For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் மிகவும் ஆபத்தான ரயில் பயணம் இங்கதானாம்!!

உலகில் மிகவும் ஆபத்தான ரயில் பயணம்

|

பயணம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக ரயில் பயணங்கள் பல அனுபவங்களை நமக்கு பரிசளிக்கும் என்று கூட சொல்லலாம். அனுபவங்களை பரிசளித்திடும் ரயில் பயணங்களில் மிகவும் ஆபத்தான ரயில் பயணம் குறித்த சில படங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவில் இருக்கும் குரண்டீஸ் மற்றும் கைரன்ஸ் இடங்களுக்கு இடையே 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த ரயில்வே பாலம். பாரம்பரியமிக்க இந்த ரயில் பாதை முழுவதும் ஒரு பக்கம் தண்ணீர் அருவி கொட்டும் அதுமட்டுமல்லாம் ரயில் பாலம் அமைந்திருக்கும் இடம் ஓர் மழைக்காடு!

Image Courtesy

இந்தோனேசியா :

இந்தோனேசியா :

இந்தோனேசியவில் உள்ள ஜகார்ட்டாவிலிருந்து பண்டங் வரையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. சுமார் மூன்று மணி நேர பயணம் மேற்கொள்ள வேண்டிய இந்த ரயில் தரையிலிருந்து மிகவும் உயராமாக இருக்கும். பயணிகள் ஆழமான பள்ளத்தாக்குகளை காணலாம். இந்தோனேசியாவில் இருக்கும் வானுயர்ந்த பாலம் வழியாக இந்த ரயில் செல்லும்.

Image Courtesy

அர்ஜன்டீனா :

அர்ஜன்டீனா :

வானத்து ரயில் என்று இதனை அழைக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 13850 அடி உயரத்தில் இந்த ரயில் பாலம் இருக்கிறது. லா பொல்வரில்லா எல்லையிலிருந்து வடக்கு அர்ஜன்டீனா வரையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. வழியில் 20 சுரங்கங்கள், 13 இன்னும் உயரமான பாலங்கள், பத்துக்கும் மேற்ப்பட்ட செங்குத்தான பாலம் என த்ரில்லிங்கான பயணத்திற்கு நிச்சயம் இது கியாரண்டி.

Image Courtesy

அலஸ்கா :

அலஸ்கா :

கடல் மட்டத்திலிருந்து 9000 அடி உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. 1898 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 20 மைல் தொலைவிற்கு கட்டப்பட்டிருக்கிறது.

Image Courtesy

இந்தியா :

இந்தியா :

இந்தியப் பெருங்கடலில் முழுவதும் கட்டப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் தடம் . 1.4 கிலோ மீட்டர் தொலைவிற்கும் முழுவதும் கடலிலேயே இருக்கும் ரயில் பாலம். இப்பகுதியை கடக்க சுமார் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும்.

Image Courtesy

ஜப்பான் :

ஜப்பான் :

ஆபத்தான ரயில்வே தடம் என்று இதனை எச்சரிக்கிறார்கள். இதற்கு காரணம், மினாமி வழித்தடத்தில் உயிருள்ள எரிமலை இருக்கிறது. ரயில் தண்டவாளத்திற்கு மிக அருகில் தான் அந்த எரிமைலை புகைந்து கொண்டிருக்கிறது. பயணிகள் அதனை பார்த்துக் கொண்டே தான் பயணிக்கின்றனர்!

Image Courtesy

தாய்லாந்து :

தாய்லாந்து :

டெத் ரயில்வே என்று இதனை அழைக்கிறார்கள். 1942 மற்றும் 43 ஆன் ஆண்டுகளில் தாய்லாந்தில் இருக்கும் பன்பாங் என்னும் இடத்திலிருந்து பர்மாவின் தன்பயுஜயாட் என்னும் இடம் வரையில் சுமார் 250 மைல் தொலைவிற்கு இந்த தண்டவாளத்தை கட்டியிருக்கிறார்கள். 16 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பாலத்தை போர் கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும் போது ஆயிரக்கணக்கான கைதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

க்ளோரடா:

க்ளோரடா:

ஜார்ஜ் டவுன் லூப் ரயில் பாதை க்ளோரடாவிற்கு வரும் சுற்றாலபயணிகளை கவரும் விதமாக அமைந்திருக்கிறது. மலையைக் குடைந்த கட்டப்பட்டிருக்கும் இந்த ரயில் தடத்தில் அந்தரத்தில் தொங்கும் பாலம், நடுநடுவே வரும் வளைவுகள் என பயணிகளை பயம் கொள்ளச் செய்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync travel
English summary

Dangerous Railway Tracks

Dangerous and Stunning Railway tracks around the world
Story first published: Monday, July 31, 2017, 13:44 [IST]
Desktop Bottom Promotion