இங்கல்லாம் தீபாவளியை எப்படி கொண்டாடறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா? இதப் படிங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வருட தொடக்கத்தில் காலெண்டர் வந்தவுடன் நாம் பார்க்கும் முக்கியமான விஷயம், தீபாவளி என்று வருகிறது என்பதும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதும் தான். அந்த அளவிற்கு தீபாவளி என்பது நம் எல்லோருக்கும் பிடித்த ஒரு பண்டிகை.

காலையில் எழுந்து எண்ணெய் குளியல், பிறகு புத்தாடை, பல விதமான பலகாரங்கள் , பட்டாசு , புது படம் அல்லது டீவியில் ஒளிபரப்பப்படும், இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.... ஏதாவது ஒரு சூப்பர்ஹிட் படம்.

Different types of Diwali celebration in India

இப்படி இனிதே தொடங்கி இனிதே முடியும் தீபாவளி மறுமுறை அடுத்த வருடம் எப்போது வரும் என்ற ஆவலை நம்மிடம் விட்டு செல்லும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை சந்தோஷமாக கொண்டாடும் ஒரு பண்டிகை இந்த தீபாவளி.

இந்த பண்டிகை உலகம் முழுதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றனது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல்வேறு முறையில் இது கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள், நரகாசுரன் அழிந்ததை கொண்டாடும் நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

வட இந்தியாவில் , ராமர் 14 வருடம் காட்டுக்கு சென்று திரும்பி , அயோத்தி மாநகர் வரும் நாளில், மக்கள் அனைவரும் விளக்கு ஓளியால் நகரை அலங்கரித்து வைத்திருந்ததாகவும் அந்த நாளை தீபாவளி என்று வழங்குவதாகவும் கூறுவர். சில இடங்களில், காளி தேவியின் அருளை பெறுவதற்காகவும் தீபாவளியின் போது விரதம் இருந்து பூஜைகள் செய்வதுண்டு.

இதுபோல், பல்வேறு இடங்களில் தீபாவளியை கொண்டாடும் விதத்தை பற்றி அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காளி பூஜை, மேற்கு வங்காளம் :

காளி பூஜை, மேற்கு வங்காளம் :

துர்க்கையின் அவதாரமான மஹா காளியின் வருகையை கொண்டாடும் விதமாக கிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.

பெங்காலிகள் மூன்று நாட்கள் காளியை நினைத்து பூஜை செய்து, வீட்டில் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து, உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சில இடங்களில் விலங்குகளை பலியாக கொடுத்து கடவுளை வணங்குவர். லட்சுமியின் அருளை பெற்று வசதி பெறுக, விரதம் இருந்து வழிபடுவர்.

அகம்பாகிஷ் :

அகம்பாகிஷ் :

அகம்பாகிஷ் என்ற ஒரு பிரபல குருக்கள், மஹா காளியை வழிபடுவதற்கு முன் ஒரு புனித சடங்கை நிகழ்த்துவார். இடுகாட்டில், சுற்றி அமர்ந்து, மனித மண்டை ஓடுகளில் இரத்தத்தை வைத்து பூஜை நடக்கும். மேற்கு வங்காளத்தில் கிராம பகுதிகளில் இந்த முறையை பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹௌரா, மிட்னாபூர் மற்றும் ஹூக்ளியில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

தியாரி , சிந்தி :

தியாரி , சிந்தி :

சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் தீபாவளி சற்றே வித்தியாசமானது. இந்த பூஜையில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை காய்ச்சாத பாலில் கழுவி விட்டு பூஜையில் வைத்து வழிபடுவர்.

பூஜை முடிந்த பின் அந்த நாணயத்தில் ஒன்றை எடுத்து அவர்கள் பற்களில் தட்டி, "லட்சுமி ஆயி, தனத் வாய் " என்ற மந்திரத்தை கூறுவர். அதற்கு அர்த்தம், "லட்சுமி வந்துவிட்டாள், ஏழ்மை தொலைந்தது" என்பதாகும். இந்த நாளில் அவர்கள் வீட்டை சுத்தப்படுத்த துடைப்பத்தை பயன்படுத்துவதில்லை. அன்று இரவு முழுதும் லக்ஷ்மியின் வருகைக்காக வீட்டை திறந்தே வைத்திருப்பர்.

பலி ப்ரதிபாதா :

பலி ப்ரதிபாதா :

தீபாவளிக்கு மூன்றாவது நாளாக வட இந்தியா முழுதும் இது கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் புராணத்தில், மன்னன் மகாபலியின் ஒரு நாள் வருகைக்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவின் 5வது அவதாரமான வாமன அவதாரத்தில், அவர் மஹாபலி மன்னனை அழிப்பார். மஹாபலி சிறந்த விஷ்ணு பக்தன் ஆனதால், அவர்மேல் பரிதாபப்பட்டு, வருடத்திற்கு ஒரு நாள் பலி இந்த பூலோகத்தை தரிசிக்கலாம் என்று வரம் தருகிறார்.

கௌரியா கத்தி , ஒடிஷா :

கௌரியா கத்தி , ஒடிஷா :

இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரத்தை கொண்ட மாநிலத்தில் ஒன்று ஒடிஷா அவர்கள் தீபாவளியை கொண்டாடும் விதமும் வித்தியாசமானது. கௌரியா கத்தி அன்று ஒடிஷா மக்கள், சணல் குச்சிகளை எரித்து, அவர்களின் முன்னோர்களை வரவேற்பர். இறந்த அவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தில் இருந்து அந்த நாளில் அவர்களை தேடி வருவதாக அவர்களின் ஐதீகம்.

திவாலி , திரினிடாட் :

திவாலி , திரினிடாட் :

19வது நூற்றாண்டின் இறுதியில், 1,43,000 மக்கள் ஒடிஷா மற்றும் பீஹாரில் இருந்து கரும்பு சாகுபடிக்காக அடிமைகளாக ட்ரினிடாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டு அந்த நாட்டு மக்களுடன் இணைந்திருக்க தொடங்கினர்.

அந்த நாட்டு மக்கள், இந்திய மக்களின் கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்கத் தொடங்கினர். 1966ல் டிரினிடாட் அரசு, தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது. இந்த நாட்டில் மட்டும் தான் தீபாவளி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

 இந்தியா தவிர்த்து நேபால்:

இந்தியா தவிர்த்து நேபால்:

நேபாளில் தீபாவளி, திஹார் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியர்களை விட முற்றிலும் வித்தியாசமான முறையில் இங்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்கு லக்ஷ்மியை தான் வழிபடுகின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. முதல் நாளில் பசுக்களுக்கு அரிசி வழங்கப்படும் , இரண்டாவது நாளில் நாய்களுக்கு என்று ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

பல தலைமுறையாக இந்தியர்கள் பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருவதால் தீபாவளி உலகஅளவில் பல நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக உள்ளது. மொரிஷியஸ் , நேபால், மலேஷியா , இந்தோனேசியா , ஜப்பான், இலங்கை , தாய்லாந்து, தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , பிஜி போன்ற இடங்களில் இந்தியர்கள் வாழ்ந்து வருவதால் இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different types of Diwali celebration in India

Different types of Diwali celebration in India
Story first published: Wednesday, October 18, 2017, 11:30 [IST]
Subscribe Newsletter