‘எலும்பு’ காலுடன் தன்னம்பிக்கையில் வாழும் அதிசயப்பெண்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நோய்களில் புற்றுநோயும் ஒன்று, உயிரையே பறித்திடும் இந்நோயின் பிடியிலிருந்து பலரும் மீண்டு தன்னம்பிக்கை அளித்து வரும் நிலையில், வித்யாசமான முயற்சியாக புற்று நோய் பாதிக்கப்பட்டதால் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காலைக் கொண்டு ஒரு பெண் சமூக வலைதளங்களில் பிரபலமாகியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சுண்டு விரல் :

சுண்டு விரல் :

க்றிஸ்டி லாயல் என்ற பெண்ணுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு எபிதிலாய்ட் சர்கோமா ( epitheliod sarcoma) என்ற நோய் பாதிப்பு ஏற்ப்பட்டது, ஆரம்பத்தில் சுண்டு விரல் உணர்வற்றதாக உணர்ந்தார். பின்னர் அது மெல்ல பரவி 2011 முதல் 2014 வரையிலான நான்கு ஆண்டுகளில் பாதி கால் உணர்வற்றதாக மாறிவிட்டிருக்கிறது.

Image Courtesy

புற்றுநோய் :

புற்றுநோய் :

2015 ஆம் ஆண்டு நோய் பாதிப்பு ஏற்ப்பட்ட அதே வலது காலில் வீக்கம் ஏற்படவே தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்திருக்கிறார் கிறிஸ்டி. அப்போது தான் அவருக்கு புற்றுநோய் கடைசி கட்டத்தில் இருப்பதை கண்டறிந்தனர். உடலின் மற்ற பாகங்களிலும் புற்றுநோய் பரவாமல் தடுக்க, வலது காலை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவர்கள், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதற்கான ஆப்ரேஷனை செய்தனர்.

Image Courtesy

தனக்கே வேண்டும் :

தனக்கே வேண்டும் :

இதனையெடுத்து தன் உடலிலிருந்து நீக்கிய காலை தனக்கே கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விடுத்தார் க்றிஸ்டி. அதனை ஏற்ற மருத்துவக் குழு நீக்கப்பட்ட காலின் எலும்பை சுத்தம் செய்து, கெடாமல் இருக்க பூச்சுக்கள் அடித்து நினைவுப்பரிசாக கொடுத்தனர்.

Image Courtesy

இன்ஸ்டாகிராமில் போட்டோ :

இன்ஸ்டாகிராமில் போட்டோ :

இப்போது க்றிஸ்டி தினமும் தன்னுடைய கால் எலும்பை வைத்து விதவிதமாக போட்டோ எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் அப்லோட் செய்து வருகிறார். புற்றுநோயால் தன்னுடைய காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தான் மீண்டு வந்த கதையை வித்யாசமாக உணர்த்திக்கொண்டிருக்கும் க்றிஸ்டிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amputated Foot Makes Adventures

A woman whose foot was amputated due to cancer, uploads many adventure pictures of her amputated foot in her social media account
Story first published: Monday, July 24, 2017, 12:49 [IST]
Subscribe Newsletter