தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் கூட்டம்! மக்களே ஜாக்கிரதை!!

Subscribe to Boldsky

மதங்கள்... உங்களுக்குத் தெரிந்த மதங்களின் பெயரைப் பட்டியிலிடச் சொன்னால் வரிசையாக ஹிந்து, கிறிஸ்துவம், இஸ்லாம்,ஜெயின மதம், புத்த மதம் என்று எழுதுவீர்கள்... அதற்கு பிறகு??

அதன் பிறகும் எதாவது இருக்கிறதா என்ன? எல்லாமே இதைச் சுற்றித்தானே வரும்.. எங்களுக்கு மதமே கிடையாது என்று ஒரு பிரிவினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் இந்தப்பட்டியலில் இன்னும் ஒன்றிரண்டு பெயர்கள் இணையுமா என்று யோசிக்கிறீர்களா?

இந்தப்பட்டியில் ஒன்றிரண்டு அல்ல இருபத்தி ஐந்து பெயர்கள் இணையப்போகிறது . ஆம், உலகில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய விநோதமான மதங்கள் இவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25

#25

Raelism.இதனை ரேலியன் மொமண்ட் என்றும் சொல்கிறார்கள். இது 1974 ஆம் ஆண்டு Claude Vorilhon என்பவரால் துவங்கப்பட்டிருக்கிறது.

வேற்று கிரகத்திலிருந்து வந்த முன்னோர்கள். பூமியில் மனிதர்கள் வாழ்வதற்காகன சூழலை உருவாக்கி வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அவர்கள் கொடுத்த வாழ்வு தான் இது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

#24

#24

இந்த மதம் 1954 ஆம் ஆண்டு L.R.Hubbard என்பவரால் துவங்கப்பட்டிருக்கிறது. Scientology என்ற பெயரில் இருக்கும் இந்த மதம் தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

அவர்களுக்கு ஒரே ஒரு வாழ்க்கை தான் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் வேணும் என்று டயலாக் சொல்லும் பழக்கம் எல்லாம் அங்கு கிடையாது.

Image Courtesy

#23

#23

இஸ்ரேலில் இருக்கும் கறுப்பு ஹீப்ரூக்களுக்கு இடையே இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய மதமென்றால் Nation of Yahwehவைக் குறிப்பிடலாம். இதனை ஆரம்பித்தவர் Yahweh Ben Yahweh.

இதன் ஆணிவேர் கிறிஸ்வதும் என்று சொல்லப்பட்டாலும் இதனை ஹேட் க்ரூப் என்றும் கருப்பு மேலாதிக்க வழிபாட்டு முறை என்று வர்ணிக்கிறார்கள்.

Image Courtesy

#22

#22

Oberon Zell-Ravenheart என்பவரால் 1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது neo-pagan என்ற மதம். கோட்டடி, கலிஃபோர்னியாவில் இம்மதத்தினர் இருக்கிறார்கள். இவர்கள் Robert A. Heinlei என்பவரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதையில் வரும் ஒரு கதாப்பத்திரத்தை தங்களுடைய மீட்பராக வழிபட்டு வருகிறார்கள்.

Image Courtesy

#21

#21

இந்தோனேசியாவைச் சேர்ந்த மத குருவான Muhammad Subuh என்பவரால் 1920 ஆம் ஆண்டு இந்த மதம் ஆரம்பிக்கப்பட்டது. 1950 வரை இந்த மதம் தடைசெய்யப்பட்டிருந்தது.

இவர்கள் வாரத்தில் இரண்டு முறை ஒரு மணி நேரம் பூஜை நடத்துகிறார்கள்.

Image Courtesy

#20

#20

Pastafarianism எனப்படுகிற இந்த மதம் நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பாபி ஹெண்டர்சன் என்பவர் Flying Spaghetti என்ற அசுரனைப்பற்றி ஓர் கடிதம் எழுதுகிறார். இதனை அடிப்படையாக வைத்தே இந்த மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#19

#19

பசிபிக் தீவு பகுதியில் இருக்கிற Vanuatu என்ற ஊரில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் இதனை பின்பற்றுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகம் தோன்றியது 1974 ஆம் ஆண்டு.

