For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரியாம கூட இந்த பேய் கிராமத்துக்கு போயிறாதீங்க.! போனா உயிரோட திரும்பி வரமாட்டீங்க!

கிராமத்திற்குள் சென்றவர்கள் உயிருடன் திரும்புவதில்லை

By Lakshmi
|

நாம் நிறைய பேய்களின் கதைகளை கேட்டிருக்கிறோம். ஒரு சிலர் பேய்கள் இல்லை என்றும், ஒரு சிலர் பேய்கள் பொய் என்றும் நம்புகிறார்கள். நாம் சில பேய் கதைகளில் இந்த ஊருக்குள் சென்றால் யாரும் உயிருடன் திரும்பமாட்டார்கள் என கேள்விப்பட்டிருப்போம்.

அந்த பேய் கதைகளை உண்மையாக்குவது போல இருக்கிறது இந்த செய்தி... ஆம்..! ரஷ்யாவில் இருக்கும் இந்த கிராமத்திற்குள் யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லையாம்!

இதை பற்றி பல அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி முடிவுகள்

ஆராய்ச்சி முடிவுகள்

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயம் பற்றி ஆராய்ச்சிகள் செய்து பார்த்ததில் உண்மையிலேயே இந்த கிராமத்திற்குள் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை என்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அமானுஷ்ய சக்தியாக கூட இருக்கலாம்.

இந்த கிராமம் எங்கு உள்ளது?

இந்த கிராமம் எங்கு உள்ளது?

இந்த கிராமம் ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். இது இறந்த மக்கள் மட்டுமே வாழ்கின்ற இடமாகும். இந்த கிராமம் 5 மலைகள் அமைந்துள்ள இடத்தில் உள்ளது. ஏராளமான குன்றுகள் இங்கே உள்ளது. மேலும் இந்த கிராமம் ஏராளமான பாறைகளின் மத்தியில் அழகாக அமைந்துள்ளது.

சென்றால் இறப்பு நிச்சயம்!

சென்றால் இறப்பு நிச்சயம்!

இந்த கிராமம் அழகாக இருந்தாலும் கூட, இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் தைரியமில்லை, இந்த கிராமத்திற்கு இன்னொரு பெயர் 'டெட் நகரம்' ஆகும். இங்கு ஏராளமான இறந்த உடல்கள் மட்டும் தான் உள்ளன. உள்ளூர் குடிமக்கள் தங்கள் உறவினர்களின் இறந்த உடல்களை இங்கு உள்ள குடிசைகளில் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

நிலத்தடிக்குள் மறைந்திருக்கும் கிராமம்

நிலத்தடிக்குள் மறைந்திருக்கும் கிராமம்

இந்த கிராமம் 5 உயரமான மலைகளுக்கு இடையில் அமைந்திருப்பதால், இந்த கிராமத்திற்கு செல்வது மிகவும் கடினமாக் இருக்கிறது. இந்த உயிரை பலிவாங்கும் கிராமத்தில் நிலத்தடிக்குள் எண்ணிலடங்கா கிராமங்கள் உள்ளன. மேலும் சில வீடுகளுக்கு நான்கு மாடிகள் கூட உள்ளன.

இறந்த உடல்கள்

இறந்த உடல்கள்

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் பல மாடிகளை கொண்டுள்ளன. இவற்றின் ஒவ்வொரு தளத்திலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் சுமார் 99 கட்டிடங்கள் உள்ளன. இங்கு இறந்த உடல்களை புதைக்கும் பழக்கம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இருக்கிறது.

உயிருடன் திரும்புவதில்லை

உயிருடன் திரும்புவதில்லை

இந்த குறிப்பிட்ட கிராமத்தின் மீது மக்களுக்கு பல நம்பிக்கைகள் உள்ளன. அந்த கட்டிடங்களுக்குச் செல்லும் மக்கள் உயிருடன் திரும்புவதில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே, இந்த நம்பிக்கை காரணமாக, இந்த கிராமத்தில் ஒரு சுற்றுலாத்தலமும் இல்லை. இங்கு செல்லாததற்கு மற்றுமொரு முக்கிய காரணம், இங்கு நிலவும் கடுமையான வானிலையாகும்.

கடுமையான நோய்

கடுமையான நோய்

18 ஆம் நூற்றாண்டில் வசித்த இவர்களது குடும்ப உறவினர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் பிற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இறக்கும் வரை அவர்கள் வேறு எங்கும் செல்லவில்லை. அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு அங்குள்ள பெரும்பான்மையானோர் நம்புகிறார்கள்.

எப்படி வாழ்கிறார்கள்?

எப்படி வாழ்கிறார்கள்?

இந்த இடம் மர்மங்கள் நிறைந்தது. இங்கு செல்வதே திகிலான அனுபவமாக இருக்கும். இந்த கிராம வாசிகளை பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. இப்போதும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

படகுகளுக்குள் இறந்த உடல்கள்

படகுகளுக்குள் இறந்த உடல்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கல்லறைக்கு அருகே படகுகளை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இறந்த உடல்கள் ஒரு படகு வடிவத்தில் இருந்த ஒரு மர பெட்டியில், புதைக்கப்பட்டிருந்தது என்று கூறுகிறார்கள். இந்த படகுகள் கடந்த காலத்தின் நம்பிக்கையாக இருந்தன, ஆன்மா சொர்க்கத்தை அடைவதற்கு இது உதவியதால், அவர்கள் ஒரு படகு-வடிவ பெட்டியில் புதைக்கப்பட்டனர்.

கிணற்றில் எரியப்படும் காசு

கிணற்றில் எரியப்படும் காசு

ஆய்வாளர்கள் ஒரு கிணற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இறந்தவர்கள் புதைக்கப்பட்ட பிறகு, உறவினர்கள் இந்த கிணற்றில் நாணயங்களை தூக்கி போடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு நாணயத்தின் அடிப்பகுதி மற்றொன்றில் மோதிக் கொண்டால், இறந்தவரின் ஆத்மா பரலோகத்தை அடைந்துவிடும் என்று கிராமவாசிகள் நம்புகிறார்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life world weird உலகம்
English summary

City of Dead Where Nobody Returns Alive

City of Dead Where Nobody Returns Alive
Desktop Bottom Promotion