பெண்களுடன் கும்மாளம், டான்ஸ் பார்'ராக மாறிய மழழையர் பள்ளி - வீடியோ!

Posted By:
Subscribe to Boldsky

வைரல் என்றால் ஏதனும் ஒரு செய்து சில நாட்கள் தலைப்பு செய்தி போல நீடித்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு செய்தி வைரலாவதே தனி வைரல் லிஸ்டில் சேர்க்க வேண்டும் போல.

சில தினங்களுக்கு முன்னர் தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியுடன் உறவு வைத்துக் கொண்ட படங்கள் வெளியாகி மானத்தை வாங்கியது.

அது அடங்குவதற்குள் மழழையர் பள்ளி ஒன்றில் ஊரார் சேர்ந்து நடன பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாணவர் பென்ச்!

மாணவர் பென்ச்!

இந்த காணொளிப்பதிவில் அந்த பெண்கள் ஸ்டேஜ்-ல் நின்று ஆடும் இடம், மாணவர் படிக்கும் மேசை. அங்கே சுற்றி இருந்த பஞ்சாயத்து நபர்கள் அவர்கள் மீது பணத்தை வீசி மகிழ்ந்துள்ளனர். இதற்கு பின்னணி இசை வேறு ஒலிப்பரப்பாகியுள்ளது.

பள்ளி விடுமுறை!

பள்ளி விடுமுறை!

ரக்ஷா பந்தன் முன்னிட்டு சென்ற வாரம் பள்ளி மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நேரத்தில் தான் கிராம பஞ்சாயத்தார்கள் சாவியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குள் சென்று ஒரு நபரின் மகனின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

ஊர் தலைவர்கள்!

ஊர் தலைவர்கள்!

பார்ட்டி கொஞ்சம் பெரியளவில் தான் நடந்துள்ளது. சுற்றியுள்ள ஊர் தலைவர்கள் எல்லாம் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டு பெண்களுடன் கும்மாளம் அடித்துள்ளனர். போஜ்புரி பாடல்கள் ஒலிபரப்பி, நடனமாடும் பெண்களை அழைத்து வந்து விழாவை சிறப்பித்துள்ளனர் பஞ்சயாத்து ஆட்கள்.

வீடியோ!

இந்த வீடியோவை பார்த்தல் உங்களுக்கே கோபம் வரும். டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் கூத்துக்கள் இவை தான். உருப்படியாக ஏதும் நடந்தது போல தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Primary School Turned into a Dance Bar

Primary School Turned into a Dance Bar