For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை 300 ஆண்டுகள் ஆட்சி செய்த மாமன்னர் பற்றிய அதிசயிக்கத்தக்க 10 உண்மைகள்!

முகலாய பேரரசை நிறுவிய பேரரசர் பாபர் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் இங்கே கூறப்பட்டுள்ளது.

|

தந்தைவழி, தாய்வழி என இருபுறமும் பெரும் பேரரசு சந்ததி பின்பற்றி வந்த தம்பதிக்கு மகனாக பிறந்து இந்தியாவை 1526-1858 வரை முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட முகலாய பேரரசை இந்தியாவில் நிறுவிய பாபர் பற்றிய உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
| 1

| 1

பேரரசர் பாபரின் உண்மை பெயர் ஜாகிர் உத் - தின் முஹம்மது பாபர். பாபர் எனும் பெயர் பெர்சியன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் புலி என்பதாகும்.

Image Source

| 2

| 2

உமர் ஷேய்க் மிஸ்ராவின் முதல் மகன் தான் பாபர். இவரது தந்தை மாவீர பேரரசர் திமுர்-ன் நேரடி சந்ததி ஆவார். இவரது தாய் ஆசியாவை ஆண்ட செங்கிஸ்கானின் சந்ததி ஆவார்.

Image Source

| 3

| 3

1495-ல் பெர்கானா (தற்போதைய உஸ்பெகிஸ்தான்) அரியணை ஏறினார் பாபர். அப்போது இவரது வயது வெறும் 12. 1504-ல் காபூல் வெற்றிகண்டார்.

| 4

| 4

பாபரின் தாய்மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும். ஆனாலும் அவர் பாரசீக மொழியை சரளமாகப் பேசும் வல்லவராக இருந்தார். தன்னை துருக்கியர் என்றே பாபர் சொல்லிக் கொண்டார்.

| 5

| 5

பாபரின் முன்னோர் காலத்தில் தைமூர்கள் கீழே பஞ்சாப் (பாகிஸ்தானின் பஞ்சாப்) பகுதி இருந்தது. அதை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க தில்லி சுல்தானிடம் (இப்ராஹீம் லோடி) வேண்டினார். அவர் அதற்கு மறுக்கவே, சுல்தானின் உறவினரான அலாவுதீன் உதவியுடன் தில்லி சுல்தானை பானிபட் போரில் 1526-ல் ஒரு இலட்சம் வீரர்கள் படை கொண்டு எதிர்த்து போரிட்டு வெற்றிவாகை சூடினார். இதற்கு பாபரின் பீரங்கி படை மிகப்பெரும் உதவியாக இருந்தது.

| 6

| 6

பானிபட் வென்ற போதிலும், வட இந்தியாவின் பிற பகுதிகளான பீகார், வங்காளம் போன்றவை ஆப்கானியர் ஆட்சியின் கீழ் இருந்தன. குஜராத், மாளவமும் சுதந்திரமாக ராஜ புத்திரர்கள் வசம் இருந்தன.

ராஜப்புத்திர தலைவர் ராணாவுக்கும் பாபருக்கும் 1527ல் போர் நடந்தது. அதில் வெற்றி கண்டு மாளவத்தின் சந்தெரி என்ற வலிமையான கோட்டையை 1528ல் கைப்பற்றினார் பாபர்.

| 7

| 7

பழைய பகை கொண்டு இப்ராஹீம் லோடியின் இளம் சகோதரர் முகமது லோடி ஆப்கானியருடன் சேர்ந்து பீகாரில் கிளர்ச்சி ஏற்படுத்தி கோக்காரா நதிக்கரையில் 1529-ல் போர் செய்தனர். இவர்களையும் தோற்கடித்தார் பாபர். பிறகு நட்பால் பீகார் பகுதியை வங்காள அரசு பரிசாக கொடுத்தது.

| 8

| 8

பாபர் இந்தியாவை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆண்டார். இவருக்கு கல்வி மற்றும் இசையில் பெரியளவில் ஆர்வம் இருந்தது. தனது வரலாற்றி துருக்கி மொழியிலேயே பாபர் எழுதினார். இவரது ஆட்சியில் குற்றங்கள் குறைக்கப்பட்டனர். நீதி துறை வலிமையாக செயற்பட்டது. கோக்காரா போருக்கு பிறகு இவர் எந்த போரிலும் ஈடுப்படவில்லை.

| 9

| 9

தனது கடைசி நாட்களில் நோயால் அவதிப்பட்டு படுக்கையில் இறந்தார் பாபர். இவருக்கு பிறகு இவரது மகன் ஹுமாயூன் ஆட்சியை நடத்தினார். இவர் இந்தியாவை இழந்து மீண்டும் வெற்றி கண்டார். இப்படியாக முகலாய பேரரசு இந்தியாவை 1526-1858 வரை முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்டனர்.

| 10

| 10

இந்நாள் வரையும் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் இவரை ஒரு தேசிய ஹீரோவாக தான் பார்க்கின்றனர். இவரது பேரன் அக்பரால் இவரது சுயசரிதை பெர்சியன் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Babur, Who is the Founder of the Empire which Ruled India for Over 300 Years!

Babur, Who is the Founder of the Empire which Ruled India for Over 300 Years!
Desktop Bottom Promotion