எல்லாருடைய அக்கவுண்டிலும் 85 லட்சம் - மோடிக்கே சவால் விடும் சீனாவின் அதிசய கிராமம்!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் யாருக்கு தான் பணக்காரன் ஆகக்கூடாது என்ற ஆசை இருக்கும்? நாம் வாழ்ந்து வரும் வர்த்தக உலகில் பணம் இல்லாமல் அணுவும் அசையாது. நம் நாட்டில் கூட ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என கூறினர். எப்போது என்று தான் கூறவில்லை.

ஆனால், சீனாவில் இருக்கும் ஹுவாக்ஷி (Huaxi) என்ற கிராமத்தில் இருக்கும் மக்களின் அக்கவுண்டில் 85 இலட்சம் பணம் போடப்படுகிறது. அனைவருக்கும் தங்குவதற்கு வீடு தனியாக தரப்படுகிறது.

உலகத்தரத்தில் ஆடம்பர வாழ்க்கை, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு சொகுசு வாழ்க்கை. ஆச்சரியமாக இருக்கிறதா? கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கிறது சீனாவின் ஹுவாக்ஷி கிராமத்தை பற்றி அறிந்துக் கொள்ளும் போது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணக்கார கிராமம்!

பணக்கார கிராமம்!

சீனாவின் பணக்கார கிராமமாக திகழ்ந்து வருகிறது ஹுவாக்ஷி. இந்த கிராமத்தை உருவாக்கியவர் அப்பகுதியின் லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வூ ரென்போ என்பவர்.

இந்த கிராமம் 1951ல் உருவாக்கப்பட்டது. இங்கே வசிக்கும் மக்கள் அனைவரின் அக்கவுண்ட்டிலும் 85 இலட்சம் பணம், சொந்தமாக ஒரு பங்களா, கார் இருக்கிறது. இங்கே மொத்தமே 2000 பேர் தான் வசிக்கிறார்கள்.

டீல்!

டீல்!

இந்த கிராமத்தில் வசிக்க அவ்வளவு எளிதாக தகுதி பெற்றுவிட முடியாது. முதலில் அந்த கிராமத்தில் இருக்கும் கம்பெனியில் ஒரு வேலை இருக்க வேண்டும். அந்த வேலை மட்டும் கிடைத்துவிட்டால் உங்களுக்கு எளிதாக அந்த ஆடம்பர வாழ்வும் கிடைத்துவிடும்.

அவர்களே எல்லாமும் கொடுத்துவிடுவார்கள். கார், பங்களா, பணம் எல்லாமும். அவரவர் வெளியே செல்ல அங்கே ஹெலிகாப்டர் தான் டாக்ஸியாக பயன்படுத்தப்படுகிறது.

ஒரே ஒரு விஷயம்!

ஒரே ஒரு விஷயம்!

அங்கே இருக்கும் வரை நீங்கள் எல்லா வசதிகள் கொண்டு இருக்கலாம். ஆனால், அந்த கிராமத்தை விட்டு மீண்டும் வெளியேறும் போது ஒரு சாதாரண மனிதனாக தான் வெளிவர முடியும். மீண்டும் ஏழையாக. எல்லாமும் திரும்ப பெற்றுக்கொள்ள படும்.

அப்படி என்ன வேலை?

அப்படி என்ன வேலை?

சீனாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் கிராமம் ஹுவாக்ஷி. மில்லியன் கணக்கில் வருமானம் உயர்ந்து கொண்டே போகிறது. இவர்கள் ஸ்டீல் உற்பத்தி, டெக்ஸ்டைல் மற்றும் உடை உற்பத்தி செய்வதை வேலையாக கொண்டுள்ளனர்.

ஒரு கிலோமீட்டர்!

ஒரு கிலோமீட்டர்!

இந்த கிராமத்தில் மொத்த சுற்றளவே ஒரு கிலோமீட்டர் தான்.தனித்துவமான கட்டிடங்கள், நிறுவனங்கள், ஏறத்தாழ குட்டி துபாய் போல காட்சி அளிக்கிறது இந்த ஆடம்பர கிராமம் ஹுவாக்ஷி.

மாடர்ன்!

மாடர்ன்!

மாடர்ன் உலகில் இருக்கும் எல்லா ஆடம்பரங்களும் இங்கே இருக்கின்றன. லாங் விஷ் எனப்படும் சர்வதேச ஹோட்டல் இங்கே இருக்கிறது. 826 அறைகள், 16 பிரசிடென்டல் சூட்கள். மேலும், இங்கே ஓர் இரவுக்கு 10 லட்சம் என்ற வாடகை மதிப்பில் ஒரு தங்க பிரசிடென்டல் சூட்டும் இருக்கிறது.

உயர்ந்த கட்டிடங்கள்!

உயர்ந்த கட்டிடங்கள்!

இங்கே ஹேன்கிங் விலேஜ் ஆப் ஹுவாக்ஷி என ஒரு உயர்ந்த கட்டிடம் இருக்கிறது. இங்கே 72 மாடிகள் இருக்கின்றன. இந்த கட்டிடத்தின் உயரம் மட்டுமே 328 மீட்டர். இது ஈபிள் டவரை காட்டிலும் நான்கு மீட்டர் உயரமானது என கூறுகின்றனர்.

Images Source: Reuters

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Villagers Here Have Rs 85 Lakhs In Their Accounts!

Villagers Here Have Rs 85 Lakhs In Their Accounts!