For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகவத புராணத்தில் இன்டர்ஸ்டெல்லர் ரிலேட்டிவிட்டி தியரி. அன்றே தெள்ளத்தெளிவாக எழுதிய வியாசர்!

வியாசர் எழுதிய பாகவத புராணத்தில் இன்டர்ஸ்டெல்லர் ரிலேட்டிவிட்டி தியரி குறித்த பதிவுகள் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

|

பகவான் திருமாலின் அவதாரங்கள் பற்றி எடுத்துரைக்கும் வியாசர் எழுதிய பாகவத புராணத்தில் இன்டர்ஸ்டெல்லர் ரிலேட்டிவிட்டி தியரி குறித்த பதிவுகள் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

சிலருக்கு இது வியப்பையும், குழப்பத்தையும் தரலாம். கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களுக்கு கோபமும் வரலாம்.

ஆனால், இந்திய புராணங்களில் ஒன்றான பாகவத புராணத்தில் வியாசர் ரிலேட்டிவிட்டி தியரி பற்றி குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் அறிந்துக் கொள்ள தான் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ககுத்மி!

ககுத்மி!

ரேவதன் எனும் அரசன் துவாரவதீ எனும் கடல் சார்ந்த பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு குழந்தைகள். அவர்களில் மூத்தவன் தான் ககுத்மி.

ககுத்மிக்கு ரேவதி என்ற மகள் இருந்தால். அவர் பேரழகி, ககுத்மியின் மொத்த பாசத்திற்கும் உரியவள்.

ரேவதி!

ரேவதி!

ரேவதிக்கு சிறந்த மணவாளனை தேர்வு செய்ய வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என எண்ணினான் ககுத்மி. அதற்கு வானுலகில் பிரம்மனின் உதவி நாட தீர்மானித்தான்.

பிரம்மலோக பயணம்!

பிரம்மலோக பயணம்!

இதற்காக தனது ஆசை மகள் ரேவதியை அழைத்துக் கொண்டு பிரம்மனை காண பிரம்மலோகம் சென்றான் ககுத்மி. அங்கே பிரம்மனை காண 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டானது. பிறகு, பிரம்மன் சந்தித்து தனது கோரிக்கையை வித்தாம் ககுத்மி.

பிரம்மன் விளக்கம்!

பிரம்மன் விளக்கம்!

அப்போது தான் பிரம்மன் ககுத்மியிடம், "ககுத்மி நீ இங்கே பயணம் செய்து காத்திருந்த இருபது நிமிடங்களில் நீ வாழ்ந்து வந்த இடத்தில் 27 மகாயுகங்கள் கழிந்து விட்டது.

உன் வம்சத்தில் மகன், பேர மக்கள் என பல வம்சாவளி இறந்துவிட்டனர். இப்போது நீ அங்கே சென்றால் மொத்தமும் மாறியிருக்கும் என கூறினார்.

கண்ணன், பலராமன்!

கண்ணன், பலராமன்!

இப்போது பகவான் (திருமால்) அங்கே கண்ணன் அவதாரத்தில் அண்ணன் பலராமனுடன் துவாபர யுகத்தில் வாழ்ந்து வருகிறார் என கூறி ககுத்மிக்கு அதிர்ச்சியை அளிக்கிறார். நீ உன் மகள் ரேவதியை பலராமனுக்கு திருமணம் முடித்துவை என அறிவுரைத்து அனுப்பினர் பிரம்மன்.

வனவாசம்!

வனவாசம்!

தன் மகள் ரேவதியை பலராமனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு பிறகு ககுத்மி வனவாசம் மேற்கொண்டார் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கால வேறுபாடு!

கால வேறுபாடு!

  1. கலி யுகம் என்பது 432000 ஆண்டுகள்
  2. துவாபர யுகம் என்பது 2 x 432000 ஆண்டுகள்
  3. திரோத யுகம் என்பது 3 x 432000 ஆண்டுகள்
  4. கிருத யுகம் என்பது 4 x 432000 ஆண்டுகள்
  • கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
  • திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
  • துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
  • கலியுகம் - 432,000 வருடங்கள்
  • கலியுகம் 3102 BCEல் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

    கிருத, திரோத, துவாபர மற்றும் கலியுகம் என்ற 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.

    14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன என கூறப்படுகிறது.

    வெறும் கதையா? அறிவியலா?

    வெறும் கதையா? அறிவியலா?

    ஒருவேளை இது வெறும் கதை என சிலர் சந்தேகித்தாலும் கூட, இதில் கூறப்பட்டுள்ள கூற்று என்பது இன்றைய அறிவியலோடு ஏறத்தாழ ஒத்துப்போக கூடிய உண்மையாக தான் இருக்கிறது.

    அவை உண்மை சம்பவமா? அல்லது அறிவியலை கதைகளாக, புராணங்களாக அவர்கள் எழுதி வைத்தனரா? என்பது பெரும் கேள்விகளாக நிலை கொள்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interstellar Relativity Theory in Bhagavata Purana Kakudmi Story!

Interstellar Relativity Theory in Bhagavata Purana Kakudmi Story!
Desktop Bottom Promotion