உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழக அமைச்சர்களின் டாப் 5 எக்ஸலன்ட் சயின்ஸ் ட்ரிக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

வரவர தமிழக அரசும், அமைச்சர்களும் செய்யும் நடவடிக்கைகள் பலவன கார்டூன் நெட்வர்க்கை விட விழுந்து, விழுந்து சிரிக்கும்படியாக தான் இருக்கிறது. லோக்கல் சேனல் முதல் பிபிசி வரை வேர்ல்டு வைடு ஹிட் அடித்தது செல்லூர் ராஜூவின் தர்மாகோல் ட்ரிக் தான்.

Crazy Tricks That Has Been Implemented By Tamil Nadu Govts and Ministers in Emergency Situation!

ஆனால், இதற்கும் முன்னும், பின்னும் என நேற்று வரை பல முக்கியமான சூழலில், யாரும் யோசிக்க முடியாத வகையில் ஒரு பதில் கூறி அசத்திய தமிழக அரசு / அமைச்சர்களின் புத்திக் கூர்மையை விளக்கம் சிறிய தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாளி!

வாளி!

இந்தாண்டு துவக்கத்தில் ஜனவரி 28ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து எண்ணெய் கடலில் கொட்டியது. இதனை அகற்ற அரசாங்கம் அதிநவீன கருவியான வாளியை அளித்து அசத்தியது. ஆயிரக்கணக்கான மக்களும் காவற்படை வீரர்களும் வாளியை கொண்டு மொண்டு, மொண்டு ஊற்றினார்கள்.

புல்டோசர்!

புல்டோசர்!

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தேங்கிய நீரை அகற்ற புல்டோசர்கள் பயன்படுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சாதனையும் நமது அரசிற்கே சேரும். இந்த அரசை களைக்க தான் பலரும் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.

கரண்ட் கட்!

கரண்ட் கட்!

ஆங்காங்க உலக நாடுகளில் போராட்டம் பெரிதானால், மக்கள் மத்தியில் போராட்டத்தில் காட்டுத்தீ போல பரவினால் கண்ணீர் புகை குண்டுகள் வீசியோ, அதிரடி படையினரை பயனப்டுதியோ தான் போராட்டத்தை களைக்க பார்ப்பார்கள். ஆனால், மிக வித்தியாசமாக நமது அரசு கரண்ட் கட் செய்து, மக்கள் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகி, போராட்டத்தில் இருந்து களைந்து சென்று விடுவார்கள் கருதியது.

அல்டிமேட் தர்மாகோல்!

அல்டிமேட் தர்மாகோல்!

இதற்கெல்லாம் அல்டிமேட் வேற யாரு... நம்ம தர்மாக்கோல் அமைச்சர் செல்லூர் ராஜூ. நீர், வெப்பத்தின் காரணமாக ஆவியாவதை தடுக்க இவர் தர்மாக்கோல் பயன்படுத்தி அசத்தினார். முக்கியாமாக இரண்டு தர்மாகோல்களுக்கு நடுவே இவர் ஒட்டிய பிளாஸ்திரி, ஓசான் லேயரில் விழுந்த ஓட்டையை சிமெண்டு பூசி அடைத்துவிடலாம் என்ற ரகமாக அமைந்தது.

டெல்லிக் கொசுக்கள்!

டெல்லிக் கொசுக்கள்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு டெல்லி கொசுக்களே காரணம், நம்ம ஊர் கொசுக்கள் அப்பாவிகள். டெல்லி கொசுக்கள் ரயில் மூலமாக பயணித்து தமிழகத்தின் மீது டெங்கு பரவ காரணமாக இருக்கிறது என்ற செய்தியை பரப்பி மக்களின் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான அரசும் நமதரசே!

மக்கள் குளிக்கிறாங்க...

மக்கள் குளிக்கிறாங்க...

நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலந்திருக்கும் நிலையில், மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் கலந்ததாலேயே நுரை பொங்கியதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறிய கருத்து வேற லெவல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy Tricks That Has Been Implemented By Tamil Nadu Govts and Ministers in Emergency Situation!

Crazy Tricks That Has Been Implemented By Tamil Nadu Govts and Ministers in Emergency Situation!