For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டக் அவுட்டாகாமல் சாதனை செய்த கிரிக்கெட் வீரர்கள் - டாப் 10!

டக் அவுட்டாகாமல் சாதனை செய்த கிரிக்கெட் வீரர்கள்!

|

அதிக டக் அவுட்டாகி சாதனைப் படைத்த வீரர்களை பற்றி அறிந்திருப்போம். அதிக போட்டிகளில் நாட்-அவுட்டாக விளையாடி சாதனைப் படைத்த வீரர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், தொடர்ந்து நூறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மேல் டக் அவுட்டாகாமல் விளையாடிய வீரர்கள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?

ஒரே இன்னிங்க்ஸ்ல் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை செய்வது ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபிக்கும். அதே போல அதிக நூறுகள் அடித்திருந்தால் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அறியலாம். நூறுகள் மட்டும் போதுமா? ஹிட்டர்களாக இருந்தால் அதிக நூறுகள் கூட சாத்தியம் தான். ஆனால், அதிக முறை டக் அவுட்டாகாமல் ஆடுவதற்கு எல்லாம் ப்ளேயராக இருக்க வேண்டும்.

அப்படி சிறந்த ப்ளேயராக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட டாப் டென் பேட்ஸ்மேன்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச் சுவர் தி கிரேட் வால் என புகழப்படும் ராகுல் டிராவிட் அதிக இன்னிங்க்ஸ் டக் அவுட்டாகாமல் இருந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் அதிகபட்சமாக 173 இன்னிங்க்ஸ் தொடர்ந்து டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். ஜனவரி 10, 2000 முதல் பிப்ரவரி 6, 2004 இடைப்பட்டக் காலத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் ராகுல்.

சச்சின் டெண்டுல்கர்!

சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் அரங்கில் சச்சின் செய்திடாத சாதனைகளே இல்லை எனும் வகையில் நிறைய சாதனைகள் செய்துள்ளார். அதிக சாதனைக்கு சொந்தக்காரர் என்ற சாதனையாளர் என்றுக் கூட சச்சினை குறிப்பிடலாம். இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கள் ராகுல் டிராவிடுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். ஜூலை 23,2008 முதல் நவம்பர் 14, 2013 வரை தொடர்ந்து 136 சர்வதேச இன்னிங்க்ஸ்களில் சச்சின் டக் அவுட்டாகாமல் சாதனை புரிந்துள்ளார்.

அலெக் ஸ்டீவர்ட்

அலெக் ஸ்டீவர்ட்

அலெக் ஸ்டீவர்ட் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனும் ஆவார். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை அலெக் ஸ்டீவர்ட்க்கு இருக்கிறது. இவர் மார்ச் 17, 1994 முதல் நவம்பர் 28, 1998 வரை தொடர்ந்து 135 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்க்ஸ் களில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Image Credit: alloutcricket

கார்ல் ஹூப்பர்

கார்ல் ஹூப்பர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக திகழ்ந்தவர் கார்ல் ஹூப்பர். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 227 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டிசம்பர் 6, 1997 முதல் பிப்ரவரி 23, 2003 வரை தொடர்ந்து 122 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்க்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார் கார்ல் ஹூப்பர்.

Image Credit: thecricketmonthly

ஜெர்மி கோனி

ஜெர்மி கோனி

ஜெர்மி கோனி நியூசிலாந்து அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 88 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் 15 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடியுள்ளார். ஜெர்மி கோனி ஜனவரி 9, 1983 முதல் மார்ச், 28, 1987 வரை தொடர்ந்து 117 சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Image Credit: sporting-heroes

ஜாவேத் மியாண்டட்

ஜாவேத் மியாண்டட்

1975 முதல் 1996 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பழம்பெரும் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட். 22 வயதிலேயே பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றவர் ஜாவேத் மியாண்டட். ஆனால், மிக குறுகிய காலமே இவர் கேப்டனாக இருந்தார். இவர் ஜூலை 23, 1987 முதல் ஜூன் 18, 1992 வரை தொடர்ந்து 112 சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ்

ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ்

ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷ வீரர். இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தொடர்ந்து 108 கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஆரம்ப போட்டியில் இருந்து நூறு போட்டிகள் டக் அவுட்டாகாமல் ஆடிய நபர் என்ற சாதனைக்கும் சொந்தக் காரர் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ். இவர் ஜனவரி 18, 2011 முதல் நவம்பர் 23, 2014 வரை டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணி கண்டெடுத்த ஆக்ரோஷ வீரர். கடைசி வரை போராடி வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். டிரா என்ற சொல்லுக்கு இவரது அகராதியில் இடமில்லை. போராடி வெல்வோம், இல்லை வீழ்வோம் என்ற குணம் கொண்ட சிங்கக்குட்டி. விராட் கோலி ஆகஸ்ட் 30, 2014 முதல் பிப்ரவரி 24, 2017 வரை தொடர்ந்து 104 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த சாதனை பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் விராட் கோலி.

முகம்மது யூசுப்

முகம்மது யூசுப்

முகம்மது யூசுப் பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரராக திகழ்ந்த நபர். இவர் ஜனவரி 29, 2006 முதல் நவம்பர் 24, 2009 வரை தொடர்ந்து 103 சர்வதேசப் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த டாப் டென் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். முகம்மது யூசப் பாகிஸ்தான் அணியில் விளையாடிய நான்காவது கிறிஸ்துவ வீரர் ஆவார். இவர் திடீரென ஒரு நாள் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்துக் கொண்டார். இதுக்குறித்து அதிர்ச்சி அடைந்ததாக இவரது தாய் பி.பி.சி செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

க்ளைவ் லாயிட்

க்ளைவ் லாயிட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 87 ஒருநாள் போட்டிகளும் விளையாடியவர் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் க்ளைவ் லாயிட். இவர் டிசம்பர் 29, 1979 முதல் ஆகஸ்ட் 9, 1984 வரை தொடர்ந்து 98 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.

Image Credit: wicricnews

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Consecutive Innings Without a Duck!

Most Consecutive Innings Without a Duck!
Story first published: Monday, November 27, 2017, 11:04 [IST]
Desktop Bottom Promotion