ஏனென்றால் அப்போது தான் இளவரசர் ப்ளிப் மற்றும் இரண்டாவது எலிசபத் ராணி அவர்களின் ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#18

#18

இதனை நாம் கேள்விப்பட்டிருப்போம். மிகத் தீவிரமாக கடவுளை அடந்தே தீர்வோம் என்று சொல்லக்கூடிய அகோரிகள்.

இவர்கள் விசித்திரமான பழக்க வழக்கங்களை வைத்திருப்பார்கள். மனித மாமிசங்களைச் சாப்பிடுவது, உயிருள்ள மிருகங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவது ஆகியவையும் நடக்கும்.

#17

#17

கிறிஸ்துவம், புத்த மதம் மற்றும் இன்னொரு மதத்தின் கலவையாக Pana Wave

எனப்படுகிற இந்த மதம் இருக்கிறது. இது 1977 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவர்கள் மின் காந்த அலைகளைப் பற்றி மிகவும் வினோதமான கருத்துக்களை வைத்திருக்கி்றார்கள் . இயற்கையாக நடக்கூடிய விஷயங்களைக் கூட மின் காந்த அலைகளோடு தொடர்பு படுத்தியே பார்கிறார்கள்.

Image Courtesy

#16

#16

இவோ பெண்டா என்பவரால் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது Universe People எனப்படக்கூடிய இந்த மதம்.

இவர் வேற்று கிரகங்களிலிருந்து பலரும் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவதாகவும், அவர்களின் ஆலோசனைப்படி இந்த மதத்தை துவங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இவர்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

Image Courtesy

#15

#15

அமெரிக்காவைச் சேர்ந்த Ivan Stang என்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆரம்பித்திருக்கிறார்.இவர்கள் உண்மை, சத்தியம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

Image Courtesy

#14

#14

இதனை Nuwaubian மூவ்மெண்ட் என்றும் வழங்குகிறார்கள். இதனை ஆரம்பித்தது Dwight York.இவர்களிடையே கறுப்பு மேலாதிக்க குணம் வருகிறது. எகிப்தியர்களையும், அவர்களின் ப்ரமீடுகளையும் வணங்குகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் இன்னபிற குற்றங்களுக்கு 135 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள்.

Image Courtesy

#13

#13

Discordianism என்ற மதம் Kerry Thornley மற்றும் Greg Hill ஆகியோரால் 1960 ஆம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ராபர்ட் ஆண்டன் வில்சன் என்பவரின் புத்தகத்தினால் உலகம் முழுவதும் பயங்கர ஃபேமஸானது.

Image Courtesy

#12

#12

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யோகா குருவான ஜார்ஜ் கிங் என்பவரால் Aetherius Society ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பூமியைத் தவிர பிற கிரகங்களில் இருந்து அதீத சக்தியுடையவர்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

Church of Euthanasia எனப்படக்கூடிய இந்த மதம் தான் உலகிலேயே மனிதர்களுக்கே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருப்பவர்கள். இதனை ராபர்ட் கிம்பெர்க் என்பவர் 1992 ஆண்டு பாஸ்டானில் ஆரம்பித்திருக்கிறார்.

மக்கள் தொகை பெருக்கமே தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கும் காரணம் என்று இவர்கள் நம்புகிறார்கள். இவர்கள் அடிக்கடி சொல்கிற ஸ்லோகன் என்ன தெரியுமா?

‘உலகைப் காப்பாற்ற உங்களையே கொல்லுங்கள்' என்பது தான்.

