Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
மரணத்தை பரிசளிக்கும் பூக்களை பார்த்திருக்கிறீர்களா?
விசித்திரமான பூக்களைப் பற்றிய பட்டியல்
பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

கால்மியா பூ :
பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப்பூவில் அதிக விஷத்தன்மை உள்ளது. இதன் இலைகளை பிய்த்து வாயில் போட்டால் வாந்தியில் துவங்கி ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும்.
Image Courtesy

ஒனாந்தே பூ :
ஸ்வீடன், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது. இதனை சாப்பிடுவதால் போதை ஏறும். தொடர்ந்து உட்கொண்டால் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட 70 சதவீதம் வரை வாய்ப்புகள் உண்டு.
Image Courtesy

அடேனியம் பூ :
பூக்களைப் பறித்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைப்பார்கள் அந்த தண்ணீர் எல்லாம் வற்றியபிறகு பூக்கள் வெந்து கெட்டியான பிசினாக மாறும். இது பயங்கர விஷத்தன்மை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில்,வேட்டைக்காரர்கள் வேட்டையாடப் பயன்படுத்தும் அம்புகளில் இந்த விஷத்தை தடவிக் கொள்வார்கள்.
Image Courtesy

கேஸ்டர் பூ :
இந்தியாவில் இந்த செடியை அதிகம் காணமுடியும். அதிக விஷத்தன்மையுள்ள பூ என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.
Image Courtesy

டெத் பூ :
இந்த வகை பூக்களில் இரண்டு வகை உண்டு . ஒன்று, விஷத்தன்மை இல்லாதது. இன்னொன்று, அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இரண்டையும் அவ்வளவு எளிதாக வித்யாசம் காண முடியாது. இந்த வகைப் பூக்கள் உள்ளுறுப்புக்களை பாதித்து மரணத்தை உண்டாக்கும்.
Image Courtesy

கடும்புல் பூ:
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ ‘நிலவின் பூ' என்றும் சொல்லப்படுகிறது. இது காலை நேரங்களில் மொட்டாக இருக்கும் இரவில் தான் படிப்படியாக விரியும். விரிந்த இரண்டு மணி நேரத்தில் சுருங்கிவிடும்.
Image Courtesy

தீக்குச்சிப்பூ :
இதன் வடிவமே இதற்கு இப்பெயர் வரக்காரணம். அர்ஜன்டீனா, ப்ரேசில் நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பூ விற்கு பெரிதாக பராமரிப்பு தேவையில்லை. ஒரு முறை ஊன்றிவிட்டால் அதன் தண்டுகளில் இருந்து கூட புதிய செடி உருவாகிடும்.
Image Courtesy

கங்காரு பாதம் பூ :
இதனைப் பார்க்க கங்காருவின் விரிந்த பாதங்களைப் போன்றே காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவை இருப்பிடமாகக்கொண்ட இந்த பூவை பூங்கொத்துகளில் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகப்படியான தேன் கிடைக்கும்.

பாட்டில் பூ :
பாட்டிலை கழுவ உதவும் பிரஷ் போல இருப்பதால் இதற்கு இப்பெயர். இதிலேயே 40க்கும் மேற்ப்பட்ட வகைகள் இருக்கின்றன. இவற்றுக்கு வாசம் எதுவும் இருக்காது.
Image Courtesy



Click it and Unblock the Notifications