2018-ல் ராசிப்படி உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி அமையும்?

Written By:
Subscribe to Boldsky

காதல் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தருவது. மற்ற உறவுகளை விட இந்த காதல் உறவில் தான், எதிர்பார்ப்புகள், பாசம் போன்றவைகளும் அதிகம், அதே சமயம் ஏமாற்றம், மோதல் போன்றவைகளும் அதிகம்.. இந்த வருடம் நீங்கள் காதல் வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்திருக்கலாம், சில பல கஷ்டங்கள், பிரிவுகள் போன்றவற்றை அனுபவித்திருக்கலாம்.

காலம் என்பது அனைத்தையுமே மாற்றக்கூடியது. வரப்போகிற 2018 ஆம் ஆண்டு உங்களது காதலை மேம்படுத்துமா? உங்களது காதல் திருமண உறவில் இணையுமா என்பது போன்ற பல கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புகள் உங்களுக்குள் இருக்கலாம். இந்த பகுதியில் வருகின்ற 2018 ஆம் வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மேஷம்

1. மேஷம்

உங்களது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகலாம். உங்களுடைய துணையுடன் சிறு சிறு மோதல்கள் வந்து போகலாம். ஆனால் உங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் பெரிய நெருக்கடிகளை தீர்க்கும். இந்த ஆண்டின் முதல் பகுதியில் உங்களது காதல் வாழ்க்கை அவ்வளவு நன்றாக செல்லவில்லை என்றாலும் கூட, அடுத்த பாதியில் சிறப்பாக அமையும்.

உங்களது துணையுடன் நீங்கள் செலவிடும் நேரத்தினை நீங்கள் முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்..! தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படாமல், வாழ்க்கையை பொருமையாக கையாழுங்கள். காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.

2. ரிஷபம்

2. ரிஷபம்

இந்த வருடம் உங்களது காதல் உறவு மேம்படும். உறவில் ஒற்றுமை அதிகரிக்க நீங்கள் நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். திருமண வாழ்க்கையில், நிதி நெருக்கடிகளால் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உங்களது துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் உங்களது காதல் சிறக்கும்.

3. மிதுனம்

3. மிதுனம்

உங்களது காதல் உறவில் சில உணர்ச்சிமிக்க சம்பவங்கள் நடக்கலாம். உங்களது காதலை நிரூபித்து காட்ட நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டியிருக்கும். சாவாலன வாழ்க்கை சூழலை சாதூர்யமாக சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம். சந்தேகங்கள் கூடாது..! உங்களது காதலில் பிரச்சனையை கொண்டுவரும் விவாதங்களை தவிர்க வேண்டியது அவசியமாகும்.

4. கடகம்

4. கடகம்

உங்களது காதல் இந்த ஆண்டு வழுப்படும். நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக் கொள்வீர்கள். உங்களது துணையுடன் சந்தோஷமான நேரங்களை செலவிட கூடும். பிரிந்த காதல் கை கூடும். காதல் மற்றும் திருமண உறவில் நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் பொருமையாக இருக்க வேண்டியது அவசியம்.

5. சிம்மம்

5. சிம்மம்

உங்களது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் குரலை உயர்த்தி பேசுவது உங்களது துணைக்கு மன சங்கடத்தை உண்டு செய்யும். காதலில் சகிப்புதன்மை என்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்து நடங்கள். சில சாவல்களை சந்திக்க வேண்டியிருக்கும். காதலில் வரும் சிக்கல்களை சமாளித்து போக நடைமுறை அணுகுமுறை அவசியமாகும்.

6. கன்னி

6. கன்னி

உறவுகளுக்குள் சில சண்டைகள் வந்து போகலாம். காதலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு என அனைத்து சுவைகளும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சந்தேகம் கூடாது. வீண் சண்டைகளால் குழப்பமான மனநிலை உண்டாகும். விஷயங்களை நிதானமாக கையாண்டால், பிரச்சனைகளை எளிதாக கடந்து போகலாம்.. கோபங்களால் காதலை மறந்து போக கூடாது.

7. துலாம்

7. துலாம்

உங்கள் காதல் வாழ்க்கை இந்த வருடம் இனிமையாக இருக்கும். நீங்கள் நீண்ட நாளாக காத்திருந்த ஒரு விஷயம் சீக்கிரமாக கிடைக்கும். சில தடைகள் தோன்றி, மறையும். எதிர்பாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சங்கடங்கள் வந்தாலும், இந்த ஆண்டு உங்களது காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

8. விருச்சிகம்

8. விருச்சிகம்

வரும் 2018 ஆம் ஆண்டு உங்களுக்கு இன்பம், துன்பம் இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கும். காதலில் இணக்கம் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களுடன் சிலருக்கு காதல் உண்டாகலாம். நேர்மறை சிந்தனைகள் உங்களது காதலுக்கு வலு சேர்க்கும். உங்களது காதல் உறவு நீடித்து இருக்க கூடியதாக இருக்கும். துணையின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வது நல்லது. ஒரு செயலை செய்யும் முன் உங்களது துணையின் அனுமதியுடன் செய்யுங்கள்.

9. தனுசு

9. தனுசு

காதலில் இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமண உறவை நோக்கி நகர்வார்கள். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். காதல் உறவில் ஆரவமும் முன்னேற்றமும் அதிகரிக்கும். உங்களது துணை உங்களது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்வார்.

10. மகரம்

10. மகரம்

இத்தனை ஆண்டுகளாக இருந்த வந்த கஷ்டங்கள் தீரும். காதல் உறவு வழுபெற்று அமையும். உங்களது துணையுடன் சிறிது கூடுதல் நேரத்தை செலவிட்டு மனம் விட்டு பேச வேண்டியது அவசியம். இது உறவில் இனிமையை கூட்டும். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் உங்களது மனதை புண்படுத்தலாம். சில சண்டை சச்சரவுகள் வந்தாலும், அவை காணாமல் மறைந்துவிடும்.

11. கும்பம்

11. கும்பம்

2018 - ஆம் ஆண்டு உங்களை மேம்படுத்தும் ஒரு ஆண்டாக அமையும். நட்பு, காதல் கைகூடும், உங்களது துணையுடன் இனிமையான நேரங்களை செலவிடுவீர்கள். ரொமேண்டிக்கான அனுபவங்கள் கிடைக்கப்பெறும். ஆண்டின் நடுப்பகுதியில் சில பிரச்சனைகள் தோன்றி மறையலாம். எனவே கவனமாக இருக்கவும். உங்கள் துணையுடன் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

12. மீனம்

12. மீனம்

உங்களது காதல் உறவில் நீண்டு கொண்டே செல்லும் வாக்குவாதங்களை நிறுத்திக் கொள்வது நல்லது. இது உங்களது காதலை சீரளிக்கும். தவறான புரிதல்களை பேசி தெளிவாக்கி கொள்வது சிறப்பு. உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு என நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்வது என்பது காதலையும் வழுப்படுத்தும். பொறுமையாக இருந்தால், ரொமேண்டிக்கான காதல் வாழ்க்கை அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Love life based on Your Zodiac Sign

Love life based on Your Zodiac Sign
Story first published: Friday, December 15, 2017, 12:30 [IST]