இந்த இடங்களுக்கு போயிட்டு திரும்பி வர்றது அவ்வளவு சுலபம் இல்லன்னு உங்களுக்குத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மர்மம் நிறைந்தவாறான இடங்கள் மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும்படியான பல அழகிய இடங்களும், நினைத்து பார்க்க முடியாத அளவில் மிகவும் குறைந்த அளவில் மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. அதோடு சில இடங்கள் தொலை தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருக்கும்.

இக்கட்டுரையில் அப்படிப்பட்ட சில இடங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்வதும் சரி, திரும்பி வருவதும் சரி, அவ்வளவு சுலபமல்ல. சரி, இப்போது அப்படிப்பட்ட இடங்கள் எவையென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிட்கைர்ன் தீவு (Pitcairn Island)

பிட்கைர்ன் தீவு (Pitcairn Island)

நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவிற்கு இடையே இருப்பது தான் பிட்கைர்ன் தீவு. இந்த தீவின் மக்கள்தொகை வெறும் 50 தான் இருக்கும். இந்த தீவிற்கு அருகில் உள்ள விமான நிலையத்திற்கே 531 கி.மீ செல்ல வேண்டும். இந்த தீவிற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கப்பல் வரும். இந்த தீவை அடைய குறைந்தது 10 நாட்கள் ஆகும்.

Image Courtesy

கெர்குலன் தீவு (Kerguelen Islands)

கெர்குலன் தீவு (Kerguelen Islands)

தென் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவில் மக்கள் யாரும் வாழவில்லை. வேலைக்காக வெறும் பணியாளர்கள் மட்டுமே இந்த தீவில் உள்ளனர். இந்த தீவிற்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் கப்பல் செல்லும். இந்த தீவை அடைய 6 நாட்கள் ஆகும்.

Image Courtesy

இட்டோக்குர்டூர்மிட் (Ittoqqortoormiit)

இட்டோக்குர்டூர்மிட் (Ittoqqortoormiit)

க்ரீன்லாந்தில் அமைந்துள்ள இப்பகுதியின் மக்கள் தொகை 500 ஆகும். இந்த இடத்திற்கு வாரத்திற்கு 2 முறை விமானமும், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவை சில மாதங்களுக்கு ஒருமுறை என செல்லும்.

Image Courtesy

லா ரின்கொனாடா (La Rinconada)

லா ரின்கொனாடா (La Rinconada)

லா ரின்கொனாடா என்னும் நகரம் தங்க சுரங்கத்திற்கு அருகில் உள்ள பெருவியன் ஆண்டிஸில் அமைந்துள்ளது. இந்த நகரம் கடல்பரப்பில் இருந்து 5,100 மீட்டருக்கு மேலே அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள் தொகை 30,000 ஆகும். இந்த நகரத்திற்கு செல்லும் மலைப்பாதை சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இந்த நகரத்தை அடைய 1 வாரம் ஆகும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Places On Earth That Are Very Hard To Reach

Here are some places on earth that are very hard to reach. Read on to know more...
Story first published: Monday, April 17, 2017, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter