தமிழக முதல்வராகப் போகும் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழக அரசியலில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை யார் தமிழக முதல்வராவார் என்ற கேள்வியுடன் பரபரப்பாக இருந்த தமிழகத்திற்கு முடிவு வந்துவிட்டது. இதுவரை நம்மில் பலரும் ஓ.பன்னீர் செல்வம் அல்லது சசிகலா தான் முதல்வராவர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் சசிகலா 4 வருட சிறை தண்டனையைப் பெற்ற பின், அரசியலில் 10 வருடம் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பு வந்த பின்பு, பலரும் ஓ.பன்னீர் செல்வம் தான் முதல்வராவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, புதிதாக தமிழக ஆளுநர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துள்ளார்.

தமிழக முதல்வராகப் போகும் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றிய சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகரில் உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 63 வயதாகிறது. இவர் 1980ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.

தகவல் #2

தகவல் #2

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 4 முறை எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தகவல் #3

தகவல் #3

எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், ஜெயலலிதா அதிமுக-வில் பயணம் மேற்கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவர்.

தகவல் #4

தகவல் #4

கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா அவர்கள் வலுவாக இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஓர் காரணம். ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

தகவல் #5

தகவல் #5

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மாற்றப்பட்ட போதிலும், ஒருபோதும் மாற்றப்படாத அமைச்சர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவராவார்.

தகவல் #6

தகவல் #6

ஜெயலலிதாவின் நம்பத்தகுந்த விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அவரது மறைவுக்குப் பின் முதல்வர் பதவியை சசிகலா தான் ஏற்க வேண்டும் என்று முதலில் கூறியவரும் இவரே.

தகவல் #7

தகவல் #7

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Edappadi Palanisamy To Be Tamil Nadu Chief Minister: Things You Should Know About Him

Here are some things to know about Edappadi Palanisamy who is set to become the next chief minister of Tamil Nadu. Read on to know more...
Story first published: Thursday, February 16, 2017, 14:43 [IST]
Subscribe Newsletter