Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
15 வயதில் திருமணம், 22 வயதில் மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ்... - இந்திராணி ரஹ்மான்!
மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்திய பெண் இந்திராணி ரஹ்மான்
ஜூன் 28,1952ல் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார் இந்திராணி ரஹ்மான். இவர் இதே ஆண்டில் தான் மிஸ் இந்தியா பட்டமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திராணி 15 வயதிலேயே திருமணம் ஆனவர். குழந்தை பெற்ற பிறகு தான் இவர் மிஸ் இந்தியா பட்டமே வென்றார். இவர் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கெடுத்த போது வயது 22.

#1
இந்தியாவை சேர்ந்த பெண், அதுவும் தமிழ்நாட்டு பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருவர். தாய்மை அடைந்த ஒருவர்.. முக்கியமாக 1950-களில்... நீச்சல் உடையில் தோன்றுவாரா என்ற எண்ணம் பலருக்கும் எப்போது எழுந்து இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Image Courtesy -WIKIPEDIA

#2
ஆனால், அந்தாண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் நீச்சல் உடை பிரிவில் அனைவரையும் காட்டிலும் மிக அழகாக தோன்றியவர் இந்திராணி தான்.
Image Courtesy -LIFE

#3
இந்திராணி அந்த கண்கள் தான் மற்ற 30 போட்டியாளர்களை விட மிகவும் அழகாக தெரிய முக்கிய காரணமாக இருந்தது. அதிலும், அவரது நெற்றி பொட்டு அழகின் உச்சமாக திகழ்ந்தது.
Image Courtesy - LIFE

#4
இந்திராணி சிறுவயதில் இருந்தே பரதம் கற்றுக் கொண்டவர். இவர் அழகி பட்டங்கள் வெல்வதற்கு முன்னரே மிக பிரபலமான பரதநாட்டிய கலைஞராக இருந்தார்.
Image Courtesy - IndiaTimes

#5
பரதநாட்டியம் மட்டுமின்றி, குச்சிபுடி, கதகளி மற்றும் ஒடிசி போன்ற நடன கலைகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். இவர் நடனம் பயில ஆரம்பித்தது 9 வயதில்.
Image Courtesy - LIFE

#6
15 வயதில் இவர் ஹபிப் ரஹ்மான் என்ற ஆர்கிடெக்ட் நபரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.
Image Courtesy - IndiaTimes

#7
1969-ல் பத்மஸ்ரீ பட்டம் வென்றவர் இந்திராணி. மேலும், சங்கீத நாடக அகாடமி விருதும், தரக்நாத் தாஸ் விருதும் வென்றவர்.
Image Courtesy - IndiaTimes

#8
இவர் பின்னாட்களில் இவரது தாயுடன் நியூயார்க் (1976) சென்று செட்டில் ஆகிவிட்டார். மேலும், அங்கு தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி, உலகம் முழுவதும் நிகழ்சிகள் நடத்தி வந்தார்.
Image Courtesy -SUKANYARAHMAN

#9
1961-ல் தேசிய சுற்றுலா சென்று பரதம் ஆடினார். அதேபோல அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி மற்றும் ஜவஹர்லால் நேரு முன் வாஷிங்டன் டி.சி-ல் பரதம் ஆடியுள்ளார் இந்திராணி.
Image Courtesy -THEHINDU

#10
மேலும், இந்திராணி பேரரசர் ஹைலே செலசஸி (Haile Selassie), ராணி எலிசபெத் இரண்டாம், மாவோ சேதுங், நிகிடா குருசேவ், மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் முன்னரும் பரதம் ஆடியுள்ளார்.
Image Courtesy -INDIANEXPRESS

#11
1976-ல் நியூயார்க்கில் உள்ள ஜுல்லியார்ட் பள்ளியில் நடன பிரிவில் ஆசிரியராக இருந்தார்.
Image Courtesy -NLA.GOV.AU

#12
அமெரிக்காவின் ஹார்வர்ட் உட்பட பல பல்கலைகழகங்களில் இவர் நடனம் கற்பித்துள்ளார். இறக்கும் வரை உலகம் என்றும் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தார்.
Image Courtesy - IndiaTimes



Click it and Unblock the Notifications











