இந்நேரம் ‘ஜெயலலிதா’ இருந்திருந்தால்.... தமிழகத்துல இதெல்லாம் நடந்திருக்குமா?

Subscribe to Boldsky

செப்டம்பர்22, 2016 கடந்த ஆண்டு இதே நாளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள். சென்னையில் செப்டம்பர்22 ஆம் தேதி இரவே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திடீரென தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைபாடு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் கழித்து ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

List of Projects which is signed after Jayalalitha death

தமிழக அரசியலில் திடீர் வெற்றிடம். ஜெயலலிதா மீது விமர்சனம் இருப்பவர்கள் கூட விமர்சனங்களை எல்லாம் மறந்து நாகரிகமாக நடந்து கொண்டது எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றைக்கு ஆரம்பித்த சுழல் இன்று வரை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விவாதிக்கும் போது ஜெயலலிதா இருந்திருந்தால்.... என்ற பேச்சு எழாமல் இல்லை என்றே சொல்லாம். ஜெயலலிதா இருந்த போது எதிர்த்த பல விஷயங்கள் அவரது மறைவுக்குப் பின் வேக வேகமாக கையெழுத்தானது. அவற்றில் சில

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நீட் தேர்வு :

நீட் தேர்வு :

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்று உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நவம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வு செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை துறைமுகம் :

சென்னை துறைமுகம் :

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் விரைவுச் சாலைக்கு ஜெயலலிதா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இத்திட்டம் 2012 ஆம் ஆண்டிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதனை நிறைவேற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைப்பெற்றது. ஆனால் ஜெயலலிதா இறந்த இரண்டே நாட்களில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் விரைவுச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அன்று தமிழக முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.

உணவு பாதுகாப்புச் சட்டம் :

உணவு பாதுகாப்புச் சட்டம் :

கூட்டாட்சி அமைப்பில் மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிப்பதே சிறந்த வழி , தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு என்பது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதா குழப்பமும், தவறுகளும் நிறைந்ததாகவும் உள்ளது - இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள,

இலக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு 1,800 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று வலுவாக இத்திட்டத்தை எதிர்த்தார் ஜெயலலிதா.

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2016 நவம்பர் 1 ஆம் தேதி அன்று உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

உதாய் திட்டம் :

உதாய் திட்டம் :

மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க மத்திய அரசு அறிவித்த திட்டம் தான் உதாய் மின் திட்டம். இதனை ஜெயலலிதா இருந்த போது எதிர்த்து இத்திட்டத்தில் தமிழகம் இணையாமல் இருந்தது.

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2016 அக்டோபர் ஒன்றாம் தேதி உதாய் திட்டத்தில் தமிழகம் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி :

ஜி.எஸ்.டி :

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மசோதாவாக இருந்த போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.ஆனால் அவர் இறந்த பிறகு லோக்சபா துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுறை ஜி.எஸ்.டி வரியை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    List of Projects which is signed after Jayalalitha death

    List of Projects which is signed after Jayalalitha death
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more