இடுங்கள். பிரசாதமாக பால் சாதம் செய்திடுங்கள். பசும்பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.

சாதத்தை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கலாம்.

மாலையில் கார்ன் வெஜிடபிள் சுண்டல் செய்யலாம். கார்னை சிறிதளவு உப்பு சேர்த்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து வைக்கலாம்.

ஆறாம் நாள் :

ஆறாம் நாள் :

இந்த தினத்தில் பருப்பு கோலம் போட வேண்டும். காலையில் கல்கண்டு சாதம் செய்ய வேண்டும். ஒரு கடாயில் கல்கண்டை போட்டு நன்றாக கம்பி பாகு வரும் வரை காய்ச்சிக் கொள்ளுங்கள்.

அரிசியையும் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள் பின்னர் அதனை வேக வைக்க வேண்டும் வேக வைக்கும் போது ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம்.

நன்றாக வெந்ததும் இதில் கல்கண்டை காய்ச்சிய பாகு ஊற்றி அடிபிடிக்காமல் நன்றாக கிளற வேண்டும். அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்க்கலாம். பின்னர் அதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிடலாம்.

மாலையில் ராஜ்மா சுண்டல் செய்ய வேண்டும்.

Image Courtesy

ஏழாம் நாள் :

ஏழாம் நாள் :

ஏழாம் நாள் மலர் கோலம் இட வேண்டும். காலையில் வெண் பொங்கல் நைவேத்தியமும் மாலையில் கடலைப்பருப்பு புதினா சுண்டல் வைக்க வேண்டும்.

கடலைப்பருப்பை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள் புதினாவை பொடியாக் அநறுக்கி நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள்.

கடலைப்பருப்பில் மிளகுத்தூள், வதக்கி வைத்திருக்கும் புதினா சேர்த்து நன்றாக கிளறங்கள். இறுதியாக கடுகு தாளித்தால் போதும்.

எட்டாம் நாள் :

எட்டாம் நாள் :

இந்த நாளில் காசுக்கோலம் போட வேண்டும். புதிய சில்லறைக் காசுகளைக் கொண்டு சிறிய கோலம் இடமிலாம். நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டால் சிறப்பு. நைவேத்தியம் காலையில் தேங்காய் சாதம்,மாலையில் கொண்டக்கடலை சுண்டலும் செய்து வைக்க வேண்டும்.

ஒன்பதாம் நாள் :

ஒன்பதாம் நாள் :

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பச்சைக் கற்பூரம் கொண்டு ஏதாவது ஆயுதம் போன்ற கோலமிட வேண்டும். நைவேத்தியமாக காலையில் வெல்லப்புட்டு வைக்கலாம். மாலையில் பாசிப்பருப்பு சுண்டல் செய்து வைக்க வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rangoli and offering Prasatham for navratri

Rangoli and offering Prasatham for navratri
Story first published: Friday, September 15, 2017, 11:11 [IST]
Subscribe Newsletter