Image Courtesy

#10

#10

ஜப்பானிய மதத்திற்கு மாற்றாக Ryuho Okawaon என்பவரால் 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது ஹேப்பி சையின்ஸ் என்ற மதம். இவர்கள் El Cantare என்பவரைத் தான் பூமியின் பாதுகாவலர்,கடவுள் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

#9

#9

டெம்பிள் ஆஃப் த ட்ரூ இன்னர் லைட் என்பது தான் இந்த மதத்தின் பெயர். இவர்கள் சில வகைச் செடிகள் கடவுளின் அங்கமாக பாவிக்கிறார்கள். தங்களைத் தவிர பிற எல்லா மதமும் ஓர் மாயத்தோற்றம் கொண்டது என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

#8

#8

உலகம் முழுவதிலும் இருக்கிற ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் பின்பற்றுகிற ஓர் மதம் இது ஜெட்டிசம் என அழைக்கப்படக்கூடிய இவர்கள் ஸ்டார் வார்ஸில் வருகிற ஜெட் என்கிற கதாப்பாத்திரத்தை மிகவும் நேசிக்கிறார்கள்.

அதில் ஜெட்டுக்கு இருக்கக்கூடிய ஆற்றல் மிகவும் உண்மையானதென நம்புகிறார்கள்.2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி லண்டனில் இருக்ககூடிய ஏழாவது மிகப்பெரிய மதம் இது தானாம்.

Image Courtesy

#7

#7

உலகிலேயே மிகவும் பழமையான மதம். அதுவும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நம்மை எல்லாரையும் விட மேலானவர் அவரை வணங்க வேண்டும் என்பதை முதன்முதலாக இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான். Zoroastrianism எனப்படக்கூடிய இம்மதத்தினர் கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இதனை துவங்கி விட்டார்கள்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை உலகிலேயே அசைக்க முடியாத மிகப்பெரிய மதமாக இருந்த மதம் தற்போது உலகிலேயே மிகக் குறைவானவர்கள் பின்பற்றுகிற ஓர் மதமாக இருக்கிறது.

Image Courtesy

#6

#6

Haitian Vodou எனப்படுகிற இந்த மதத்தை ஆப்ரிக்காவைச் சேர்ந்த அடிமைகளால் உருவாக்கப்பட்டது. ஹைதியிலிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் நடந்திருக்கிறது.

அதன் பின்னர் புரட்சி ஏற்பட்டு தனியாக பிரிந்திருக்கிறார்கள். அப்படிப் பிரிந்தவர்கள் ஆரம்பித்த மதம் தான் இது.

Image Courtesy

#5

#5

Neo-Druidry எனப்படக்கூடிய இந்த மதத்தினர் இயற்கையை வணங்க வேண்டும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இருந்த Celticஎன்ற ஒரு பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறார்கள்.

Image Courtesy

#4

#4

ஜமைக்காவில் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது Rastafari என்ற மதம். எத்தியோப்பியாவை ஆண்ட மன்னன் Haile Selassie I என்பவரை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டது ஓர் மதமாக வளர்ந்திருக்கிறது. இவர்கள் அந்த அரசர் கடவுள் போன்றவர் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

#3

#3

Iglesia Maradoniana எனப்படக்கூடிய இந்த மதத்தினர் அர்ஜெண்டீனாவை அடிப்படையாக கொண்டு வாழ்கிறார்கள். இவர்கள் மாரடோனாவின் மிகத்தீவிர பக்தர்களாக இருக்கிறார்கள். இவர்களின் அடையாளம் D10S.

ஸ்பானிஷ் மொழியில் D10S என்பதற்கு கடவுள் என்று அர்த்தமாம். அதோடு மாரடோனாவின் சட்டை எண் 10. இது 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#2

#2

Aum Shinrikyo என்ற மதம் 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து மதம் மற்றும் புத்த மதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை Shoko Asahara என்பவர் துவங்கியிருக்கிறார்.

மூன்றாவது உலகப்போர் நடக்கும் என்றும் அப்போது தாங்கள் மட்டும் அதாவது அந்த மதத்தினர் மட்டுமே உயிருடன் தப்பிப்பார்கள் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறாரகள்.

Image Courtesy

 #1

#1

Frisbeetarianism என்ற மதத்தினர் மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நம்புகிறார்கள். இதனை அமெரிக்காவச் சேர்ந்த நடிகர் ஜார்ஜ் கார்லின் என்பவரால் துவங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    Most Bizarre Religions Still Exist In the world

    Most Bizarre Religions Still Exist In the world
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more