சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த விசித்திரமான 20 பேர்!

Posted By:
Subscribe to Boldsky

விசித்திரங்களுக்கு பஞ்சம் இல்லாத உலகம். ஏலியன் வந்து செல்கிறதா? பிரமிடுகளை யார் கட்டினர்? பறக்கும் தட்டு அங்கே காணப்பட்டது உண்மையா? என பல கேள்விகள், வீடியோக்கள், போலி ஆதாரங்கள் என நாம் வியக்காத விஷயங்கள் இல்லை.

ஆனால், நாம் பெரிதாக வியக்க பலர் சென்ற நூற்றாண்டுகளில் உயிர் வாழ்ந்துள்ளனர். ஏதோ ஒரு குறை, ஏதோ ஒரு நோய், குறைபாடு அவர்களை உலக மக்களில் இருந்து விசித்திரமானவர்கள் என கொஞ்சம் ஒதுக்கி வைத்திருந்தது.

Haunting Photos From The Tragic “Freak Shows” Of Decades Past!

அன்று ஆன்லைன் இல்லை என்ற காரணத்தால் வைரலாக டிரென்டாக வேண்டியவர்கள், சர்கஸ்-ல் பணிபுரியும் நிலையும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாடி பெண்!

தாடி பெண்!

பியர்ட் வுமன் என அறியப்பட்ட இந்த பெண்ணின் பெயர் அனி ஜோன்ஸ். இவர் பி.டி. பர்னம் எனும் அமெரிக்க அரசியல் வாதியுடன் பேச்சாளராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தவராக விளங்கியவர்.

Image Credit: Charles Eisenmann/Wikimedia Commons

மாற்றான் சகோதரர்கள்!

மாற்றான் சகோதரர்கள்!

மாற்றான் சூர்யா சகோதரர்கள் போல நிஜ வாழ்வில் இருந்தவர்கள். இவர்கள் தாய்லாந்தில் 1811ல் வாழ்ந்தவர்கள். இவர்கள் பெயர் சாங் மற்றும் எங் பங்கர். இவர்கள் வடக்கு கரோலினாவில் செட்டில் ஆயினர். இவர்கள் சகோதரிகள் இருவரை திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 21 பிள்ளைகள் இருந்தனர்.

Image Credit: Wikimedia Commons

யானை கால்!

யானை கால்!

தி ஓஹியோ பிக் ஃபூட் கேர்ள் என அறியப்பட்ட இந்த பெண்ணின் பெயர் ஃபன்னி மில்ஸ். இவருக்கு மில்ரோய் எனப்படும் நோய் தாக்கம் இருந்தது. இதன் காரணத்தால் இவரது கால்கள் இரண்டும் மிகவும் பெரிதாயின.

Image Credit: Charles Eisenmann/Syracuse University Library

எலாஸ்டிக் மனிதன்!

எலாஸ்டிக் மனிதன்!

Ehlers-Danlos Syndrome தாக்கத்தின் காரணத்தால் ஃபிளிக்ஸ் அவரது சருமம் எலாஸ்டிக் தன்மை கொண்டது. இதன் காரணத்தாலேயே இவர் எலாஸ்டிக் மேன் எனும் பெயர் கொண்டார்.

Image Credit: Charles Eisenmann/Syracuse University Library

யானை மனிதன்!

யானை மனிதன்!

யானை மனிதன் என அறியப்பட்ட இவரது பெயர் ஜோசப் மெர்ரிக். பெற்றோரால் நிராகரிக்கப்பட்டு, தனிமையில் வாடிய மனிதர். இவரது முகம் கோரமாக இருந்தது. இவரை முகத்தின் தோற்றம் கொண்டு இவரை யானை மனிதன் என அழைத்து வந்தனர்.

Image Credit: Wikimedia Commons

இறால் சிறுவன்!

இறால் சிறுவன்!

கிராடி ஸ்டில்ஸ் ஜூனியர் என்கிற இறால் சிறுவன் இவன்.இவரது குடும்பத்தில் பல தலைமுறையாக இந்த தாக்கம் இருந்து வந்தது. கை, கால்கள் இறால் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தார். தனது மகளை மணக்கவிருந்த மணமகனை கொலை செய்தவர் இவர்.

Image Credit: Paul Balanchuk/Flickr

ஹியூமன் ஸ்கெலிட்டன்!

ஹியூமன் ஸ்கெலிட்டன்!

இவரை ஹியூமன் ஸ்கெலிட்டன், மனித எலும்புக்கூடு என கூறி கேலி செய்து வந்தனர். இவரது பெயர் ஐசாக் ஸ்ப்ராக். தனது 12 வயதில் இருந்து காரணமே இல்லாமல் உடல் எடை குறைய ஆரம்பித்தது இவருக்கு. இவர் இறக்கும் வரை இவரது உடல் எடை குறைந்துக் கொண்டே இருந்தது.

Image Credit: Wikimedia Commons

நாய் மனிதன்!

நாய் மனிதன்!

ரஷ்யாவை சேர்ந்தவர் படோர் ஜெப்டிசூவ். இவரை ஜோ ஜோ நாய் முக சிறுவன் என அழைத்து வந்துள்ளனர். ஸ்டார் வார்ஸ் படத்தில் ஒரு கதாபாத்திரம் படைக்க இவர் தான் காரணமாக இருந்தார்.

