உங்களோட இந்த பழக்கங்கள், எதிர்காலம் எப்படி இருக்கும்-ன்னு சொல்லும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஒருவரது எதிர்காலத்தை பல வழிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதில் ஒருவரது அன்றாட செயல் அல்லது பழக்கவழக்கங்கள் மூலம் அறிய முடியும்.

பொதுவாக ஒருவரது பழக்கவழக்கங்களானது குணங்களை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. அதாவது பழக்கவழக்கங்களைக் கொண்டு அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். பண்டைய காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஒருவரது பழக்கவழக்கங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த பழக்கவழக்கங்கள் நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் என்பது தெரியுமா?

இக்கட்டுரையில் ஒருவரது அன்றாட பழக்கவழக்கங்கள் எப்படி எதிர்காலத்தில் பெரும் பாதிப்பைக் கொண்டுள்ளன என்பதை விளக்கும். அதைப் படித்து தெரிந்து உங்களது எதிர்காலம் எவ்வளவு நன்றாக அல்லது கெட்டதாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு எடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

குளியலறையைப் பயன்படுத்தி விட்டு, அந்த குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அழுக்குத் துணிகளை அந்த அறையிலேயே அசிங்கமாகவும், அழுக்காகவும் வைத்திருந்தால், அது ஜாதகத்தில் உள்ள சந்திரனின் நிலையை பலவீனப்படுத்தி, தொழில் மற்றும் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

#2

#2

நடக்கும் போது தரையை தேய்த்தவாறு நடக்கும் பழக்கம் இருந்தால், அப்பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இப்படி தரையை தேய்த்துக் கொண்டே நடப்பது என்பது உங்கள் விதியைச் சுற்றி அழுக்கைக் கொண்டு வருவதைக் குறிக்கும். இப்பழக்கம் ராகு வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.

#3

#3

உணவு உண்ட பின், சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யாமல், அப்படியே எழுவார்கள். இப்பழக்கம் வாழ்வில் நிலையான வெற்றியை அடைய பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதைக் குறிக்கிறது. எனவே சாப்பிட்ட பிறகு அவ்விடத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் சனி மற்றும் சந்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

#4

#4

நாள் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், கை, கால், முகத்தைக் கழுவாமல் இருந்தால், அது வாழும் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதற்கு சமம். மேலும் இந்த செயலால் மன அழுத்தம் தான் அதிகரிக்கும். ஆகவே வீட்டில் நிம்மதியாக இருக்க நினைத்தால், கை, கால், முகத்தைக் கழுவுங்கள்.

#5

#5

தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதைவிட்டு தெய்வ சிலைகள் மற்றும் பூஜை அறை அசுத்தமாக இருந்தால், அது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி கல்வி, செல்வம், குடும்ப வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

#6

#6

இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே மாற்றுங்கள். ஏனெனில் தாமதமாக தூங்குவதால், அது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரித்து ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுவே இரவில் வேகமாக தூங்குவதன் மூலம், உடல் மற்றும் மனம் அமைதியடைந்து, உடலுறப்புகளுக்கு ஓய்வு கிடைத்து, மறுநாள் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செல்லும்.

 #7

#7

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு முதலில் குளிர்ந்த நீரைக் கொடுக்கும் பழக்கத்தைக் கொள்வதன் மூலம், விருந்தினர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் இப்பழக்கத்தால், விருந்தினர்களைச் சுற்றியுள்ள ஆற்றலால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கும். மேலும் இப்பழக்கத்தால் ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் காலஷர்ப தோஷத்தைப் போக்கும்.

#8

#8

காலணிகளை முறையாக அடுக்கி வைக்காமல், சிதற விட்டிருந்தால், அது வாழ்வில் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான தவறை இனிமேல் செய்யாதீர்கள்.

#9

#9

ஒருவரது வீட்டில் உள்ள சமையலறை அசிங்கமாக இருந்தால், அது ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தை எதிர்மறையாக இயங்க வழிவகுக்கும். ஆகவே இதை தவிர்க்க எப்போதும் வீட்டு சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

#10

#10

யார் ஒருவர் தினமும் செடிகளுக்கு நீரை ஊற்றுகிறார்களோ, அவர்கள் குடும்பம் மற்றும் காதல் வாழ்வில் எவ்வித பிரச்சனையையும் சந்திக்கமாட்டார்கள். ஏனெனில் இப்பழக்கமானது, அனைத்து வகையான தோஷங்களையும் நீக்குமாம்.

#11

#11

தூங்கி எழுந்த பின் படுக்கை அறையை சுத்தம் செய்யாமல் இருந்தால், அவர்களால் எந்த ஒரு செயலிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். இதனால் எதிலும் வெற்றி காண்பது என்பது முடியாமல் போகும். ஆகவே இதைத் தவிர்க்க படுக்கையில் இருந்து எழுந்ததும், தவறாமல் படுக்கை அறையை சுத்தம் செய்யுங்கள்.

#12

#12

மிகவும் சப்தமாகவும், அதிகமாகவும் பேசும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில் நீங்கள் சனி கிரகத்தின் ஆதிக்கத்தால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் உங்களுடைய வாழ்க்கை முழுவதும், உறவுகளை நல்ல வடிவத்தில் வைத்திருக்கவும், குடும்ப வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Habits That Tell How Good Or Bad Your Future Will Be

Habits are a mirror to our personality, which also sometimes serves as a non-verbal form of communication. Back in ancient times, people used this information of one’s habit to understand each other. But, did you know that these habits also tell us about how our future will be?
Story first published: Wednesday, December 20, 2017, 13:30 [IST]