Image Credit: Fred Park Swasey/Wikimedia Commons

ஒட்டுண்ணி ட்வின்!

ஒட்டுண்ணி ட்வின்!

இவரது பெயர் பிரான்க் லென்டினி. முழுமையான இரட்டையராக இன்றி, ஒட்டுண்ணி போல ஒரே ஒரு கூடுதல் கால் மட்டும் கொண்ட ஒட்டுண்ணி ட்வின்னாக திகழ்ந்தார் இவர். இவர் அமெரிக்காவில் இருந்து இத்தாலி சென்றுவிட்டார்.

Image Credit: Ronald G. Becker/Syracuse University Library

மார்ஸ் மனிதர்கள்!

மார்ஸ் மனிதர்கள்!

ஜியார்ஜ் மற்றும் வில்லி இருவரும் அல்பினோ இரட்டையர்கள். இவர்களை கடத்தி ஒரு சர்கஸ்-ல் மேன் ப்ரம் மார்ஸ் என கூறி கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி வந்தனர்.

Image Credit: Marvin/Flickr

வினோத இரட்டையர்!

வினோத இரட்டையர்!

இடுப்பு பகுதி இணைந்து பிறந்த இரட்டையர்கள் இவர்கள். இவர்கள் மூன்று வயதில் இருந்து சர்கஸ் நிகழ்சிகளில் பங்குபெற்று வந்தனர்.

Image Credit: Wikimedia Commons

மனித ஆந்தை!

மனித ஆந்தை!

மார்டின் லூரெல்லோ எனும் இவர் மனித ஆந்தை என பிரபலமாக இருந்தவர். இவரால் கழுத்தை 180 டிகிரி அளவிற்கு திருப்ப முடியும்.

Image Credit: Alkajuggler/YouTube

நான்கு கால் பெண்!

நான்கு கால் பெண்!

டெக்ஸாஸ் சேர்ந்த இவருடைய பெயர் மைர்டில் கோர்பின்.இவருக்கு இரண்டு இடுப்பு மற்றும் நான்கு கால்கள் இருந்தன.

Image Credit: Charles Eisenmann/Wikimedia Commons

ஒட்டக பெண்!

ஒட்டக பெண்!

அரியவகை எலும்பியல் கோளாறு காரணமாக இவரது கால்கள் பின்புறமாக திரும்பி இருந்தன. எல்லா ஹார்பர் எனும் இவரை ஒட்டக பெண் என அழைத்து வந்தனர். நட்சத்திர விழாவிற்கு சென்று வர இவருக்கு வாரத்திற்கு இருநூறு டாலர்கள் சம்பளமாக அளித்து வந்தனர்.

Image Credit: Wikimedia Commons

விசித்திரன்!

விசித்திரன்!

மிரின் டாஜோ எனும் இவர் மருத்துவ உலகை வியக்க வைத்தவர். உடலில் காயம் உண்டாகாமல் எந்த வகையான பொருளாலும் குத்திக் கொள்ள முடியும் நிலையில் இவர் வாழ்ந்து வந்தார். ஆனால், ஒரு முறை ஊசியை விழுங்க முயற்சித்து இறந்து போனார்.

Image Credit: Phil Coppens/Wikimedia Commons

மேடம் கச்டிகா!

மேடம் கச்டிகா!

டக்பில் பழங்குடி சேர்ந்த மேடம் கச்டிகா இதழில் பெரிய தட்டை சொருகி, பைப் மூலம் புகைத்துக் கொண்டிருக்கிறார்.

Image Credit: Wikimedia Commons

பாதி உடல்!

பாதி உடல்!

பிறக்கும் போதே கீழ் உடல் இன்றி பிறந்த ஜானி எக். இவர் சில படங்களில் நடித்துள்ளார். உலக பிரபல திரைப்படமான டார்சான் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Image Credit: Wikimedia Commons

குக்கூ பறவை!

குக்கூ பறவை!

மின்னி வூல்ஸ்லே எனும் இவர் குக்கூ பறவை என அழைக்கப்பட்டு வந்த நபர். இவருக்கு ஏற்பட்ட Seckel எனும் நோய் தாக்கம் காரணமாக இவருக்கு மன மற்றும் உடல் ரீதியான கோளாறு இருந்தது. இவருக்கு பற்கள் இல்லை, முடிகள் இல்லை.

Image Credit: Wikimedia Commons

இரண்டு தலை மனிதன்!

இரண்டு தலை மனிதன்!

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு தலை மெக்ஸிகன் இவரது பெயர் பாச்குவல் பினான். தலையில் இருந்து வெளியே வளர துவங்கிய பெரிய கட்டியை வாக்ஸிங் மற்றும் அலங்காரம் செய்து இரண்டு தலை பல காட்டிக் வந்துள்ளார்.

Image Credit: Wikimedia Commons

காங்கிரஸ் ஆப் ப்ரீக் குழு!

காங்கிரஸ் ஆப் ப்ரீக் குழு!

1924ல் தி ரிங்க்ளிங் சகோதரர்கள் " காங்கிரஸ் ஆப் ப்ரீக் உறுபினர்களின் குழு புகைப்படம்.

Image Credit: Edward J. Kelty/Wikimedia Commons

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Haunting Photos From The Tragic “Freak Shows” Of Decades Past!

Haunting Photos From The Tragic “Freak Shows” Of Decades Past!
Subscribe Newsletter